some ideas on how to get bravery https://ta.quora.com
வீடு / குடும்பம்

துணிச்சல் என்கிற பண்பைப் பெற சில யோசனைகள்!

எஸ்.விஜயலட்சுமி

துணிச்சல் என்ற ஒரு ஆளுமைப் பண்பு ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டிய ஒன்றாகும். ஆனால், சில நேரங்களில் மோசமான அனுபவங்கள் அல்லது நினைவுகளின் காரணமாக அது சிலரிடத்தில் இல்லாமல் போய்விடும். வாழ்க்கையில் பல சூழ்நிலைகளில் வெற்றி பெற தைரியம் அவசியம். அதைப் பெறும் வழிமுறைகளைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

எந்த விஷயம் உங்களை அச்சப்பட வைக்கிறது என்று முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். எதற்காக பயப்படுகிறோம் என்பதை ஒப்புக்கொள்ளத் தயங்கக் கூடாது. தைரியம் இல்லாததற்கு என்ன காரணம் என்று சிந்திக்க வேண்டும். எதையெல்லாம் பார்த்து பயப்படுகிறீர்கள் என்பதை ஒரு காகிதத்தில் எழுத வேண்டும்.

சிலருக்கு பாம்பைக் கண்டால் பயம், சிலருக்கோ கரப்பான்பூச்சியைக் கண்டால் பயம், இன்னும் சிலருக்கு பிறரிடம் பேச பயம், உயரமான இடங்களில் நிற்க பயம், விமானத்தில் போக பயம், கார் ஓட்ட பயம் என்று அச்சங்கள் பலவிதம். அவற்றை காகிதத்தில் குறித்துக்கொள்ள வேண்டும்.

பின்பு அந்த பயத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து சிந்திக்க வேண்டும். பாம்பு கொத்தி மரணம் நிகழும் என்று சிலர் பயப்படுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். ஆனால், உண்மையில் எல்லாப் பாம்புகளுக்கும் விஷம் இல்லை. மேலும், பாம்புகளை ஒருவர் தினமும் பார்க்கப் போவதில்லை. என்றாவது ஒரு நாள் கண்ணில் படும் ஒரு ஜீவராசி. அதேபோல கார், இரு சக்கர வாகனம் ஓட்ட சிலர் பயம் கொள்கிறார்கள். விபத்து நேரலாம் என்பதே அவர்கள் வாகனம் ஓட்டுவதைத் தவிர்ப்பதற்கான காரணம்.

ஆனால், சற்றே ஆழமாக சிந்தித்தால் நடந்துபோகும் போது கூட விபத்து நேரலாம் என்ற உண்மை விளங்கும். எனவே, வாகனங்கள் பற்றிய பயத்தை அகற்றி, பாதுகாப்பாக ஹெல்மெட், சீட் பெல்ட் போட்டுக் கொண்டு மித வேகத்தில் சென்றால் விபத்து நேராது என்று புரியும்.

ஏதாவது ஒரு விஷயத்தைக் குறித்து பயம் இருந்தாலும் ஒருவருக்கு மற்றொரு விஷயத்தில் தைரியம் இருக்கும். அது என்ன என்பதையும் ஒரு காகிதத்தில் எழுதவும். பிறருடன் உங்களை ஒப்பிடுவதை தவிர்க்கவும். ஒவ்வொரு மனிதரும் தனி மனிதர் தான். ஒவ்வொருவரும் பிறரிடம் இருந்து வித்தியாசத்தோடுதான் இருக்கிறார்கள். உங்களுடைய ப்ளஸ் பாயிண்ட் பிறருடைய மைனஸ் பாயிண்ட்டாக இருக்கலாம். அதனால் யாருடனும் ஒப்பிடாமல் உங்களுடைய தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தை மட்டுமே நினைவில் கொள்ள வேண்டும்.

நீங்கள் செய்யத் தயங்கும் காரியத்தை சிறிது சிறிதாக செய்யத் தொடங்கலாம். உதாரணமாக, தினமும் அரை மணி நேரம் கார் ஓட்டக் கற்றுக்கொண்டு, போகுவரத்து நிறைந்த சாலைகள், நெரிசலான சந்துகள், ஹைவே என்று விதவிதமான இடங்களில் காரோ பைக்கோ ஓட்டிப் பழகி, முறையாக ஓட்டுனர் உரிமம் பெற்று விட்டால் பயம் ஓடிப்போய் வாகனம் ஓட்டும் துணிச்சல் வந்து விடும். இதேபோல உங்களை அச்சம் கொள்ள வைக்கும் பிற செயல்களையும் படிப்படியாக செய்து வெற்றி பெறலாம்.

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT