Rose is not just for beauty; For health
Rose is not just for beauty; For health https://www.updatenews360.com
வீடு / குடும்பம்

ரோஜாப்பூ அழகுக்கு மட்டுமல்ல; ஆரோக்கியத்துக்கும்தான்!

ஆர்.ஜெயலட்சுமி

ருத்துவ குணம் கொண்ட ரோஜா மலர்கள் எடை இழப்பு, மன அழுத்தம், மாதவிடாய் பிரச்னை, செரிமான பிரச்னை, நீரிழிவு நோய் பிரச்னை குடல் புண் உள்ளிட்ட பல்வேறு உடல்நலக் கோளாறுகளுக்கு ரோஜா இதழ்கள் அருமருந்தாக இருக்கிறது. ரோஜா இதழ்களை பச்சையாகவோ அல்லது உலர வைத்து தேநீர் போட்டு குடிப்பதால் ஏராளமான நன்மை தரும்.

ரோஜா இதழ்களை அப்படியே மென்று சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும். ரோஜாவிலிருந்து எடுக்கப்படும் தைலம் காது வலி, காது குத்தல், காது புண், காது ரோகம் ஆகியவற்றை குணமாக்கும். ரோஜா குல்கந்தை சாப்பிட்டால் இரத்தம் சுத்தம் அடைந்து சருமம் பளபளப்பாகும்.

ரோஜா சர்பத்தை அருகினால் மூலச் சூடு, மலச்சிக்கல், குடலில் புண் குணமாகும். ரோஜா இதழ்களை ஆய்ந்து ஒரு கையளவு எடுத்து பாத்திரத்தில் போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி அதில் பாதியை எடுத்து சர்க்கரையை சேர்த்து காலை, மாலை குடித்து வந்தால் மலச்சிக்கல் விலகும்.

பித்தம் காரணமாக மயக்கம், குமட்டல், வாந்தி, நெஞ்சு எரிச்சல் மற்றும் பித்த கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்கள் இரண்டு கைப்பிடி அளவு ரோஜா இதழ்களை ஒரு பாத்திரத்தில் போட்டு இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாகக் கொதித்ததும் வடிகட்டி காலை, மாலை இருவேளை ஒரு டம்ளர் வீதம் குடிக்க வேண்டும். இவ்வாறு ஏழு நாட்கள் குடித்து வந்தால் பித்தம் அறவே நீங்கிவிடும்.

ரோஜா இதழ்களை வேளைக்கு ஒரு கைப்பிடி வீதம் வெறுமனே மென்று சாப்பிட்டால் சீதபேதி குணமாகும். ரோஜா பூ கஷாயத்துடன் கருஞ்சீரகத்தை சேர்த்து அரைத்து மெல்லிய துணியால் நனைத்து முகர்ந்தால் மூக்கடைப்பு, ஜலதோஷத்தால் ஏற்படக்கூடிய பல்வேறு வகை கோளாறுகள் அகலும்.

ரோஜாப்பூ நிறைய கிடைக்கும்போது ரோஜா பூவை நிழலில் உலர்த்தி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். இதை கஷாயம் போட்டு சாப்பிட்டால் உடம்பிற்கு மிகவும் நல்லது. ஒரு டம்ளர் தண்ணீரில் உலர்ந்த ரோஜாக்களை போட்டு பாதி அளவுக்கு சுண்டும்படி காய்ச்சி இறக்கி ஆறவைத்து வடிகட்டி சிறிது நாட்டு சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் போதும். வேண்டுமென்றால் கொஞ்சம் பாலையும் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் வாய்ப்புண் சரியாகும் மற்றும் கர்ப்பிணிகளுக்கு சிறுநீர் தாராளமாகப் போகும்.

சூரிய கதிர்களால் ஏற்படும் சரும பாதிப்புகள் நீங்க ஒரு சுத்தமான பவுலில் ஒரு ஸ்பூன் அரைத்த ரோஜா இதழ்களை எடுத்து அதனுடன் ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல்லை சேர்த்து இந்த கலவையை சருமத்தில் தடவி இருபது நிமிடங்களுக்குப் பிறகு சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வர சருமம் பளபளப்பாகக் காணப்படும்.

இதய மாற்று அறுவை சிகிச்சையில் ஒரு புதிய மைல்கல்!

பெண்களுக்கு கைமேல் பலன் தரும் கன்னிகா பரமேஸ்வரி வழிபாடு!

ஹரியானாவில் தீப்பிடித்து எரிந்த சுற்றுலா பேருந்து… 8 பேர் பலி!

தொலைதூரப் பயணங்கள் முடிவதில்லை… தொடரும்…!

பிக்மேலியன் விளைவால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரியுமா?

SCROLL FOR NEXT