உணவு உண்ணும் போது பயன்படுத்தப்படும் நடத்தை நெறிகளை, உணவுப் பழக்க வழக்க முறைகள் (Table Manners) என்கின்றனர். இதில் பாத்திரங்களின் பயன்பாடும் அடங்கும். உணவுப் பழக்க வழக்கங்களுக்கு வெவ்வேறு கலாச்சாரங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன. ஒவ்வொரு குடும்பமும் அல்லது குழுவும் இந்த விதிகளை எவ்வளவு கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்பதற்கான அளவுகோல்களும் இருக்கின்றன.
இந்தியாவிலும் உணவளிப்பவரும், உணவு உண்பவர்களும் சில நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டுமென்று வலியுறுத்தப்படுகின்றது.
உணவு பரிமாறுவதற்கு முன்பு தண்ணீர் வைக்கப்பட வேண்டும்.
பொதுவாக தட்டில் அனைத்து உணவுப் பொருட்களும் சிறிய அளவில் வழங்கப்படும்.
உணவு பரிமாறுபவர் உண்பவருக்கு தேவையானதைக் கேட்டு வழங்கிட வேண்டும்.
உணவு உண்ணும் போது அல்லது உணவைப் பெறும்போது வலது கையைப் பயன்படுத்துவதே சரியான நெறிமுறையாகப் பார்க்கப்படுகிறது.
உண்ணுவதற்குப் பயன்படுத்தப்படும் எந்தவொரு பாத்திரங்களையும் உணவு உண்ணும் கையால் தொடுவது பொருத்தமற்றது.
சாப்பிடுவதற்கு வலது கை பயன்படுத்தினால், இடது கை மூலமாகப் பரிமாற வேண்டும்.
மேசையில் அமர்வதற்கு முன்பும், சாப்பிட்ட பிறகும் கைகளைக் கழுவுவது அவசியமானதாகும்.
ஒரு நேரத்தில் சிறிய அளவு உணவு எடுத்துக் கொள்ளப்படுவதன் மூலம் உணவு வீணாகாமல் இருப்பதை உறுதி செய்கிறது.
பரிமாறப்படும் உணவுக்கு மதிப்பளித்து தட்டில் உள்ள ஒவ்வொரு உணவுப் பொருளையும் சாப்பிட்டு முடிப்பது முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
பாரம்பரியமாக, கூடுதல் உப்பையோ, மிளகாயையோ கேட்காமல், உணவைப் பரிமாறியபடியே உண்ண வேண்டும். (இருப்பினும், உப்பு அல்லது மிளகுக்கான தனிப்பட்ட விருப்பத்தை வெளிப்படுத்துவதும் அதைக் கேட்பதும் இப்போது ஏற்றுக் கொள்ளத்தக்கதாக உள்ளது.)
உணவைச் சிதைப்பது அல்லது விளையாடுவது ஏற்றுக்கொள்ள இயலாதது.
மிதமான வேகத்தில் சாப்பிடுவது முக்கியம், மிக மெதுவாக சாப்பிடுவது உணவை விரும்பாததைக் குறிக்கலாம் மற்றும் மிக விரைவாக சாப்பிடுவது முரட்டுத்தனமாகக் கருதப்படலாம்.
உணவகத்தில் இருக்கும் போது மற்றொருவரின் தட்டைப் பார்ப்பது தவறானதாகக் கருதப்படுகிறது.
மெல்லும்போது ஒலி எழுப்புவது பொருத்தமற்றது. சில இந்திய உணவுப் பொருட்கள் ஒலியை உருவாக்கலாம்; எனவே வாயை மூடி மிதமான வேகத்தில் மெல்லுவது அவசியம்.
கவனச்சிதறல் அல்லது முரட்டுத்தனத்தைக் குறிக்கும் குறிப்பிட்ட நடத்தைகளுக்கு உணவு உண்ணும் போது கவனம் செலுத்தப்பட வேண்டும்.
சாப்பிடும் போதும், பெரியவர்கள் இருக்கும் போதும் செல்பேசி அழைப்புகளுக்குப் பதிலளிப்பது, செய்திகளை அனுப்புவது மற்றும் தகாத வார்த்தையினைப் பயன்படுத்துவது போன்றவை பொருத்தமற்றதாகக் கருதப்படுகிறது.
உணவளிப்பவர் அல்லது மூத்த நபர் தனது உணவை முடிப்பதற்கு முன்பு ஒருவர் மேசையை விட்டு வெளியேறக்கூடாது.
பொதுவாக, யார் முதலில் சாப்பிட்டு முடித்தாலும் மற்றவர்களுக்காகக் காத்திருப்பார்கள்; அனைவரும் உணவு உண்ட பிறகு அனைவரும் மேசையை விட்டு வெளியேறுவார்கள்.
உணவளிப்பவர் அல்லது பெரியவரின் அனுமதியைக் கேட்காமல் மேசையை விட்டு வெளியேறுவது அநாகரீகமாகக் கருதப்படுகிறது.
இதுவரை இந்நடைமுறைகளைக் கடைப்பிடிக்காதவர்கள், இனியாவது கடைப்பிடித்து நற்பெயரைப் பெற்றிடுங்கள்.