sarcopenia Problem 
வீடு / குடும்பம்

50 வயதுக்கு மேற்பட்டவர்களை பாதிக்கும் சர்கோபீனியா பிரச்னையை சமாளிப்பது எப்படி?

சேலம் சுபா

யதானவர்களுக்கு ஏற்படும் முதல் கவலையே, ‘தாங்கள் எங்கேனும் விழுந்து விடுவோமோ அல்லது தசை பிடிப்புகள் ஏதேனும் ஏற்படுமோ’ என்பதுதான். இயற்கையாகவே முதுமையில் நமது தசைகளும் உடல் இயக்கமும் வெகுவாக குறைந்து விடுவது இயற்கையானது. இந்த பாதிப்பையே மருத்துவ உலகம் ‘சர்கோபீனியா’ என்கிறது. இந்தப் பிரச்னைக்கு தீர்வுதான் என்ன என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

சர்கோபீனியா (sarcopenia) என்பது இயற்கையான வயது முதிர்வால் முதன்மையாக ஏற்படும் தசைச் சிதைவு வகையாகும். உடல் ரீதியாக செயலற்ற நிலையில் இருப்பது மற்றும் ஆரோக்கியமற்ற உணவை சாப்பிடுவது ஆகியவை இந்த பாதிப்பின் அடிப்படை என்கின்றனர் விஞ்ஞானிகள். ‘முதுமை தவிர, செயலற்ற தன்மை, உடற்பயிற்சியின்மை மற்றும் மோசமான ஊட்டச்சத்து ஆகியவையும் ஒரு நபரின் சர்கோபீனியா அபாயத்தை அதிகரிக்கின்றன’ என்கின்றனர்.

இது தசை நிறை, வலிமை, இணை நோய்கள், ஊட்டச்சத்து மற்றும் செயல்திறன் ஆகியவற்றைப் பொறுத்து வயதுக்கு ஏற்ப மாறுபடும். இதனால் பாதிக்கப்படுபவர்கள் உடல் பலவீனமான  செயல்பாட்டுடன் நடப்பதில் சிரமம், மெதுவான நடை வேகம், கனமான பொருட்களை எடுத்துச் செல்வதிலும் தூக்குவதிலும் சிரமம், படிக்கட்டுகளில் ஏறுவதில் சிரமம், வலுவற்ற தசையினால் வீழ்தல் போன்ற அறிகுறிகளைக் காண்பார்கள்.

இயற்கை தரும் பாதிப்பு என்பதால் சர்கோபீனியாவை குணப்படுத்த எந்த மருந்தும் இல்லை. ஆனால், சில சப்ளிமெண்ட்ஸ் உதவக்கூடும்.  ​​புரதம், அமினோ அமிலங்கள், மீன் எண்ணெய், வைட்டமின் டி, செலினியம், மெக்னீசியம் மற்றும் ஒமேகா 3 சப்ளிமெண்ட்ஸ்களை தவறாமல் எடுத்து வந்தால் தசை இழப்பைத் தடுக்க முடியும். முக்கியமாக, தகுந்த உடற்பயிற்சியுடன் இணைந்து எடுக்கப்படும் சமச்சீர் சப்ளிமெண்ட்ஸ் இந்த பாதிப்பை குறைக்கும் வாய்ப்பு உண்டு.

வயது ஏற ஏற நடைப்பயிற்சி மீதான கவனம் அதிகம் வேண்டும். நடை வேகம் மாறாமல் இருக்கும்போது, ​​அது ஆரோக்கியமான உடல் அமைப்பைப் பராமரிப்பது மட்டுமல்லாமல், தசைச் சுருக்கத்தில் நேர்மறையான மாற்றங்களையும் ஏற்படுத்துகிறது. இது சர்கோபீனியாவை மெதுவாக்கும் ஒரு வழியாகும். நடைப்பயிற்சி மேம்பட்ட தசைச் சுருக்கம் மூலம் வயதானவர்களில் இம்யூனோசைட் செயல்பாட்டையும்  மேம்படுத்தலாம். இதனால் நீங்கள் இழந்த வலிமையை மீண்டும் பெறலாம் மற்றும் சில தசைகளை மீண்டும் உருவாக்கலாம்.  நடைப்பயிற்சி மற்றும் உடல் வலிமை பயிற்சிகளை பெறுமுன் உங்கள் வயது மற்றும் பிற உடல்நலம் சார்ந்த பாதிப்பை எச்சரிக்கையுடன் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வீட்டில் முதியவர்கள் இருந்தால் அவர்களின் உணவு, பயிற்சி மற்றும் ஆரோக்கியம் சார்ந்தவற்றில் அதிக கவனம் எடுத்துக் கொண்டு சர்கோபீனியா பாதிப்பிலிருந்து அவர்களைப் பாதுகாப்பது நமது கடமை.

அது என்னது One Pot ரசம்? வாங்க தெரிஞ்சுக்கலாம்!

Sanitary Pad Vs Tampon: எதைப் பயன்படுத்துவது ஆரோக்கியம் தெரியுமா?

உள்ளத்து உணர்ச்சிகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் உதடு மொழி பற்றி தெரியுமா?

சிறுகதை: அம்மாவும் தம்பியும்!

பண்டிகை நாட்களில் முகம் ஜொலிக்க சில டிப்ஸ்!

SCROLL FOR NEXT