1 Hour Rule. 
Motivation

1 Hour Rule: உங்களை கோடீஸ்வரராக மாற்றும் தந்திரம்!

கிரி கணபதி

அதிக பணம் சம்பாதித்து பணக்காரர்களின் லிஸ்டில் சேர வேண்டும் என்பது பலரது லட்சியமாக இருக்கிறது. இதை நாம் எந்த மந்திர தந்திரத்தாலும் சாதிக்க முடியாது என்றாலும், சில நுட்பங்களைப் பின்பற்றி அந்த லட்சியத்தை நாம் அடையலாம். அத்தகைய நுட்பங்களில் 1 Hour Rule என்பதும் அடங்கும்.

1 Hour Rule என்றால் என்ன? 

“ஒரு மணி நேர விதி” என்பது வருமானம் ஈட்டுவதற்கான நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதற்கு நேரத்தையும், முயற்சியையும் முதலீடு செய்யும் ஒரு கொள்கையாகும். அதாவது, ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரத்தை அதிக மதிப்புள்ள வேலைகளுக்கு நாம் செலவிடுவது மூலமாக, நம் உற்பத்தித் திறனை அதிகரித்து, வளர்ச்சிக்கான வாய்ப்புகளை மேம்படுத்த முடியும். தொடர்ச்சியாக தினசரி ஒரு மணி நேரத்தை இத்தகைய செயல்பாடுகளுக்கு ஒதுக்குவதன் மூலம், பணம் சம்பாதிக்கும் திறனைப் பெருக்கி, உங்கள் நிதி நிலையை உயர்த்திக் கொள்ளலாம். 

ஒரு மணி நேர விதியை எப்படி செயல்படுத்துவது? 

1. வருமானத்தை உருவாக்கும் செயல்களை அடையாளம் காணுங்கள்: எந்தத் துறையில் அதிக வருமானம் ஈட்ட முடியும் என்பதை முதலில் அடையாளம் காண வேண்டும். இதற்கு பல விஷயங்களை ஆராய்ந்து பார்த்து, உங்களுக்கு எது சரிப்பட்டு வரும் என்பதை முதலில் தேர்ந்தெடுங்கள். 

2. அட்டவணை தயார் செய்யுங்கள்: வருமானம் ஈட்டும் செயல்களைக் கண்டறிந்ததும், அதில் எது மிக முக்கியமோ அதற்கு முன்னுரிமை அளித்து, அதை எப்படியெல்லாம் செயல்படுத்தப் போகிறீர்கள் என்பதற்கான அட்டவணையை தயார் செய்யுங்கள். ஒவ்வொரு நாளும் எந்த நேரத்தில் இந்த செயல்பாட்டுக்கு உங்கள் நேரத்தை ஒதுக்கப் போகிறீர்கள் என்பதையும் தேர்வு செய்து உங்களை முதலில் தயார்படுத்திக் கொள்ளுங்கள்.

3. கவனச்சித்திரல்களை அகற்றவும்: நீங்கள் நிர்ணயித்துள்ள ஒரு மணி நேரத்தில் அதிக கவனச்சிருக்கல்களை ஏற்படுத்தும் விஷயங்கள் அனைத்தையும் அகற்றவும். இப்படி செய்யும்போது முழுமூச்சுடன் அந்த வேலையில் உங்களால் ஈடுபட முடியும்.

4. Deep Work: நீங்கள் தேர்ந்தெடுத்த செயல்பாட்டில் ஆழ்ந்த கவனத்துடனான ஈடுபாடு மிக முக்கிய. அந்த நேரத்தில் வேறு எதைப் பற்றியும் நீங்கள் சிந்திக்கக் கூடாது. இந்த நேரத்தை மேலும் சிறப்பாக மாற்ற Pomodoro டெக்னிக் போன்ற நுட்பங்களைப் பயன்படுத்தி, உங்களது உற்பத்தித்திறனை மேம்படுத்திக் கொள்ளுங்கள். 

5. நீண்ட காலம் முயற்சிக்கவும்: ஒரு மணி நேர விதியின் உண்மையான ஆற்றல், நீங்கள் எந்த அளவுக்கு முழு ஈடுபாட்டுடன் செயல்படுகிறீர்கள் மற்றும் உங்களது நீண்டகால அர்ப்பணிப்பில் உள்ளது. என்ன ஆனாலும் தினசரி ஒரு மணி நேரத்தை இதற்காக நீங்கள் செலவிட்டே ஆக வேண்டும். இதன் மூலமாக நிச்சயமாக உங்களது நிதி நிலைமையை மேம்படுத்த முடியும்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT