Personal Resilience https://www.linkedin.com
வீடு / குடும்பம்

தனிப்பட்ட சகிப்புத்தன்மை என்றால் என்ன? அதை வளர்த்துக்கொள்வது எப்படி?

எஸ்.விஜயலட்சுமி

னிப்பட்ட சகிப்புத்தன்மை (Personal Resilience) என்பது துன்பங்கள், மன அழுத்தம் அல்லது எதிர்பாராத மாற்றங்களைத் தாங்கும், மாற்றியமைக்கும் மற்றும் மீளக்கூடிய திறன் ஆகும். இது மன உறுதி, நெகிழ்வுத்தன்மை மற்றும் நேர்மறையான கண்ணோட்டத்தின் கலவையை உள்ளடக்கியது. இது தனிநபர்கள் சவால்களை சமாளிக்கவும் வலுவாக மீண்டு வரவும் உதவுகிறது.

தனிப்பட்ட சகிப்புத்தன்மையின் முக்கியக் கூறுகள்:

1. உணர்ச்சி கட்டுப்பாடு: ஆரோக்கியமான முறையில் உணர்ச்சிகளை நிர்வகிக்கும் மற்றும் பதிலளிக்கும் திறன். பிறர் தேவையில்லாமல் ஒருவரைப் பற்றி விமர்சனம் செய்யும்போது உடனே அவர்களுக்கு பதிலடி தரும் விதமாக செயல்படாமல் ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்து அவர்களின் உணர்ச்சிகளை ஒப்புக்கொண்டு பின்னர் நிதானமாக அவர்களுக்கு பதில் அளிக்கலாம். பிறரின் விமர்சனத்தில் உள்ள உண்மைத்தன்மையை அமைதியாக ஆராயலாம். அதில் மாற்றிக்கொள்ள வேண்டிய குணநலன்கள் ஏதாவது இருந்தால் அதைப் பற்றி யோசிக்கலாம். மாற்றிக் கொள்ளவும் செய்யலாம். அவர்களுக்கு நிதானமாக பதில் அளிக்கும்போது மனதில் நிம்மதியும் அமைதியும் ஏற்படும்.

2. கடினமான சூழ்நிலைகளில் கூட நேர்மறையான கண்ணோட்டத்தை வெளிப்படுத்துதல்: விடுமுறையில் பிக்னிக் அல்லது டூர் செல்லலாம் என்று அதற்கான திட்டங்கள் தீட்டி தயாராக இருக்கும்போது மோசமான வானிலை காரணமாகவோ அல்லது வேறு ஏதாவது தவிர்க்க முடியாத காரணங்களால் அந்தத் திட்டங்கள் பாழாகிவிட்டது என்று வைத்துக் கொள்வோம். அப்போது சூழ்நிலையையோ அல்லது குறிப்பிட்ட நபர்களையோ திட்டுவதற்கு பதிலாக அந்த சூழலை ஏற்றுக் கொள்ளலாம். வேறு ஒரு நாள் டூர் செல்லலாம் என்று நேர்மறையாக சிந்திப்பதன் மூலம் மோசமான சூழ்நிலையை மகிழ்ச்சியானதாக மாற்ற முடியும்.

3. செயல் திறனை அதிகரித்துக் கொள்ளுதல்: தொழில் முறையில் அல்லது பணி புரியும் இடத்தில் சவாலான சிக்கலான வேலைகள் வந்து சேர்ந்தால் அவற்றைப் பற்றி புகார் செய்வதோ அல்லது முணுமுணுத்து அதை தவிர்க்கவும் செய்யாமல் அந்த சவாலான வேலைகளை செய்ய வேண்டும். அதை எதிர்கொள்வதற்கான தன்னுடைய திறனையும் நம்பிக்கையையும் ஆதாரமாக வைத்து அந்த செயலை மிக அழகாக செய்து முடிக்கலாம்.

4. வளைந்து கொடுக்கும் தன்மை: புதிய சூழ்நிலைகள் மற்றும் மாற்றங்களுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளுதல் அவசியமான ஒன்றாகும். வழக்கமாக செல்லும் பாதையில் ஏதேனும் இடர் வந்து மாற்று பாதையில் செல்ல வேண்டும் என்ற சூழ்நிலை வந்தாலும் அல்லது திடீரென புதிய சூழ்நிலையில் பணிபுரிய நேர்ந்தாலோ அதைப் பற்றி புலம்பாமல், விரக்தி அடையாமல் புதிய சூழ்நிலையில் அமைதியாக உற்சாகமாக பணிபுரிவது தனிப்பட்ட சகிப்புத்தன்மையின் அடையாளம் ஆகும். அதனால் விளையக்கூடிய நன்மைகளை விரைவில் அடையலாம்.

5. வலுவான, ஆதரவான உறவுகளை உருவாக்குதல்: மிகவும் நேசித்த ஒருவரின் இழப்பு அல்லது புறக்கணிப்பு போன்ற தனிப்பட்ட நெருக்கடியின்போது நெகிழ்ச்சியான நபர் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளாமல் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை அணுகி தங்கள் மனதை அமைதிப்படுத்தி கொள்வார்கள்.

6. சிக்கல் தீர்க்கும் திறன்: வாழ்க்கையில் சிக்கல்கள் தோன்றினால் அதைப்பற்றி கவலைப்படாமல் தானே சரி செய்து கொள்வது அல்லது நிபுணர்களின் உதவியுடன் சரி செய்து கொள்வது மனமுதிர்ச்சியின் அடையாளம் ஆகும்.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT