Relationship Advice. 
வீடு / குடும்பம்

திருமண உறவில் இவ்வளவு தவறுகள் நடக்கிறதா?

கிரி கணபதி

திருமண உறவு என்றாலே அது மிகவும் சிக்கல் நிறைந்ததுதான். எப்போதுமே மகிழ்ச்சியாகவே இருக்கும் என சொல்ல முடியாது. பல சண்டை சச்சரவுகள் திருமண உறவில் ஏற்படுவது சகஜம். ஆனால் இவற்றைப் புரிந்துகொண்டு நடந்துகொள்வதன் மூலமாக ஆரோக்கியமான உறவை நாம் வளர்த்துக் கொள்ள முடியும். 

இந்த பதிவில் திருமண உறவில் தம்பதிகள் எதுபோன்ற தவறுகளைச் செய்கிறார்கள் என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம். இதைத் தெரிந்து கொள்வது மூலமாக உங்கள் வாழ்க்கையில் இதுபோன்ற தவறுகளை நீங்கள் செய்து கொண்டிருந்தால் உடனடியாக திருத்திக்கொள்ள உதவியாக இருக்கும்.

1. எந்த உறவாக இருந்தாலும் அந்த உறவுக்கு மத்தியில் முறையான கம்யூனிகேஷன் என்பது ஆரோக்கியமான உறவின் அடித்தளமாக அமைகிறது. உங்கள் துணையுடன் நீங்கள் சரியாக பேசத் தவறினால் தவறான புரிதல்களும், மனக்கசப்புகளும், சண்டைகளும் அதிகம் ஏற்படலாம். அதே நேரம் உங்கள் துணையின் கருத்துக்களைக் கேட்டுக் கொண்டு வாழ்க்கை முடிவுகளை எடுப்பதும் முக்கியம்.

2. அதேபோல ஒரு உறவில் சண்டைகள் ஏற்படுவது இயல்பானது மற்றும் தவிர்க்க முடியாததும் கூட. இத்தகைய மோதல்களை முறையாக பேசித் தீர்த்துக் கொள்ளாதபோது, அது தீர்க்கப்படாத பெரும் பிரச்சனையாக மாறலாம். எனவே தம்பதிகள் மோதல்களை முறையாக எதிர்கொள்ள வேண்டும். மோதல்கள் ஏற்பட்டால் அதை எப்படி தீர்க்கலாம் என்பதை இருவரும் பேசி கலந்தாலோசிக்க வேண்டும்.

3. உறவுகளுக்கு மத்தியில் இருக்கும் தேவையில்லாத எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தையே ஏற்படுத்தும். எனவே தம்பதிகள் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் எதார்த்தமாக பழகுவது அவசியம். இதன் மூலமாக அன்பு மற்றும் பாசத்தின் உச்சத்தை தம்பதிகளால் அனுபவிக்க முடியும். 

4. என்னதான் நீங்கள் தம்பதிகளாக இருந்தாலும் உங்களுக்கென்று தனிப்பட்ட இலக்குகளும் கனவுகளும் அவசியமானது. அவற்றை விட்டுக் கொடுத்தால் வெறுப்பு, சோர்வு போன்ற உணர்வுகள் ஏற்படலாம். எனவே தம்பதிகள் இருவரும் அவர்களுக்கான தனிப்பட்ட இலக்குகளை நோக்கி பயணிக்க கற்றுக் கொள்ளுங்கள். அந்த பயணத்தில் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வது குடும்ப உறவை பலப்படுத்தும். 

5. ஒரு உறவை எப்போதும் சிறப்பாக வைத்துக் கொள்வதற்கு தொடர்ச்சியான முயற்சி மிக முக்கியம். நீங்க என்ன சொல்வது? நான் என்ன கேட்பது? என ஈகோ வைத்துக்கொண்டு இருந்தால், எந்த உறவும் மகிழ்ச்சியாக இருக்காது. எனவே தம்பதிகள் உங்கள் உறவை சிறப்பாக வைத்துக் கொள்ள, உங்களால் முடிந்த முயற்சிகளை எடுக்க கற்றுக் கொள்ளுங்கள். 

இவை அனைத்தையும் புரிந்து கொண்டு தம்பதிகள் ஒருவர் மீது ஒருவர் பரஸ்பர அன்பு மற்றும் ஆதரவையும் காட்டும்போது, அவர்களின் உறவு எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும். 

முதிர் பெண்களின் மன அழுத்தம் போக்கும் எளிய வழிகள்!

புரட்டாசி முதல் சனிக்கிழமை பெருமாளுக்கு தளிகை செய்வது எப்படி?

வெறும் வயிற்றில் அத்திப்பழ தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் 10 நன்மைகள்!

உங்கள் குழந்தைகளுக்கும் இந்த 7 ரகசியங்களைக் கற்றுத் தரலாமே!  

திரைப்பட ஒளிப்பதிவில் மலைக்க வைத்த மந்திர வித்தகர் மாருதிராவ்!

SCROLL FOR NEXT