எலிக்கடி காய்ச்சல் 
வீடு / குடும்பம்

மழைக்காலத்தில் பரவும் எலிக்காய்ச்சலின் அறிகுறிகளும் தடுப்பு முறைகளும்!

கே.எஸ்.கிருஷ்ணவேனி

லிக்கடி காய்ச்சல் (Rat bite fever - RBF) என்பது எலிகளிலிருந்து மனிதர்களுக்குப் பரவும் பாக்டீரியா தொற்றுக்களால் உண்டாகும் காய்ச்சலாகும். எலி கடித்தாலோ, எலியின் சிறுநீர் அல்லது மலத்தை மிதித்தாலோ அல்லது அவை நம் உணவு மற்றும் பானங்களில் எதிர்பாராத விதமாக கலந்தாலோ இந்நோய் மனிதர்களுக்குப் பரவும்.

எலியின் சிறுநீரில் லெப்டோஸ்பைரா (leptospira) என்ற பாக்டீரியா உள்ளது. இது எலியின் சிறுநீர் மற்றும் கழிவுகள் மூலமாக அல்லது கடிப்பதன் மூலமாகப் பரவுகிறது. செல்லப் பிராணிகளை விற்பனை செய்யும் கடைகள், விலங்கு ஆய்வகங்களில் எலிகளுடன் நெருக்கமாகப் பணி புரிபவர்களுக்கும் இந்த காய்ச்சல் ஏற்படும் ஆபத்து உள்ளது. பாக்டீரியா தொற்றுள்ள எலி ஒரு மனிதரைக் கடித்தால் அல்லது பிராண்டினால் எலிக்கடி காய்ச்சல் உண்டாகும்.

எலிக்கடி காய்ச்சலின் அறிகுறிகள்:

எலி கடித்த பிறகு தொற்று ஏற்படுவது பொதுவானதாகும். கடித்த சில மணி நேரத்தில் அந்த இடம் சிவந்து போகுதல், வீக்கம், சீழ் வடிதல் போன்ற அறிகுறிகள் காணப்படும். எலி கடித்தால் உடனடியாக மருத்துவரை பார்த்து டெட்டனஸ் தடுப்பூசி போட வேண்டியது அவசியம்.

எலிகளால் அசுத்தம் செய்யப்பட்ட உணவை சாப்பிட்டால் தொற்று ஏற்பட்டு கடுமையான வாந்தி மற்றும் தொண்டைப்புண் ஆகிய அறிகுறிகள் தென்படும். எலிக்கடி காய்ச்சல் தொற்று நோய் அல்ல. ஒரு நபரிடம் இருந்து மற்றொரு நபருக்கு பரவாது.

காய்ச்சல், மூட்டு வலி, குமட்டல் போன்றவை எலிக்கடி காய்ச்சலின் பொதுவான அறிகுறிகளாகும். இதற்கு மருத்துவரை கலந்தாலோசித்து தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம். இல்லையெனில் இதயம், மூளை மற்றும் தண்டுவடம் பகுதியில் இன்ஃப்ளமேஷன், மூளைக்காய்ச்சல் மற்றும் எலும்பு சேதம் போன்ற உடல் நல பாதிப்புகள் உண்டாகும். எலிக்கடி காய்ச்சலுக்கு உரிய சிகிச்சை எடுக்காவிட்டால் உயிருக்கு ஆபத்தான சிக்கல்கள் கூட உண்டாகலாம்.

வீட்டில் எலி வந்தால் விரட்டுவது எப்படி என்று பார்க்கலாம்:

எலி வரும் இடத்தில் சிறிது பஞ்சு எடுத்து புதினா எண்ணையை நனைத்து வீட்டின் மூலை முடுக்குகளில் இரண்டு மூன்று நாட்கள் வைக்க இந்த வாசனை பிடிக்காமல் எலிகள் ஓடிவிடும்.

எலியை பிடிக்க எலிப்பொறியை வைக்கலாம். எலிப்பொறியில் எளிதில் மாட்டுவதற்கு உருளைக்கிழங்கு மாவாலான பவுடரை வீட்டின் மூலை முடுக்குகளில் தூவி விட நல்ல பலன் கிடைக்கும்.

எலி அடிக்கடி நடமாடும் இடங்களில் பிளாஸ்டர் ஆஃப் பாரீஸ் மற்றும் கொக்கோ பவுடரைக் கலந்து போட்டு வைக்க அதை சாப்பிடும் எலி தாகத்திற்கு தண்ணீர் குடித்தவுடன் இறந்துவிடும்.

எலிகளுக்கு பூண்டு, கிராம்பு வாசனை பிடிக்காது. எனவே, கிராம்பு எண்ணெய் அல்லது பூண்டை நசுக்கி தண்ணீர் கலந்து தெளித்து விட எலிகள் வராது.

எலிகள் இருண்ட மங்கலான குப்பைகள் இருக்கும் இடத்தில் அதிகம் காணப்படும். எனவே, எப்பொழுதும் வீட்டை சுத்தமாகவும் காற்றோட்டமாகவும் வைத்துக் கொண்டால் எலியின் வருகையை தடுக்கலாம்.

சாக்கடைக் குழாய்கள், சிங் குழாய்களை அடைத்து மூடி வைக்க வேண்டும். இல்லையெனில் குழாய் வழியாக எலிகள் உள்ளே வர வாய்ப்பு உண்டு.

வீட்டின் ஜன்னல்களுக்கு வலை அடித்து வைக்கலாம். கொசுவுடன் எலி தொல்லையும் இராது.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT