வீடு / குடும்பம்

நூலகம் எனும் அறிவுக்கிடங்கு!

ஆர்.ராமலட்சுமி

நான் மறைந்த பிறகு என் மீது மலர் மாலைகளை வைக்க வேண்டாம்; என் மடிமீது புத்தகங்களைப் பரப்புங்கள் என்று புத்தகங்கள் மீதான தன் தீரா வேட்கையை வெளிப்படுத்தியவர் நாட்டின் முதல் பிரதமரான ஜவாஹர்லால் நேரு. புத்தகங்களால் உயர்ந்தவர்கள் உலகில் பலர் உள்ளனர். அதுதான் புத்தகங்களுக்கு எத்துணை சிறப்பு இருக்கிறதோ அத்துணை பெருமை கொண்டவையாக விளங்குகின்றன நூலகங்கள். அறிவுக்கிடங்காக அறிவின் புதையலாக அவை தொடர்ந்து இயங்கி வருகின்றன. கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் இணைத்து எதிர்காலத்தை உருவாக்கும் ஆற்றல் மையங்களாக நூலகங்கள் திகழ்கின்றன.

« உலகின் முதல் நூலகம்

நிறுவப்பட்டது கி.மு. 7-ஆம் நூற்றாண்டு. மத்திய கிழக்கின் நினேவா பகுதியில் (தற்போதைய ஈராக்) அசிரிய ஆட்சியாளர் அகர்பனிபால் என்பவரால் அமைக்கப்பட்டது. பண்டைய மத்திய கிழக்கின் எழுத்துக்களால் ஆன சுமார் 30,000 கல்வெட்டுகளையும் பதிவுகளையும் கொண்டிருந்தது. அப்போதைய அறிஞர்களின் கட்டுரைகளும் இடம் பெற்றிருந்தன.

 « நாகரிகங்களின் நூலகங்கள்

லகின் பல்வேறு பகுதிகளில் நாகரிகங்கள் தோன்றி வளர்ந்தபோது நூலகங்களும் வளர்ந்தன.

« அலெக்ஸாண்ட்ரியா நூலகம்:

கிப்து, கிரீஸ், பாரசீகம் (இன்றைய ஈரான்) எகிப்து, இந்தியா உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் 7,00,000 ஆவணங்கள் இருந்தன.

« கலீஃப் அல் – அகம் நூலகம்
டம்: கோர்மோவா, ஸ்பெயின் நிறுவப்பட்டது. 10-ஆம் நூற்றாண்டு 4,00,000க்கும் அதிகமான புத்தகங்கள்.

உலகின் மிகப் பெரும் நூலகங்கள்

« பிரிட்டிஷ் நூலகம்

ண்டன் நிறுவப்பட்டது. 1873 புத்தகங்கள், இதழ்கள், நாளிதழ்கள் உள்ளிட்டவற்றின் எண்ணிக்கை. 17 கோடி முதல் 20 கோடி வரை.

« லைப்ரரி ஆஃப் காங்கிரன் வாஷிங்டன், அமெரிக்கா

நிறுவப்பட்டது. 1800 அமெரிக்காவின் தேசிய நூலகமாக உள்ள நாடாளுமன்ற நூலகம். புத்தகங்கள் உள்ளிட்டவற்றின் எண்ணிக்கை 17 கோடி.

« ஷாங்காய் நூலகம் சீனா

நிறுவப்பட்டது: 1847. புத்தகங்கள் உள்ளிட்டவற்றின் எண்ணிக்கை 5.6 கோடி.

இந்தியாவின் முக்கிய பழைமையான நூலகங்கள்

« திருவனந்தபுரம் நூலகம், கேரளம்

நிறுவப்பட்டது 1829.  நிறுவியவர், அரசர் ஸ்வாதி திருநாள்.

கன்னிமரா நூலகம், சென்னை

நிறுவப்பட்டது 1896. தேசிய புத்தக களஞ்சியங்களுள் ஒன்று. நாட்டில் வெளியாகும் அனைத்து நூல்கள், இதழ்கள், நாளிதழ்களின் ஒரு பிரதி இங்கு பாதுகாக்கப்பட்டு வருகிறது.

« தில்லி பொது நூலகம்

நிறுவப்பட்டது 1951; புத்தகங்களின் எண்ணிக்கை 18 லட்சம். ஹிந்தி, ஆங்கிலம், உருது, பஞ்சாபி உள்ளிட்ட பல்வேறு மொழி நூல்கள் உள்ளன. தேசிய புத்தக களஞ்சியங்களுள் ஒன்று.

« சரஸ்வதி மகால் நூலகம், தஞ்சாவூர்

நிறுவப்பட்டது நாயக்க மன்னர்களின் காலம். நாட்டின் பல்வேறு மொழிகளில் எழுதப்பட்ட அரிய ஒலைச்சுவடிகள் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

« இந்திய தேசிய நூலகம், கொல்கத்தா

நிறுவப்பட்டது 1836. புத்தகங்களின் எண்ணிக்கை 26.41 லட்சம். நாட்டுக்கு அர்ப்பணிப்பு; பிப்ரவரி 1, 1953. தேசிய புத்தக களஞ்சியங்களுள் ஒன்று.

« சேஷாத்ரி நினைவு நூலகம், பெங்களூரு

நிறுவப்பட்டது 1915. புத்தங்களின் எண்ணிக்கை: 3 லட்சம். விருது: ராஜாராம் மோகன்ராய் நூலக அறக்கட்டளை விருது.

 « உலகில் உள்ள நூலகங்களின் எண்ணிக்கை 26 லட்சமே.

« ஆசியாவில் உள்ள நூலகங்களின் எண்ணிக்கை  19 லட்சம்.

« இந்தியாவில் உள்ள நூலகங்களின் எண்ணிக்கை 15 லட்சம்.

« நூல் நிலையம் லைபரரி என்ற சொல் லத்தீன் மொழியிலிருந்தே வந்தது. லைபெர் என்றால் லத்தீன் மொழியில் புத்தகம் என்று அர்த்தம். லைபர் என்பதே லைபரரி என்றானது.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT