Nuclear family or Joint family 
வீடு / குடும்பம்

தனிக்குடித்தனமா? கூட்டுக்குடித்தனமா?

தா.சரவணா

தனிக்குடித்தனமா? கூட்டுக்குடித்தனமா? இப்பதிவை படித்துவிட்டு முடிவு பண்ணுங்களேன்!

'ஒரு பாத்திரம் கூட சரியாக கழுவ தெரியவில்லை, எவ்வளவு தண்ணீர் வீணாக்குகிறாள், இப்படியா சாம்பார் வைப்பாள்' என சில வீடுகளில் மாமியார்கள் தங்களது மருமகள்களை இன்றைக்கும் குறை கூறுவதை பார்த்திருப்போம். குறிப்பாக திருமணம் நடைபெற்ற முதல் மூன்று மாதங்களுக்குப்பின் வரக்கூடிய பிரச்சினைதான் இது. இதில் சில வீடுகள் விதிவிலக்கு.

திருமணமான முதல் ஒரு வருடம், பெண்களுக்கு சற்று சவாலான ஒன்றுதான். புது வீடு, புது உறவுகள், புதிய நடைமுறைகள் என பலவற்றையும் பழக வேண்டியிருக்கும். அதுவரை தனது வீடுகளில் மகாராணிகளாக இருக்கும் பெண்கள் திருமணம் ஆனதும் எனக்கென ஒரு ஆண், எனது ஹீரோ வந்துவிட்டார் என புது வாழ்க்கைக்குள் நுழைவர். ஆனால், அந்த புது வாழ்வில் வரக்கூடிய சிக்கல்களை கையாளுவதற்கு பெரும்பாலானோர் தயாராவதில்லை.

திருமணமான புதிதில் எல்லா மாமியார்களும் தங்களது மருமகளிடம் மிகவும் பாசமாக இருப்பார்கள். பின்னர் இந்த எண்ணம் தடுமாற்றம் அடைவதால் விரிசல் வரக்கூடும். அதே சமயம் மணப்பெண்ணிற்கும் தனது கணவருடன் அதிக நேரம் செலவிட வேண்டும், கணவரை நன்கு புரிந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணங்கள் இருக்கும். திருமணம் ஆகும் முன் தனது திருமண வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்புகள் பெண்களிடையே அதிகமாக இருக்கும். ஆனால் திருமணத்திற்கு பின் சூழ்நிலைகள் முற்றிலும் மாறாக இருக்கும்.

ஆண்கள் தங்களது தாய்மார்களைப் பார்த்தே வளர்ந்திருப்பர் என்பது உண்மைதான் என்றாலும், பெரும்பாலானோர் இங்கு ஒரு விசயத்தை கவனிக்க மறந்து விடுகின்றனர். 55 வயதில் உள்ள அவரது பக்குவமும், 20 வயதில் உள்ள தனது மனைவியின் பக்குவமும் வேறு என்பதை மறந்து விடுகின்றனர். இவையும் பெண்களிடையே மனஸ்தாபத்தை ஏற்படுத்துகிறது.

திருமணமான ஒவ்வொரு பெண்ணுக்கும் முதல் மூன்று மாதங்கள் என்பது மறக்கமுடியாத ஒன்று. ஆரம்ப காலத்தில் தன்னை எப்படி நடத்துகின்றனர்? ஒவ்வொரு விசயத்திற்கும் தன்னை எப்படி எல்லாம் குறை கூறினார்கள்? என்பதை எந்த பெண்ணும் மறப்பதில்லை.

அந்தக் காலத்தில் பெண்கள் எல்லாவற்றையும் சந்திக்க தயாராக இருந்தனர். அவர்கள் அந்த சூழ்நிலையிலேயே வளர்க்கப்பட்டனர். ஆனால், இந்த காலத்து நிலைமை வேறாக இருப்பதால் குடும்ப உறவுகளுக்குள் ஒற்றுமை இல்லாமல், திருமணமான புதிய தம்பதியினர் சீக்கிரமே தனிக்குடித்தனம் செல்லும் நிலையும் ஏற்பட்டுவிடுகிறது.

புகுந்த வீடு செல்லும் மருமகள், மாமியாரை அம்மாவாகவும், மாமியார்கள் வீட்டுக்கு வரும் மருமகளை மகளாகவும் பார்க்கத் தொடங்கினால் தனி குடித்தனம் என்பது காலப்போக்கில் இல்லாமல் போய்விடும்.

தனிக்குடித்தனம் செல்வது அப்போதைக்கு நன்றாக இருக்கும். நாட்கள் செல்ல செல்ல குழந்தைகள் பிறந்த நிலையில், அவற்றை வளர்க்கும் போதுதான் பல சவால்களை சந்திக்க நேரிடும். அப்போது கூட்டு குடித்தனத்தை தேடினாலும் கிடைக்காது.

என்ன? முடிவு பண்ணிடீங்களா மக்களே?                                                            

மிட் நைட் பிரியாணி ரசிகரா நீங்கள்? அப்போ, அவ்வளவுதான்! 

'கை தந்த பிரான்' என்று அழைக்கப்படும் சிவஸ்தலம் எங்குள்ளது தெரியுமா?

மாதவிடாய் நேரத்தில் முடி கொட்டுகிறதா? அப்ப இதுதான் காரணம்!

கண் பார்வை மேம்பாட்டிற்கு உதவும் 5 பயிற்சிகள்!

ஹனுமனை வெறுக்கும் துரோனகிரி கிராம மக்கள்… ஏன் தெரியுமா?

SCROLL FOR NEXT