How can you arrange your drawing room pixabay.com
வீடு / குடும்பம்

விருந்தினர்களை கவர வைக்கும் Drawing ரூமுக்கான 10 சூப்பரான ஐடியாக்கள்!

வரவேற்பறை (Drawing Room) என்பது நம் வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்காக வடிவமைக்கப்படும் ஒரு அறை. விருந்தினர்களை வரவேற்று அவர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவதற்குதான் வரவேற்பறை.நமது வீட்டிற்குள் நாம் மற்றும் நமது குடும்பம் மட்டுமே இருப்போம் என்பதால் நமக்கு பிடித்த வகையில் வீட்டை பராமரிக்கலாம். ஆனால் வரவேற்பறை ஒரு பொழுதுபோக்குக்கான இடம் என்பதாலும் விருந்தினர்களின் கண்களைக் கவரும் வகையில் இருக்க வேண்டும் என்பதாலும் நாம் இதனை அழகாக வடிவமைப்பது மிகவும் அவசியம்.

பாரதி

மையசுவர்:

How can you arrange your drawing room

ரவேற்பையின் மையப்பகுதியில் உள்ள சுவரில் வெவ்வேறு நிறங்களில் பெயின்ட் அடிக்கலாம். இந்த இடம் விருந்தினர்கள் நுழைந்தவுடன் தெரியும் வகையில் இருப்பதால் அழகழகான வால்பேப்பர்கள் தேர்ந்தெடுத்து ஒட்டுவதும் நல்லது.

கண்கவர் ஓவியங்கள்

How can you arrange your drawing room

றையில் மையப்பகுதி இல்லாத சுவரில் உங்கள் குழந்தைகள் வரைந்த ஓவியங்கள் அல்லது உங்களுடைய வேலைப்பாடுகளை மாட்டி வைக்கலாம். உங்களுக்கு பிடித்த ஓவியங்களைக் கடையில் வாங்கியும் மாட்டலாம். இது விருந்தினர் கண்களைக் கவரும் வகையில் இருக்கும்.

செயற்கை செடிகள்:

How can you arrange your drawing room

ரவேற்பறையை மேலும் அழகுப்படுத்த செயற்கை செடிகளை மேஜை மீது அல்லது ஜன்னல் அருகே வைக்கலாம். இதற்கு நீங்கள் கற்றாழையும் பயன்படுத்தலாம். ஏனெனில் கற்றாழையை தினமும் பராமரிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

குறைந்த மரச்சாமாங்கள்:

How can you arrange your drawing room

றையை எளிய வகையில் அழகுப்படுத்துவது அவசியம். அதிகமான மேஜைகள், மரச்சாமான்கள் வைப்பதை தவிர்க்கவும். ஒரு நான்கு அல்லது ஐந்து பேர் அமர்வதற்கான மேஜை மற்றும் நடுவில் பொதுவாக ஒரு மேஜை மட்டும் வைத்துக்கொள்வது நல்லது. மேலும் சுவருக்கு ஏற்ற நிறத்தில் மரச்சாமன்கள் வைப்பது அழகாக இருக்கும்.

சுவரில் கண்ணாடி!

How can you arrange your drawing room

ரவேற்பறையில் கண்ணாடிப் பொருட்கள் வைப்பது இன்னும் அழகைக் கூட்டும். இது பார்ப்பதற்கு பழமை வாய்ந்த இடமாக இருப்பதுபோல் காண்பிக்கும். அழகான வடிவமைப்புகளுடன் இருக்கும் கண்ணாடியை சுவரில் மாற்றுவது, அந்த இடம் விசாலமாக இருப்பதுபோன்ற உணர்வைத் தரும்.

அறை முழுவதும் ஒரே நிறம்.

How can you arrange your drawing room

சுவருடைய நிறம், சோபா நிறம், மரச்சாமான்கள் நிறம் ஆகியவை ஒரே நிறத்தில் இருந்தால் தனித்துவமாக இருக்கும். மற்றும் அனைத்தையும் ஒரே நிறத்தில் வைத்துவிட்டு தலையணை மட்டும் வேறு நிறத்தில் வைக்கலாம்.

வெள்ளை நிற வரவேற்பறை.

How can you arrange your drawing room

ரு அழகான மற்றும் ஆடம்பரம் இல்லாத அறைக்கு வெள்ளை நிறத்தில் சுவர், வெள்ளை நிற சோபா, வெள்ளை நிற தலையணை, என அனைத்தும் வெள்ளை நிறத்தில் இருந்தால் அழகாக இருக்கும். இது கம்மியான செலவில் அழகுமிக்க அறையாக இருக்கும்.

எலெக்ட்ரிக் லைட்ஸ்:

How can you arrange your drawing room

சிறிய அறையில் மேற்கூரையில் மாட்டப்படும் பெரிய அலங்கார விளக்கைத் தவிர்க்கவும். அதற்கு பதிலாக சுவரில் மாட்டப்படும் எலெக்ட்ரிக் லைட் வாங்கி மாட்டுவது நல்லது. பெரிய அறையாயின் மேற் கூரையில் சிறிய அலங்கார விளக்கு பயன்படுத்தலாம்.

சிறிய செல்ஃப்:

How can you arrange your drawing room

றையில் கம்மியான அளவு செல்ஃப் வைக்க வேண்டியது அவசியம். இதில் அதிகமான பொருட்களை வைக்காமல். உங்களுடைய விருதுகள், கோப்பைகள் அல்லது சில அலங்கார சிறிய அளவு சிலைகள் வைப்பது நல்லது.

தனித்துவம் வாய்ந்த அறை:

How can you arrange your drawing room

ருப்பு மேஜைகள் , மரச்சாமான்கள் வைத்து சுவரில் வெள்ளை நிறம் அடிப்பது ஒரு தனித்துவமான அழகைத்தரும் . அதேபோல் வெள்ளை நிற சுவரில் மரப் பலகை, மரக் கதவு, மரச்சாமான்கள் வைப்பது அழகான வரவேற்பறையாக இருக்கும். இது கொஞ்சம் அதிக செலவாகும். ஆனால் அந்த அளவுக்கு அழகுமிக்கையாகவும் இருக்கும்.

மன அமைதி தரும் பாத்ரூம் - ஆய்வு கூறும் செய்தி! தவறுதலாக நினைக்க வேண்டாம்...

WhatsApp-ல் திருமண அழைப்பிதழ் வந்தால் தெரியாமல் கூட திறந்துடாதீங்க! 

ஆண்களின் Sperm Count அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்!

சோயா பனீர் பிரியாணி செய்யலாம் வாங்க! 

காஃபின் கலந்திருக்கும் காபி தெரியும்; ‘டீகாஃப்’ என்றால் என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT