பொதுவாக கட்டுமானம் என்றாலே நம் நினைவிற்கு வரும் முதல் பொருள் 'செங்கல்'. இப்போதைய நவீன உலகில் இந்த செங்கலுக்கு மாற்றாக வேறெனென்ன பொருட்கள் இருக்கிறது என்பதை பார்ப்போம்.
மூலப் பொருட்கள்: கான்கிரீட் கற்கள் (நொறுக்கப்பட்ட கற்கள், சரளை( gravels), எரிமலை சிண்டர்கள்(cinders), சிமெண்ட் (சாதாரண Portland சிமெண்ட்) மற்றும் நீர் ஆகியவற்றின் கலவையில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. இவற்றை கற்காரைக்கட்டி என்றும் அழைப்பதுண்டு.
உற்பத்தி செயல்முறை:
முழு தானியங்கி ஆலைகள், அதிக வலிமை கொண்ட கான்கிரீட் கற்களை(concrete blocks ) உற்பத்தி செய்கின்றன. அதே நேரத்தில் கைகளின் மூலம் இக்கலவையை செய்வதை தவிர்க்கவும், போக்குவரத்து செலவுகளைக் குறைக்கவும் கட்டுமான தளத்திலேயே நிறுவலாம்.
நன்மைகள்:
அதிக வலிமை மற்றும் ஆயுள்.
நிலையான அளவு மற்றும் வடிவம்.
போக்குவரத்தின் போது ஏற்படும் விரயம் குறைக்கப்படுகிறது.
பாரம்பரிய செங்கற்களுடன் ஒப்பிடும்போது குறைந்த நீர் உறிஞ்சும்.
சாம்பல் செங்கற்கள் (நிலக்கரியில் இயங்கும் மின் உற்பத்தி நிலையங்களின் துணை தயாரிப்புகள்), சிமென்ட் மற்றும் தண்ணீரின் கலவையிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.
உற்பத்தி செயல்முறை:
இந்த செங்கற்கள் ஹைட்ராலிக் அல்லது இயந்திர அழுத்தங்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன.
நன்மைகள்:
சுற்றுச்சூழல் உகந்தது (தொழில்துறை கழிவுகளால் செய்யப்படுகிறது).
இலகுரக மற்றும் இன்சுலேடிங் தன்மையுடையது.
உற்பத்தியின் போது தேவைப்படும் ஆற்றல் குறைவு .
நல்ல வெப்பத்தை காக்கும் பண்புகள் உடையது.
செலவு குறைந்தது மற்றும் எளிதில் கிடைக்கும்.
மணல், சுண்ணாம்பு மற்றும் தண்ணீரிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.
கலவை அச்சுகளில் அழுத்தி பின் பிரித்தெடுத்து தயாரிக்கின்றன.
நன்மைகள்:
உயர் அழுத்த வலிமை.
சீரான அளவு மற்றும் வடிவம்.
எல்லா வானிலைக்கும் நல்ல தாக்குப்பிடிக்கும்.
சுமை தாங்கும் சுவர்களுக்கு ஏற்றது.
பிரபலமடைந்து வரும் இந்த மாற்று பொருள் நம் பாரம்பரிய செங்கற்களைப் பயன்படுத்தாமல் வீடுகள் மற்றும் கட்டமைப்புகளை உருவாக்க உதவுகிறது.
நன்மைகள்:
வேகமான கட்டுமான வேலை.
பொருள் விரயம் குறையும்.
மேம்படுத்தப்பட்ட தரக் கட்டுப்பாடு.
தற்காலிக மற்றும் நிரந்தர கட்டமைப்புகளுக்கு ஏற்றது.
Wricks என்பது முற்றிலும் மறுசுழற்சி செய்யப்பட்ட கழிவுப் பொருட்களால் ஆன சுற்றுச்சூழலுக்கு உகந்த செங்கற்கள். அவை நிலையானதாகவும், இலகுரக மற்றும் ஈரப்பதம் இல்லாததாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
நன்மைகள்:
பாரம்பரிய களிமண் செங்கற்களை விட 40% வலிமையானது.
80% நீர்ப்புகா தன்மையுடையது.
சுற்றுச்சூழலுக்கு உகந்தது.
செலவு குறைந்தது (ஒட்டுமொத்த திட்ட செலவுகளை 20% குறைக்கலாம்).
மூலப்பொருட்கள்: சாம்பல், சிமெண்ட், சுண்ணாம்பு, ஜிப்சம் மற்றும் அலுமினிய தூள் ஆகியவற்றின் கலவையிலிருந்து AAC தயாரிக்கப்படுகிறது.
நன்மைகள்:
இலகுரக மற்றும் வேலை செய்ய எளிதானது.
சிறந்த வெப்ப காப்பு.
தீ பிடிப்பது, பரவுவது ஆகியவற்றைத் தடுக்கும்.
சுற்றுச்சூழல் நட்பு.
துல்லியமான பரிமாணங்கள் மற்றும் மென்மையான மேற்பரப்புகள்.
CSEB கள் மண், மணல், சிமெண்ட் மற்றும் நீர் ஆகியவற்றின் கலவையிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. இக்கலவை ஹைட்ராலிக் அழுத்தத்தைப் பயன்படுத்தி சுருக்கப்படுகிறது.
நன்மைகள்:
நிலையான மற்றும் உள்நாட்டில் கிடைக்கும் மூலப்பொருட்கள்.
உற்பத்தியின் போது குறைந்த ஆற்றல் தேவைப்படுகிறது.
நல்ல வெப்ப பண்புகளுடையது.
செலவு குறைந்த மற்றும் கிராமப்புற கட்டுமானத்திற்கு ஏற்றது.
கான்கிரீட் கட்டமைப்புகளில் மூங்கிலை ஒரு வலுவூட்டப் பொருளாக பயன்படுத்தி பார்க்கலாம் என்ற ஆராய்ச்சியின் வெளிப்பாடு இது.
நன்மைகள்:
நிலையான மற்றும் புதுப்பிக்கத்தக்க பொருள்.
இழுவிசை வலிமையை அதிகரிக்கிறது.
ஸ்டீல் வலுவூட்டலின் தேவையை குறைக்கிறது.