How to banish negative thoughts from the mind https://tamil.boldsky.com
வீடு / குடும்பம்

மனதின் எதிர்மறை எண்ணங்களை விரட்டுவது எப்படி?

கே.எஸ்.கிருஷ்ணவேனி

மக்குத் தெரியாமலேயே கொஞ்சம் கொஞ்சமாக நமது மனதில் எதிர்மறை எண்ணங்களை வளர விட்டிருப்போம். அவற்றை ஆரம்பத்திலேயே கிள்ளி எறியாமல் விட்டால் ஆக்டோபஸ் போல் நம்மை முழுமையாக ஆக்கிரமித்து விடும். அப்படி மனதில் ஏற்படும் எதிர்மறை எண்ணங்களை விரட்டுவதற்கான வழிகளை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1. எந்தப் பிரச்னைகள் வந்தாலும் மனம் தளராமல் போராட கற்றுக்கொள்ள வேண்டும். எதற்கும் உடைந்து போகக்கூடாது. இது தற்காலிகமானது, இதை நம்மால் கடந்துபோக முடியும் என எண்ணுவது மிகவும் முக்கியம்.

2. உடல் நலம் போல், மன நலனும் மிகவும் முக்கியம். எந்நேரமும் எதையாவது சிந்தித்துக்கொண்டு, ‘அன்று அப்படிச் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ, இப்படி செய்திருக்கலாமோ’ என எண்ணி குழம்பிக்கொண்டே இருப்பது மனதுக்கு மட்டுமல்ல, உடலுக்கும் நல்லதல்ல.

3. மன ரீதியான அழுத்தம் இல்லாத வாழ்க்கையை ஏற்படுத்திக்கொள்ள முயற்சிக்க வேண்டும். தேவையற்ற சிந்தனைகள் மனச்சோர்வு, மன நோய் ஏற்பட வழி வகுக்கும்.

4. மன அழுத்தம், பதற்றம் போன்றவை நம் உடலின் செயல்பாடுகளில் தாக்கத்தை உண்டாக்கி, நம் மனம் கட்டுக்குள் இல்லாமல் அலைபாயும். இதற்கு நம் மனதை, சிந்தனையை கட்டுப்படுத்துவது அவசியம். இதற்கு தியானம் மிகவும் உதவும். தியானம் செய்வதால் மனம் ஒருநிலைப்படும்.

5. மன பதற்றம், மன அழுத்தம் ஏற்படும் சமயங்களில் சற்று நேரம் அமைதியாக அமர்ந்து மூச்சை ஆழமாக உள்ளிழுத்து வெளியே விடுவது நல்ல பலனைத் தரும். தியானம் செய்வதும், அமைதியான சூழலில் அமர்ந்து நமக்கு மகிழ்ச்சி தரும் நிகழ்வுகளை நினைத்துப் பார்ப்பதும் நல்லது.

6. மனதுக்குப் பிடித்த விஷயங்களைச் செய்யலாம். மனதில் தோன்றும் வேண்டாத எண்ணங்களை மாற்ற நம் கவனத்தை வேறு விஷயங்களில் கொண்டு செல்லலாம். நமக்குப் பிடித்த புத்தகம் படிப்பது, படம் பார்ப்பது, நகைச்சுவை நிகழ்ச்சிகளை கண்டு களிப்பது, இனிமையான பாடல்களை கேட்பது என பிடித்த விஷயங்களில் கவனம் சென்றால் எதிர்மறை எண்ணங்கள் தோன்றாது.

7. கைகளை வீசிக்கொண்டு ஒரு நீண்ட வாக் (நடை) நடந்து பாருங்கள். இதனால் நம் மனம் லேசாகும்.

8. நம் மனதை காயப்படுத்திய நிகழ்வுகளை நினைத்துப் பார்க்காமல் இருப்பது நல்லது. அப்படியும் அவை நம் மனக்கண் முன் வந்தால் அதனை புறந்தள்ளி விட்டு ஒரு நல்ல காப்பி அல்லது டீயோடு பிடித்த நண்பருடன் கைபேசியில் உரையாடலாம் அல்லது தொலைக்காட்சியில் நல்ல நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம்.

9. மனதுக்குப் பிடித்த வேலையை செய்யும்போது எதிர்மறை எண்ணங்கள் தோன்றாது. ஓவியம் வரைவது, துணிகளை மெஷினில் போடாமல் கையால் துவைப்பது, சமைப்பது, நண்பர்களுடன் மனம் விட்டுப் பேசுவது போன்றவை செய்ய, மனம் தெளிவடையும்.

10. பயணங்கள் எப்பொழுதுமே மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கும். தினசரி வாழ்க்கையில் இருந்து சற்று வேறுபட்டு செல்ல மனம் சலிப்படையாமல் புது விஷயங்களில் மனம் ஒன்றி உற்சாகம் ஏற்படும்.

11. நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, ஒரு லாங் டிரைவ் போவது ஆகியவை எப்போழுதும் நம் மனதை உற்சாகமாக வைத்துக்கொள்ள உதவும்.

12. எதைக் கண்டும் துவளாத மனம், எண்ண குதிரையை அதிகம் ஓட விடாமல் இருப்பது, மனக் குழப்பத்தை தவிர்ப்பது இவற்றோடு புதுப்புது விஷயங்களை கற்றுக்கொள்வதன் மூலம் மனம் ஆரோக்கியமாகவும் வேண்டாத சிந்தனைகள் அற்றதாகவும் இருக்கும்.

13. நல்ல தூக்கம், சத்தான உணவு ஆகியவை நம்மை புத்துணர்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் வைத்திருக்கும்.

14. உடல் நலத்துடன் மனநலமும் சிறப்பாக இருந்தால் நம்மால் எதையும் சாதிக்க முடியும்.

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT