வீடு / குடும்பம்

குடையே...குடையே!

குடைகளின் வரலாறு!

ஆர்.ஜெயலட்சுமி

ரோமானியப் பெண்கள் தங்கள் கூந்தலை அழகாக அலங்கரித்துக்கொண்டு வெளியே சென்றபோது காற்றாலும் மழையாலும் கூந்தல் அலங்காரம் கலையாமல் இருக்கச் சிறு குடைகளை சேடிகள் அவர்கள் கூடவே பிடித்துக்கொண்டு போனார்கள். மேற்கு நாடுகளில் குடை முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்டது இப்படித்தான். அக்குடை தோலினாலோ முரட்டுத் துணியினாலோ ஆனதாக இருந்தது. பின்னர் அது சற்றுப் பெரிதாகச் செய்யப்பட்டு ரோமானியப் பிரபுக்களால் வெயிலுக்கும் மழைக்கும் பயன்படுத்தப்பட்டது. அப்பிரபுக்களுக்குப் பின்னே சேவகர் குடைகளைப் பிடித்துக்கொண்டு போவது வழக்கமாக இருந்தது.

குடையை ஆங்கிலத்தில் அம்பரெல்லா என்கிறோம். இது ‘அம்பரா’ என்ற லத்தீன் சொல்லிலிருந்து வந்தது. இதற்கு நிழல் என்பதுதான் அர்த்தம்.

ல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒரு வீரன் தனது காதலி மழையில் நனையாமல் இருக்க ஒரு சிறு மரத்தைப் பிடித்து பிடுங்கி எடுத்து, அதை அவளுக்குக் குடையாகப் பிடித்ததாகக் கிரேக்க புராணம் ஒன்று கூறுகிறது.

க்களைப் பாதுகாப்பதற்காக கண்ணன் மலையையேப் பிடுங்கிக் குடை பிடித்ததாக இந்துப் புராணங்கள் தெரிவிக்கப்பட்டன.

ண்டையக் காலத்தில் கிழக்கு நாடுகளில் குடைபிடிப்பது உயர்ந்த அந்தஸ்தைக் காட்டும் சின்னமாக இருந்தது. இந்தியா, பர்மா, சீனா முதலான நாடுகளில் அரசர்களும், அரசப் பிரதானிகளும் மட்டுமே குடைகளைப் பயன்படுத்தினர். அக்குடைகள் பட்டுத் துணியினாலானவை. தமிழ் மன்னர்களின் அரியணைகளை வெண் கொற்றக் குடைகள் அலங்கரித்தன. குடிமக்கள் பயன்படுத்திய குடைகள் ஓலையால் ஆனவை.

துணியிலான சாதாரணக் குடைகளை மக்கள் பயன்படுத்த ஆரம்பித்தது பதினாறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான். அவ்வாறு துணிக் குடைகளை முதன்முதலில் பயன்படுத்திய பெருமை இத்தாலிய மக்களையே சேரும். அவர்களி்ல் போப்பாண்டவருக்கும் மதகுருக்களுக்கும் பின்னால் குடை பிடித்துச் செல்வது மரியாதை வழக்கமாக இருந்தது. நம் நாட்டிலும் பண்டைக்காலம் முதல் இன்றுவரை உற்சவ மூர்த்திகளுக்கும், சமயாச்சாரியார்களுக்கும் பெரிய குடைகளைப் பிடித்துச் செல்வது வழக்கமாக இருக்கிறது.

ஃபிரான்ஸில் பதினாறாம் நூற்றாண்டுக்கு முன்பு திமிங்கில எலும்புகளின் மேல் தோலையோ, எண்ணெய்த் துணியையோ வைத்து இணைத்துக் குடையாகப் பயன்படுத்தினர். அவை கனமாகவும், பார்ப்பதற்கு அவலட்சணமாகவும் இருந்தன.

தினெட்டாம் நூற்றாண்டில் லண்டன் உணவு விடுதிகளில் மழையின்போது வாடிக்கைக்காரர்களுக்கு வாடகைக்கு கொடுக்கக் குடைகளை வைத்திருந்தனர்.

பிரிட்டனில் சிலர் குடைகளைச் சொந்தமாகப் பயன்படுத்த ஆரம்பித்தபோது அதை மற்றவர்கள் இழிவாகக் கருதினர். காரணம், எந்தவிதமான வாகனமும் இல்லாமல் நடந்து செல்லும் ஏழைகளின் சின்னமாக அது கருதப்பட்டது. 1750ல் லண்டனில் முதன்முதலாகத் தனக்கென்று சொந்தமாகக் குடை வைத்திருந்தவர் ஜோனஸ் ஹான்வே என்பவராகும். அவரைக் கண்டு எள்ளி நகையாடினர் மற்றவர்கள். ஆனால், அவர்களே பின்னர் நிரந்தரமாகக் குடையைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர்.

ங்கிலாந்தைச் சேர்ந்த ஜோனாஸ் ஹான்வே என்ற வியாபாரி எதையும் வியாபாரமாக்கி பணம் பண்ணும் திறமைசாலி. வியாபார நிமித்தம் உலகம் முழுக்க சுற்றியவர். 18ம் நூற்றாண்டின் மத்தியில் பாரசீகத்துக்கு வியாபார விஷயமாக போயிருந்தார் ஹான்வே. ஒரு நாள் கடைவீதியில் நின்று கொண்டிருந்தபோது பாரசீக இளவரசர் அவ்வழியாக தம் பாரிவாரங்கள் சூழ போனார். இளவரசரின் தலைக்கு மேல் கூடாரம் போன்ற ஒருவகை சாதனத்தை பிடித்துக்கொண்டு சென்றனர். அது பட்டுத்துணியால் செய்யப்பட்டு தங்கத்தால் பூ வேலை செய்யப்பட்டிருந்தது. ஹான்வே இதைப் பார்த்தார். அவர் மனதில் ஒரு ஐடியா தோன்றியது. அதில் சில மாற்றங்களைச் செய்து மடக்கி விரிக்கும் வகையிலும், பட்டுத் துணிக்கு பதிலாக கனமான காக்கி துணியையும் கொண்ட தயார் செய்தார்.  வெய்யிலிலிருந்து காப்பாற்றும் சாதனம் என்று மட்டுமே  அவர் கருதியதால், அதை வெப்ப நாடான பாரசீகத்திலேயே விற்க முயன்றார். சாதாரண தனிமனிதனை குடி பிடிக்க செய்வது அரசரை அவமதிக்கும் செயல் என்று கூறி அவரை நாட்டை வீட்டே துரத்தியடித்தனர்.

இங்கிலாந்து திரும்பிய ஹான்வே யோசித்தார். வெய்யிலுக்கு மட்டுமல்லாது மழையிலிருந்து நனையாமல் காப்பாற்றவும் இது உதவும் என்று விளம்பரம் செய்து விற்க முற்பட்டார். அந்தோ பரிதாபம், மழைக்காலங்களில் இங்கிலாந்து மக்கள் வெளியே செல்ல கோச் வண்டிகளையும், பல்லக்குகளையுமே நம்பியிருந்தனர். இந்த குடையால் தங்களது வருமானம் குறைந்துவிடும் என்று பயந்து கோச் வண்டிக்காரர்களும் பல்லக்கு தூக்கிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

18ஆம் நூற்றாண்டில் குடைகளில் மாற்றம் ஏற்பட்டது. கனமற்ற குடைகள் உலோகக் கம்பிகளுடன் தோன்ற ஆரம்பித்தன. அந்தக் காலத்தில் குடைகள்  விலை மிக்கவையாக இருந்தன. ஆகவே கிளப்புகள், கல்லூரிகள், சர்ச்சுகள் ஆகியவற்றில் குடைகள் பொதுச் சொத்தாக வைக்கப்பட்டு தேவைப் படுகிறவர்களுக்கு மட்டும் அப்போதைக்கப்போது தரப்பட்டன.

1780களில் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் பொது உபயோகத்திற்காக ஒரே ஒரு குடை மட்டும் இருந்தது. அதைப் பெற்றுப் பயன்படுத்த பெரும் கூட்டமே காத்திருந்தது. இதே நூற்றாண்டில் லண்டன் ஓட்டல்களில் குடைகளை வாடகைக்கு விடும் வழக்கமும் இருந்தது.

காலப்போக்கிற்கும் நாகரிகத்திற்கும் ஏற்றவாறு குடைகளில்தான் எத்தனையெத்தனை மாற்றங்கள்... இரகங்கள்!

ஒரு பட்டனை அழுத்தினால் விரிந்துகொள்ளும் குடை மடக்கிக் கைக்குள் அடக்கி்க்கொள்ளும் குடை; வேலைக்கு தகுந்த குடை; தகுதிக்குத் தக்க குடை என்று விதவிதமாகக் குடைகள் வந்திருக்கின்றன. இத்துடன் பாவையர் தம் மென்கரங்களில் இலகுவாகப் பற்றிச் செல்லக்கூடிய கண்கவர் பட்டுக் குடைகள் வேறு.

இன்று உலகிலேயே குடைகள் தயாரிப்பதில் முதன் மையாகத் திகழும் நாடு ஜப்பான்தான். இந்தியாவில் ஆண்டுக்கு 80 லட்சம் குடைகள் விற்பனையாகின்றன.

பிக்கி உண்டியலின் வரலாறு தெரியுமா?

வேகமாகச் சுழலும் இறந்த நியூட்ரான் நட்சத்திரத்தை கண்டறிந்த விஞ்ஞானிகள்! 

இன்சுலின் சுரப்பை இயற்கையாக சீராக்க உதவும் எளிய உணவுகள்!

உடலில் மருக்கள் இருந்தால் சாதாரணமாக நினைக்காதீங்க… ஜாக்கிரதை! 

கனக விநாயகர் கணக்கு விநாயகர் ஆன கதை தெரியுமா?

SCROLL FOR NEXT