வீடு / குடும்பம்

தூங்கும் முறை சொல்லும் மன நிலைகள்!

இந்திராணி தங்கவேல்

வ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட நிலையில் படுத்தால் தான் ஆழ்ந்த தூக்கம் வரும். பொது இடத்தில் படுத்தால் உடனே தூக்கம் வராமல் நீண்ட நேரம் புரண்டு அவதிப்படுவோரும் உண்டு. ஒருவர் எப்படிப் படுத்து தூங்குகிறார்கள் என்பதை வைத்து அவரது மனதை படித்து விடலாம் என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள். அதைப் பற்றி இதோ:

சுருண்டு படுத்தல்:

ருவில் இருக்கும் குழந்தை போல சிலர் சுருண்டு படுத்துத் தூங்குவார்கள். இவர்கள் தனிமையில் இருக்கும்போது கூட மகிழ்ச்சியாக இருப்பார்கள். அடுத்தவர்களின் உதவி இல்லாவிட்டாலும், எந்தச் சூழலையும் சமாளித்துக் கடந்து விடுவார்கள். 

ஓரத்தில் படுத்தல்:

வ்வளவு பெரிய கட்டில் கிடைத்தாலும், அந்தக் கட்டிலின் ஒரு ஓரத்தில் தான் சிலர் படுத்துத் தூங்குவார்கள். இவர்கள் பெரும்பாலும் தனிமை விரும்பிகள். சுதந்திரமாக சிந்திப்பார்கள். குழுவில் இணைந்து பணி புரிவதைவிட தனியாக உழைப்பதற்கு விரும்புபவர்கள். யாரையும் சார்ந்து இருக்க மாட்டார்கள். இவர்களுடன் பழகி நெருங்குவது மிகவும் கடினம். 

கை போட்டபடி படுத்தல்:

சிலருக்கு பக்கத்தில் இருப்பவர் மீது கையைப் போட்டபடி படுத்தால் தான் தூக்கமே வரும் .யாரும் இல்லாவிட்டால் தலையணையை பிடித்துக் கொண்டு தூங்குவார்கள். இவர்களுக்கு மன உறுதி குறைவாக இருக்கும். மற்றவர்கள் ஊக்கப்படுத்தினால்தான் எதையும் செய்வார்கள். 

ஒருக்களித்துப் படுத்தல்:

சிலருக்கு ஒருக்களித்துப் படுத்தால்தான் தூக்கம் வரும். இவர்களுக்கு எதிலும் அவ்வளவு சீக்கிரம் திருப்தி கிடைக்காது. நினைத்ததை சாதிக்க முடியாத ஏக்கத்துடன் வாழ்வார்கள். சம்பளத்தில் ஆரம்பித்து சாப்பாடு வரை எல்லாமே தங்களுக்குக் குறைவாகக் கிடைப்பதாக நினைப்பு இருக்கும். 

குப்புறப் படுத்தல்:

குப்புறப் படுத்துத் தூங்குபவர்கள் பார்ப்பதற்கு சொகுசுப் பேர்வழி போல தெரிவார்கள். ஆனால் அவர்கள் வாழ்க்கையில் எந்த ரிஸ்க்கும் எடுக்கத் தயாராக இருப்பார்கள். புதுப்புது விஷயங்களைச்  செய்வார்கள்.

மல்லாந்து படுத்தல்:

ல்லாந்து படுத்துத் தூங்குபவர்கள், தங்களைச் சுற்றி இருப்பவர்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருப்பார்கள். உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் நம்பிக்கையான மனிதர்களாக இருப்பார்கள். எல்லோருக்கும் உதவி செய்ய தயங்க மாட்டார்கள். 

கை, கால்களை விரித்துப் படுத்தல் :

ட்சத்திர மீன் போல கைகளையும் கால்களையும் விரித்துப் போட்டுக் கொண்டு ஒட்டுமொத்த படுக்கையையும் ஆக்கிரமித்தபடி சிலர் தூங்குவார்கள். யாருக்கும் இடம் கொடுக்க மாட்டார்கள். ஆனால், நிஜ வாழ்க்கையில் இவர்கள் ரொம்பவே விட்டுக் கொடுப்பவர்களாக இருப்பார்கள். 

தூக்கமும்... அருகாமையும்...

ங்களுக்குப் பிடித்தமான நபர்களின் அருகாமையில் தூங்கும்போது மனச்சோர்வை குறைக்கும். பதற்றத்தை கட்டுப்படுத்தும். பாதுகாப்பு உணர்வை அதிகப்படுத்தும். மகிழ்ச்சியை அதிகரிக்கச் செய்யும். விரைவாக தூங்கவும் வழிவகை செய்யும். உறவை வலுப்படுத்துவதோடு ஆயுளையும் அதிகரிக்கச் செய்யும் என்கிறது ஒரு ஆய்வு. 

ஆதலால், தூக்கம் கண்களைத் தழுவ அவரவருக்குப் பிடித்தபடி, பிடித்த இடத்தில், பிடித்த படுக்கையில் படுத்து கண்ணுறங்கி இன்பம் காண்போமாக!

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT