வீடு / குடும்பம்

மழைக் காலங்களில் கார் மைலேஜ் குறையாமல் இருக்க சில டிப்ஸ்..!

கோவீ.ராஜேந்திரன்

மழை காலத்தில் கார் ஓட்டுவது சற்றே சவாலான காரியம் ஆகும். பொதுவாக மழை காலங்களில் கார் ஓட்டும்போது, மைலேஜ் சற்று குறைவதை பலரும் அனுபவித்து இருப்பர். அந்த வகையில், மழை காலங்களிலும் காரின் மைலேஜ் குறையாமல் இருக்க என்னென்ன செய்யலாம் என்பது பற்றி பார்ப்போம்.

கார் பயன்பாட்டில் திராட்டில் செய்வதில் மென்மையாக செயல்பட்டால் காரின் மைலேஜ் சீராக அதிகப்படுத்த முடியும். காரை அக்செல்லரேட் செய்யும் போதுதான் அதிக எரிபொருள் தேவைப்படும். இதனால் மென்மையாக திராட்டில் செய்தால், காரின் எரிபொருள் தேவையை பெருமளவுக்கு குறைக்க முடியும்.

நகரங்களில் ஓட்டும்போது குறைவான கியர்களுக்கு மாற்றுவதை தவிருங்கள். மிகச்சிறந்த மைலேஜை பெற 4வது அல்லது  5வது கியரில் 40 - 50 கிமீ வேகத்தில் நீங்கள் ஓட்டலாம்.

மழை காலங்களில் எந்த பகுதியில் தண்ணீர் தேங்கி இருக்கும் என்பது தெரியாது. இதனால் மழை காலங்களில் குறுக்கு வழிகளை தவிர்த்து, முன்கூட்டியே பயணத்தை திட்டமிட்டு, நேரான வழியில் செல்வது நல்லது. இதனால் மைலேஜ் பிரச்னை வராது.

கார் டயரின்  அழுத்தத்தை அதிகப்படுத்தினால், காரின் மைலேஜ் அதிகரிக்கும் என்பது சிலரின் நம்பிக்கை. ஆனால் இவ்வாறு செய்யும்போது க்ரிப் இழக்க நேரிடலாம். இது மிகவும் ஆபத்தான காரியம் ஆகும். இதன் காரணமாக மழை காலங்களில் சிரமத்தை சந்திக்கலாம். கார் டயர் அழுத்தத்தை உற்பத்தியாளர் பரிந்துரைக்கும்படி வைத்துக்கொள்வது நல்லது

நல்ல மைலேஜ் கிடைக்குமென்று எண்ணி, பொதுவாக, மழை நேரங்களில் குளிராக இருக்கும்; எதற்கு வீணாக ஏ. சி என்று அதனை நிறுத்தி விடுவர். மழை காலங்களில் கார்களை ஏசி இல்லாமல் பயன்படுத்தும்போது வின்ட்ஷீல்டு முழுக்க புகை மூட்டம் ஏற்பட்டு, சாலை சரியாக தெரியாமல் போகும் வாய்ப்புகள் உண்டு. அந்த வகையில், மழை காலங்களில் ஏசி-யை அதிக குளிர்ச்சியை ஏற்படுத்தும் அளவுக்கு வைக்காமல், குறைந்த குளிர்ச்சி ஏற்படும் வகையில் வைத்துக் கொள்ளலாம்.

கார்களில் கியர் மாற்றும் முறை அதன் மைலேஜிலும் பிரதிபலிக்கும். கார் ஓட்டும்போது முடிந்தவரை அதிகபட்ச கியருக்கு விரைந்து மாறிக்கொள்வது நல்லது. குறைந்த கியரில் வாகனம் ஓட்டும்போது அதிக எரிபொருள் செலவாகிவிடும். அதிக வேகத்திலும் ஓட்டக்கூடாது. சீரான வேகத்தில் கார் ஓட்டுவது நல்லது.

காரின் பிரேக் சிஸ்டத்தில் எதேனும் கோளாறு உள்ளதா என்பதை சோதித்து, பாதிப்பு இருந்தால் உடனே சரிபார்க்க வேண்டும். காரணம் பிரேக் சிஸ்டம் பிரச்னை என்றால் அது மைலேஜை பாதிக்கும்.

குண்டு குழி சாலைகளில் பயணிக்கும் சூழல் ஏற்படும். அதனால் சாலையை நன்கு கண்காணித்து ஸ்மூத்தாக  ஒட்ட வேண்டும். திடீர் பிரேக் போடுவது மற்றும் சட்டென வேகத்தை அதிகரிப்பது என்று இரண்டையும் தவிருங்கள்.

மழை காலத்தில் ஒரு லாங் டிரிப் சென்று வந்தால். கார்களின் சஸ்பென்ஷன் மற்றும் வீல் அலைன்மென்ட் செக் செய்வது நல்லது. காரின் வீல் அலைன்மென்ட் சரியில்லை என்றால் காரின் மைலேஜ் 7 சதவீதம் வரை சராசரியாக குறையும் என்பதை கண்டறிந்துள்ளனர்.

மழை காலத்தில் காரின் இன்ஜின் சிஸ்டம், சஸ்பென்ஷன் சிஸ்டம், பிரேக் சிஸ்டம் மற்றும் எலெக்ட்ரிக்கல் சிஸ்டம் என அனைத்தும் நல்ல நிலையில் இருக்கிறதா என அடிக்கடி பரிசோதித்து பார்க்க வேண்டும். குறிப்பாக காரின் பேட்டரி, வைப்பர் பிளேடு மற்றும் ஹெட் லைட்கள்.

காரின் பேட்டரிகள் நீண்ட நாள் உழைக்க காரை ஸ்டார்ட் செய்யாமல் ஹெட் லைட், இன்டீரியர் லைட்கள் போடாதீர்கள். வாரத்திற்கு 30 நிமிடங்களாவது காரை தொடர்ந்து ஓட்டுங்கள்.

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT