4 types of food to avoid in rainy season 
வீடு / குடும்பம்

இந்த 4 வகை உணவுகளைத் தவிர்த்தால் மழைக்காலமும் வசந்தகாலம்தான்!

கவிதா பாலாஜிகணேஷ்

ழைக்காலம் தொடங்கி விட்டது. இனி, அனைத்து விஷயங்களிலும் எல்லோரும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். அதிலும் குறிப்பாக, உணவு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தே கிடையாது.

நாம் சாப்பிடும் உணவுதான் நமக்கு சக்தியை தரும். அதேபோல் சங்கடங்களையும் தரும். அதனால் சங்கடங்கள் தரும் உணவுகளை கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு, சத்துள்ள உணவுகளை சாப்பிடலாம். மழைக்காலம் முடியும் வரை இந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ள நான்கு வகையான உணவுகளை தவிர்த்தால் மழைக்காலமும் உங்களுக்கு வசந்த காலமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

மழைக்காலத்தில் நாம் உண்ணும் உணவில் அலட்சியம் காட்டும்பொழுதுதான் நமக்கு வியாதிகள் வருகின்றன. ஆகையால், மழைக்காலத்தில் நாம் உண்ணும் உணவில் மிகவும் கவனமாக இருப்போம்.

வறுத்த மற்றும் எண்ணெய் உணவுகள்: மழைக்காலத்தில் தவிர்க்க வேண்டிய முதல் விஷயம் தெரு உணவுகள். தெரு உணவின் பிரச்னை தயாரிப்பு செயல்முறை. இந்தத் தின்பண்டங்கள் கவர்ச்சிகரமானவை. ஆனால், எப்போதும் ஆரோக்கியமானவை அல்ல. இந்த உணவுகளைத் தயாரிக்கும்போது சில விற்பனையாளர்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவதில்லை. இதனால் பல உடல்நலப் பிரச்னைகள் ஏற்படுகின்றன.

காரமான உணவுகள்: பருவ மழையின்போது உண்ணும் உணவில் சேர்க்கப்படும் அதிகப்படியான மாசாலாக்கள் உணவு செரிமானத்துக்கு அத்தனை நன்மை செய்வதில்லை. மழைக்காலத்தில் உங்கள் உடலின் செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டுமென்றால், காரமான உணவுகளை உண்ணும் உங்களது ஆசையை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும்.

அதிகப்படியான உப்பு: எந்த உணவுத் தயாரிப்பிலும் உப்பு முக்கியப் பொருளாகும். மழைக்காலத்தில் நாம் எடுத்துக்கொள்ளும் அனைத்து உணவுகளிலும் உப்பை சற்று குறைத்தே உண்பது உடலுக்கு நல்லதாகும். பொதுவாக, மழைக்காலம் மட்டுமின்றி அனைத்துப் பருவ காலங்களிலும் உண்ணும் உணவில் உப்பை கொஞ்சம் குறைவாகவே சேர்த்துக் கொள்வது உடல் நலத்துக்கு சிறப்பு.

கடல் உணவு: கடல் உணவுகளை விரும்பி உண்பவர்கள் மழைக்காலத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். இது ஜூசி இறால் மற்றும் கணவாய் மீன்களின் இனப்பெருக்க காலம். மழைக்காலத்தில் கடல் உணவுகளும் மாசுபடும் என்பதை பெரும்பாலான மக்கள் புரிந்து கொள்ளவில்லை. அதனால்தான் மழைக்காலத்தில் கடல் உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

மேற்கண்ட உணவு வகைகளை மழைக்காலத்தில் தவிர்த்து அல்லது குறைத்து உண்டு ஆரோக்கியமாக வாழ்வோம்.

Spider Man கதாபாத்திரத்தின் தலைசிறந்த 10 ஊக்கமூட்டும் பொன்மொழிகள்! 

Direct-to-Cell செயற்கைக்கோள் இணைப்பு: புதிய யுகத்தின் தொடக்கம்! 

உங்கள் வீட்டில் சிறிய குழந்தைகள் இருக்கிறதா? அப்படியென்றால் இதுபோன்ற செடிகளை வளர்க்காதீர்கள்!

திருக்கண்ணபுரம் முனையதரையன் பொங்கல் பிரசாதம் உருவான வரலாறு!

கதிரியக்க மாசுக்களும் அதனால் ஏற்படும் விளைவுகளும்!

SCROLL FOR NEXT