good touch and bad touch 
வீடு / குடும்பம்

ஆண் குழந்தைகளுக்கும் இதை சொல்லிக் கொடுக்கலாமே! 

கிரி கணபதி

ஒரு குழந்தைக்கு அதன் வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பான, ஆரோக்கியமான சூழலை உருவாக்கித் தருவது பெற்றோரின் முக்கிய கடமைகளில் ஒன்றாகும்.‌ குறிப்பாக, இன்றைய உலகில் குழந்தைகளின் பாதுகாப்பு என்பது பெரும் கவலைக்குரிய விஷயமாக உள்ளது. குழந்தை பருவ பாலியல் துஷ்பிரயோகம் என்பது ஒரு பெரும் பிரச்சனை. இது பல குடும்பங்களை வெகுவாக பாதிக்கிறது. இந்தப் பிரச்சனையை தடுப்பதற்கான முதல் படி குழந்தைகளுக்கு சரியான பாலியல் கல்வியை அளிப்பதாகும். குறிப்பாக, ஆண் குழந்தைகளுக்கு Good Touch, Bad Touch பற்றி கற்பிப்பது மிகவும் அவசியம். 

ஆண் குழந்தைகளுக்கு யார் பாலியல் தொல்லை கொடுக்கப் போகிறார்கள்? என நீங்கள் நினைக்கலாம். ஆனால், அவர்களும் பாலியல் சீண்டல்களை எதிர்கொள்ளும் வாய்ப்புள்ளது.‌ குழந்தைகளுக்கு, தங்கள் உடல் தங்களுக்கு சொந்தமானது என்ற உணர்வை ஒவ்வொரு பெற்றோரும் ஏற்படுத்த வேண்டும். தங்கள் உடலின் எந்தப் பகுதியில் மற்றவர்கள் தொடலாம், தொடக்கூடாது என்பதை அவர்கள் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும் உதவ வேண்டும். 

‘Good Touch’ என்பது அன்புடன், பொது இடங்களில், உடைகள் மேல் செய்யப்படும் தொடுதல்கள். உதாரணமாக, அம்மா அப்பா தங்கள் பிள்ளைகளை அனைப்பது, முத்தமிடுவது போன்றவை. அதேசமயம், ‘Bad Touch’ என்பது குழந்தைகள் தனியாக இருக்கும்போது உடைகள் உள்பகுதியில், அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் செய்யப்படும் தொடுதல்கள். 

குழந்தைகளுக்கு, Bad Touch பற்றி தெளிவாக விளக்கி, அவர்கள் அதை அடையாளம் காணும் வகையில் கற்பிப்பது அவசியம். எந்த ஒரு தொடுத்தாலும் அவர்களுக்கு அசௌவுகரியத்தை ஏற்படுத்தினால், அது Bad Touch ஆக இருக்கலாம் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஒருவேளை, ஆண் குழந்தைகள் தவறான தொடுதலுக்கு ஆளானால், யாரிடம் அதை சொல்ல வேண்டும் என்பதை அவர்களுக்குத் தெளிவாக சொல்லிக் கொடுக்க பெற்றோர், ஆசிரியர்கள் நம்பிக்கைக்குறிய உறவினர் அல்லது அவர்களுக்கு தெரிந்த மற்றொரு நபர் போன்றவரிடம் தங்கள் பிரச்சனையை வெளிப்படுத்த அவர்களுக்கு ஊக்கம் கொடுக்க வேண்டும். 

சில சமயங்களில் தவறான தொடுதலுக்கு ஆளான குழந்தைகள் தங்களைத் தாங்களே குற்றவாளியாக நினைத்துக் கொள்ளக்கூடும். எனவே, குழந்தைகளுக்கு பெற்றோர்கள் தன்னம்பிக்கையை வளர்ப்பது மிகவும் முக்கியம். தவறு நடந்தால் அது குழந்தையின் தவறு அல்ல என்பதை அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். குழந்தைகளுக்கு, Good Touch, Bad Touch பற்றி கற்பிப்பது ஒரு சிக்கலான செயல்முறையாக இருந்தாலும், இது மிகவும் முக்கியமானது. இதன் மூலமாக குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படுவதில் இருந்து பாதுகாக்க முடியும். 

பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் சமூகத்தில் உள்ள அனைவரும் இணைந்து இந்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஆண் குழந்தைகளுக்கும் ஒரு பாதுகாப்பான சூழலை உருவாக்கி, அவர்கள் தங்கள் வாழ்க்கையை சுதந்திரமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ உதவ வேண்டும். 

Jeff Bezos-ஐ கோடீஸ்வரன் ஆக்கிய விதி என்ன தெரியுமா? 

முகத்தை மூடித் தூங்குபவரா நீங்கள்? அச்சச்சோ போச்சு!

குளிர்காலத்தில் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் உணவுகள்!

முகம் ஒரு ஓவியம் என்றால், உதடுகள் அதன் இதயம்!

மரங்களைப் பற்றி மனிதர்கள் ஏன் கவலைப்படுவதில்லை?

SCROLL FOR NEXT