வீடு / குடும்பம்

இந்த வாசனைப் புல்லிற்கு இத்தனை மகிமையா?

கோவீ.ராஜேந்திரன்

லகின் டாப் டென் வாசனைப் பொருட்களில் ஒன்று இந்தப் புல். இந்தப் புல்லை ஒடித்து முகர்ந்து பார்த்தால் எலுமிச்சை சாறு வாசம் வரும். எல்லா வகையான மண் வகைகளிலும் நன்கு செழித்து வளரக் கூடியது. இதனை தமிழில், ‘வாசனைப் புல்’ என்று அழைக்கிறார்கள். இதில் எண்ணிலடங்கா மருத்துவ குணங்கள் உள்ளன. இது கொஞ்சம் எலுமிச்சை, கொஞ்சம் இஞ்சியின் வாசனையும் கொண்டது. அதனால், ‘எலுமிச்சைப் புல்’ அல்லது ‘இஞ்சிப் புல்’ என அழைக்கப்படும் இந்த, ‘லெமன் கிராஸ்’ பற்றி சற்று அறிந்து கொள்வோமா?

* உடல் எடையைக் குறைக்க வேண்டுமா? மிக குறைந்த கலோரிகளை கொண்ட லெமன் கிராஸ் டீயை தொடர்ந்து குடித்து வருவது நல்ல பலன் தரும்.

* லெமன் கிராஸ் புல்லை அரைத்து உடலின் வயிறு, புட்டம், இடுப்பு போன்ற பகுதிகளில் பற்று போல் பூசி, ஒரு மணி நேரம் கழித்து காய்ந்த பிறகு வெந்நீரில் கழுவி வர, ஆறு மாதங்களில்  உடல் பருமன் குறையும். உடலிலுள்ள கெட்ட கொழுப்பு கரைத்து விடும்.

* ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டு மூச்சுத் திணறல் ஏற்படும்போது லெமன் கிராஸ் எண்ணெய்யை இரண்டு சொட்டு சுடுநீரில் அல்லது பாலில் கலந்து மூக்கில் விட, மூச்சு விடுவதில் உள்ள சிரமம் குறையும்.

* உலர்ந்த சருமத்தில் சிலருக்கு அரிப்பு ஏற்படும். இதற்கு லெமன் கிராஸ் ஆயில் 20 மி.கி. எடுத்து அதனுடன் 50 மி.கி. தேங்காய் எண்ணெய் கலந்து அரிப்பு உள்ள இடங்களில் பூசி, ஒரு மணி நேரம் கழித்து வெந்நீரில் குளித்து வர, சில நாட்களில் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

* இந்த லெமன் க்ராஸ் புல் பல்வேறு பொருட்கள் தயாரிக்க மூலப்பொருளாகப் பயன் படுகிறது. அவற்றில் லெமன் க்ராஸ் டீ, லெமன் க்ராஸ் பவுடர், லெமன் க்ராஸ் ஆயில், லெமன் க்ராஸ் சோப்பு, லெமன் க்ராஸ் ரூம் பிரெஷ்னர் போன்றவை சில.

* லெமன் க்ராஸ் செரிமானத்தை சீராக வைத்து மலச்சிக்கலை தடுக்கும். இதிலுள்ள சிட்ரஸ் அமிலம் உடலில் தேங்கி உள்ள கழிவுகளை வெளியேற்றி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

* லெமன் க்ராஸ் டீ குடித்து வந்தாலே அதிலுள்ள வைட்டமின் எ மற்றும் வைட்டமின் பி உங்களின் முடி உதிர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.

* இது வெளிப்புறப் பயன்பாட்டுக்கு மிகவும் உகந்தது. சருமப் பிரச்னைகளையும், வலிகளையும் நீக்க உதவுகிறது.

* லெமன் க்ராஸ் மிகச்சிறந்த கிருமி நாசினியாகவும், மணமுட்டியாகவும் பயன்படுகிறது.

* தீபங்களில் இந்த எண்ணெய்யை பயன்படுத்தும் போது நறுமணமும், புத்துணர்வும் உண்டாகும்.

* இதில் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய ஆன்டி-ஆக்ஸிடண்ட்ஸ்கள் அதிகம் உள்ளன. ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை முழுவதுமாக குறைக்க இந்த லெமன் க்ராஸ் டீ பேருதவியாக உள்ளது.

* ரத்த சர்க்கரையின் அளவையும் லெமன் க்ராஸ் சீர் செய்து, இன்சுலின் சுரப்பை சரி செய்கிறது.

* உடலுக்குத் தேவையான ஆற்றலை அளிப்பதுடன், பெண்களுக்கு மாதவிடாய் வலியையும் இது குறைகிறது.

திருவிழாக்களில் கொடியேற்றம் மற்றும் வாகன பவனியின் தத்துவம் தெரியுமா?

வெற்றிக்கு உதவும் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள கற்க வேண்டிய 7 பழக்கங்கள்!

அத்திப்பழம் வெஜிடேரியனா அல்லது நான்-வெஜிடேரியன் ஃபுரூட்டா?

ஆரோக்கியத்தை வாரி வழங்கும் வாழைப்பூ!

'வித்யாலட்சுமி திட்டம்' - உயர்கல்வி நிறுவனங்களில் பயில மாணவர்களுக்கு கல்விக் கடன் உதவி!

SCROLL FOR NEXT