Inverter 
வீடு / குடும்பம்

இன்வெர்டர் செயல்பாடும், பழுதுபடுதலும் மற்றும் பராமரிப்பு முறைகளும்!

கலைமதி சிவகுரு

மின்சாரம் உள்ளபோது மின் சக்தியை பேட்டரியில் சேமித்து, மின்சாரம் இல்லாதபோது அந்த பேட்டரியில் சேமித்த சக்தியை பயன்படுத்தி மின் சாதனங்கள் இயக்கப்படுகின்றன. இங்கு இரண்டு விதமான சக்தி மாற்றங்கள் நிகழ்கின்றன. முதலில் மின் சக்தியில் இருந்து பேட்டரியில் கெமிக்கல் சக்தியாகவும், பிறகு கெமிக்கல் சக்தியில் இருந்து மின் சக்தியாகவும் மாற்றப்படுகிறது. ஒவ்வொரு மாற்றம் நிகழும்போதும் 100 சதவீதம் மாற்றம் அடையாது. சிறிது சக்தி இழப்பு ஏற்படும்.

மின்தடையின்போது 10 யூனிட் அளவு மின்சாரம் பயன்படுத்தும் போது பேட்டரியில் இருந்து சுமார் 12 யூனிட் அளவிலான கெமிக்கல் சக்தி 10 யூனிட் மின் சக்தியாக மாற்றப்படும். மின்சாரம் மீண்டும் வரும்போது பேட்டரி இழந்த 12 யூனிட் அளவு கெமிக்கல் சக்தியை மீண்டும் ஏற்ற சுமார் 14 யூனிட் அளவிலான மின் சக்தி எடுத்துக் கொள்ளப்படும்.

மின்தடை ஏற்படாமல் இருக்கும்போது எடுக்கும் 10 யூனிட் அளவிலான மின்சக்தியை மின்தடை உள்ளபோது இன்வெர்டர் வழியாக எடுத்தால், அதற்கு சுமார் 14 யூனிட் அளவிற்கு பில் கட்ட வேண்டும்.

இன்வெர்டர் பழுதடைதல்: இன்வெர்டரில் 45 நாட்களுக்கு ஒருமுறை இன்வெர்டர் பேட்டரியில் தண்ணீரை சேர்க்க மறந்து விட்டால் தண்ணீர் வறண்டு பேட்டரியை சேதப்படுத்துவது மட்டுமல்லாமல், தீ அபாயத்தையும் ஏற்படுத்துகிறது. எனவே, 45 நாட்களுக்கு ஒரு முறை பேட்டரியில் நீர்மட்டத்தை சரிபார்க்க வேண்டும்.

எப்படிப்பட்ட இன்வெர்டர் வாங்குவது: வீடுகளுக்கு எப்படிப்பட்ட இன்வெர்டர் வாங்க வேண்டும் மற்றும் பேட்டரி அளவை எப்படி கணக்கிட்டு வாங்குவது என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். மின்சாரம் இல்லாவிட்டால் உபயோகப்படுத்த வேண்டிய அத்தியாவசிய உபகரணங்கள் என்ன என்பதை முடிவு செய்து அவற்றை மட்டும் தனி லைன்கள் எலக்ட்ரிஷனை வைத்து முதலில் மாற்றி அமைக்க வேண்டும்.

இன்வெர்டரை பராமரிக்க பின்பற்ற வேண்டிய சில வழிமுறைகள்:

1. நீர்நிலைகளை சரிபார்க்கவும்: பேட்டரி செல்களில் உள்ள நீர் அளவை தவறாமல் பரிசோதித்து, நீர்மட்டம் பரிந்துரைக்கப்பட்ட அளவை விட குறைவாக இருந்தால் காய்ச்சி வடிகட்டிய தண்ணீரை சேர்க்க வேண்டும்.

2. அதிர்வெண்: வெப்பமான கால நிலையில் அல்லது அதிக உபயோகத்தில் இருக்கும்போது அடிக்கடி சரிபார்த்து தண்ணீரை நிரப்ப வேண்டும்.

3. தண்ணீரை சேர்ப்பது: அசுத்தங்களை சேர்ப்பதை தவிர்க்க, எப்போதும் காய்ச்சி வடிகட்டிய தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட நிலைக்கு செல்களை நிரப்ப வேண்டும்.

4. பராமரிப்பு: வழக்கமான பராமரிப்பு பேட்டரியின் ஆயுள் மற்றும் செயல்திறனை நீடிக்க உதவுகிறது. எனவே பேட்டரி மற்றும் டெர்மினல்களின் நிலையை கண்காணிக்கவும்.

5. தேவைக்கான அறிகுறிகள்: குறைந்த காப்பு நேரம் போன்ற செயல்திறனில் வீழ்ச்சியை கண்டால் நீர்நிலைகளை சரிபார்த்து பராமரிக்க வேண்டும்.

இன்வெர்டர் பேட்டரியை சரியான பராமரிப்பின் மூலம் அது திறமையாக செயல்படுவதையும், நீண்ட காலம் நீடிக்கும் என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

கண்ணனும் புல்லாங்குழலும்!

கேன்சல் செய்யப்பட்ட காசோலை: வங்கிகள் கேட்பது ஏன்?

Lucy Fossil: மனிதத் தோற்றத்தின் கதையை மாற்றியமைத்த எலும்புக்கூடு! 

புருவ அழகு பராமரிப்புக்கான 5 குறிப்புகள்!

இலங்கையின் பிரதமரானார் ஹரிணி அமரசூரிய... யார் இந்த ஹரிணி அமரசூரிய?

SCROLL FOR NEXT