Mountain People Marriage 
வீடு / குடும்பம்

மலைவாழ் மக்கள் மேன்மக்களே!

தா.சரவணா

தமிழகத்தில் குழந்தை திருமணங்கள் அதாவது 18 வயதுக்கு உட்பட்ட பெண் மற்றும் 21 வயதுக்கு உட்பட்ட ஆண் ஆகியோருக்கு திருமணம் செய்வது சட்டவிரோதமாகும். ஆனால் இன்றளவும் இது போன்ற திருமணங்கள் நடந்துதான் வருகின்றன. குறிப்பாக மலை கிராமங்கள் மற்றும் கிராமப் பகுதிகளில் இது போன்ற குழந்தை திருமணங்கள் நடத்தப்படுகின்றன என்று கூறுகிறார்கள்.

இதற்கு பெற்றவர்கள் தரப்பில் கூறப்படும் ஒரே காரணம், குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும் போதே காதலிக்கின்றனர். அதனால் பெரிய அளவில் தவறுகள் ஏதும் நடப்பதற்கு முன்னதாக திருமணம் செய்வதாக கூறுகின்றனர். அவர்கள் தரப்பில் அவர்கள் கூற்று நியாயம் என்றாலும், சட்டப்படி அது தண்டனைக்கு உரியது.

மேலும் இப்போதுள்ள குழந்தைகள் உறவுமுறை மாறியும் காதலித்து வருகின்றனர் என போலீஸ் தரப்பில் பகீர் தகவலை தெரிவிக்கின்றனர். இது குறித்து போலீசார் கூறுகையில், ஒரு சில இடங்களில் பெற்றோர்களிடமிருந்து புகார் வரும். நாம் போய் அதை விசாரித்தால் அந்த சிறுமி காதலிக்கும் நபர் அண்ணனாகவோ, தம்பியாகவோ, சித்தப்பாவாகவோ இருப்பார். அந்த நபர்களும் இதுபோல பலமுறை தவறு செய்த நபர்களாகத்தான் இருப்பார்கள். ஒரு சிறுமிக்கு திருமணம் நடக்கிறது என புகார் வரும் பட்சத்தில் அந்தப் புகாரை தெரிவிப்பதே அந்த மணப்பெண்ணின் நண்பர்களாகவோ, அவரை ஒருதலைப் பட்சமாக காதலிக்கும் நபராகவோ தான் இருக்கிறார்கள். இது நல்ல விஷயம்தான் சட்டப்படி. ஆனாலும் அந்த மணப்பெண்ணால் பாதிக்கப்படும் நபர்கள் தங்களின் வலியை தீர்த்துக் கொள்ள ஒரு வழியாகவும் இதை பயன்படுத்திக் கொள்கின்றனர்.

இது போன்ற திருமணங்களை சட்டப்படி தடுத்து நிறுத்த 1098 என்ற எண்ணுக்கு போன் செய்து தகவல் தெரிவிக்கலாம். தகவல் கொடுப்பவர் குறித்த ரகசியம் காக்கப்படும் என்கின்றனர்.

இப்படியும் ஒரு சம்பவம்:

சில வாரங்களுக்கு முன்னர் திருப்பத்தூர் மாவட்டம் புதூர் நாடு மலைப்பகுதியில் ஒரு குழந்தை திருமணம் நடைபெறுவதாக இரவு 12 மணிக்கு குழந்தைகள் நலக் குழுமம் மற்றும் தாலுகா போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. தொடர்ந்து அந்த இடத்துக்குச் சென்று பார்த்த போது அந்தப் பெண்ணுக்கு 20 வயது பூர்த்தி ஆகி உள்ளது. மணமகனுக்கும் 22 வயதுக்கு மேல் ஆகி உள்ளது. இதை அவரவர் ஆதார் கார்டு வாங்கி சோதித்துள்ளனர். பின்னர் அவர்களிடம் விசாரித்த போது, பெண்ணுக்கு 18 வயது பூர்த்தியாவதற்கு முன்னரே இருவரும் காதலித்து வந்துள்ளனர். ஆனால் பெண்ணின் வீட்டார் இதற்கு சம்மதிக்கவில்லை. அதனால் மணப்பெண், காதலன் வீட்டோடு சென்று விட்டார். ஆனால் திருமணம் செய்யவில்லை. ஏனெனில் 18 வயது பூர்த்தியாகாத பட்சத்தில் திருமணம் செய்வது தவறு என்பது மலைவாழ் மக்களுக்கு தெரிந்துள்ளது. மேலும் அந்த மணமகன் பி எட் வரை படித்துள்ளார். இது போன்ற காரணங்களால் இரண்டு ஆண்டுகள் காத்திருந்து பெண்ணுக்கு 20 வயது பூர்த்தியானவுடன் தான் திருமணம் செய்துள்ளனர். இதை பொறுக்காத சிலர் போன் செய்து புகார் செய்துள்ளனர்.

உண்மையில், மலைவாழ் மக்கள் எல்லாம் மேன் மக்களாக மாறிக்கொண்டே வருகின்றனர் என்பது போற்றுதலுக்குரியது. ஆனால் நாகரீகத்தில் வளர்ச்சி அடைந்ததாக கூறிக் கொள்ளும் பலரும்தான் அனைத்து தவறுகளையும் செய்து கொண்டு வருகிறோம். எது எப்படியோ பெண்ணுக்கு 18 வயது பூர்த்தியாக வேண்டும் ஆணுக்கு 21 வயது பூர்த்தி ஆக வேண்டும். அப்படி செய்தால் தான் ஆரோக்கியமாக இருக்கும் அவர்களின் திருமண வாழ்க்கை.       

மிட் நைட் பிரியாணி ரசிகரா நீங்கள்? அப்போ, அவ்வளவுதான்! 

'கை தந்த பிரான்' என்று அழைக்கப்படும் சிவஸ்தலம் எங்குள்ளது தெரியுமா?

மாதவிடாய் நேரத்தில் முடி கொட்டுகிறதா? அப்ப இதுதான் காரணம்!

கண் பார்வை மேம்பாட்டிற்கு உதவும் 5 பயிற்சிகள்!

ஹனுமனை வெறுக்கும் துரோனகிரி கிராம மக்கள்… ஏன் தெரியுமா?

SCROLL FOR NEXT