Can we change our life in 30 days? Image Credits: New Trader U
Motivation

30-30 Approach: நம் வாழ்க்கையை 30 நாட்களில் மாற்ற முடியுமா?

நான்சி மலர்

நம்முடைய வாழ்க்கையில் முன்னேற்றம் வர வேண்டும் எனில் எந்த செயல் நமக்கு முன்னேற்றம் தரும் என்று நினைக்கிறோமோ அந்த செயலை தொடர்ந்து 30 நாட்களுக்கு செய்தால் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும் என்று சொல்வது உண்மையா?

நம்மை சுற்றி பலவிதமான யோசனைகள் இருந்தாலும் அதை தொடர்ந்து விடாமுயற்சியுடன் செய்யும் போதே முன்னேற்றம் அடைய முடிகிறது. நாம் செய்யும் செயலில் தீவிரமான விடாமுயற்சி இருக்க வேண்டும் உடலளவிலும், மனதளவிலும் ஒன்றாக சேர்ந்து ஒரு செயலை செய்து முடிக்கும் போது நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

உதாரணத்திற்கு உடல் எடையை குறைக்க வேண்டும், உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள். அந்த விஷயத்தில் முழுமனதாக ஈடுப்பட்டு தொடர்ந்து 30 நாட்கள்  செய்யும் போது நிச்சயமாக முதல் நாளுக்கும், 30 ஆவது நாளுக்கும் தன்னுள் நிறைய மாற்றத்தை உணரலாம். ஒரு செயலை தொடர்ந்து 30 நாட்கள் செய்யும் போது நம்முடைய மூளை அதை ஒரு பழக்கமாக மாற்றிக்கொள்ளும்.

மனதை ஒருநிலைப்படுத்தி ஒரு காரியத்தை செய்வது என்பது ஒருநாள் அல்லது இரண்டு நாள் செய்துவிட்டு விட்டுவிடுவது கிடையாது. அதை தொடர்ந்து செய்வதன் மூலம் நம் மூளைக்கு அந்த விஷயத்தை நாம் கற்று கொள்ள விரும்புகிறோம் என்று சொல்கிறோம். இப்படி ஒருநிலையாக ஒரு செயலை செய்யும் போது வெற்றி உடனேயே கிடைத்துவிடாது. அதற்கு பொறுமையாக காத்திருக்க வேண்டும்.

1. கற்க வேண்டும்.

2. செயல்படுத்த வேண்டும்.

3. முயற்சித்தல் வேண்டும்.

4. விடாமுயற்சி.

இந்த நான்கையும் தொடர்ந்து செய்து வருவது நிச்சயமாக புதுவிஷயங்களை வாழ்வில் கற்றுக்கொள்ள உதவும்.

புதிதாக ஒரு விஷயத்தை வாழ்க்கையில் கற்க வேண்டும் என்று நினைப்பவர்கள் 30-30 Approach செயல்முறையை பயன்படுத்தவும். நீங்க செய்ய நினைக்கும் செயலை 30 நாட்களுக்கு தினமும் 30 நிமிடம் செய்யவும். இதை தொடர்ந்து 30 நாட்களுக்கு செய்ய வேண்டும்.

தினமும் வாக்கிங் போக வேண்டும் என்று நினைப்பவர்கள். அந்த நேரம் வேறு வேலைகள் வந்தால் வாக்கிங் போகாமல் நாளை பார்த்து கொள்ளலாம் என்று விட்டுவிடுவார்கள். இந்த 30-30 Approach ஐ முயற்சிக்கும் போது, நாம் செய்ய நினைக்கும் செயலுக்காகவே நேரம் ஒதுக்கி விடாமுயற்சியுடன் தொடர்ந்து முயற்சித்து பார்க்கவேண்டும். அப்படி செய்யும் போது நிச்சயம் வாழ்க்கையில் மாற்றத்தை உணரலாம்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT