Motivation 
Motivation

நம் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைக்கவும் சுவாரஸ்யமாக மாற்றவும் யாரால் முடியும்?

சுடர்லெட்சுமி மாரியப்பன்

நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கும் இந்த வாழ்க்கையில் மகிழ்ச்சி, கவலை என மாறி மாறி வந்தாலும் எதுவும் நிலையாக இருப்பதில்லை. மகிழ்ச்சியான தருணங்களில் இனிமையாக தோன்றும் வாழ்க்கை, கவலையான தருணங்களில் வெறுப்பாகதான் தோன்றும். இதுவே இயல்பு....

அனைவருமே அவரவர் தேவைக்காகத்தான் ஓடிக் கொண்டிருக்கின்றனர். பல பேரின் வாழ்க்கை, "வந்தான் சுட்டான் போனான் ரிபிட்டு" என்ற சினிமா வசனத்தை போல்தான் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் அனைவரது மனதும் எதிர்பார்ப்பது சுவாரஸ்யமான தருணங்களையும் மகிழ்ச்சிகரமான வாழ்க்கை முறையையும்தான். நம் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைக்கவும் சுவாரஸ்யமாக மாற்றவும் யாரால் முடியும்?

நம்மால் மட்டுமே முடியும்.. பலர் தங்களது அதிக சிந்தனையால் (Overthinking) தான் நிகழ்கால மகிழ்ச்சியை இழக்கின்றனர். உண்மையில் ஒரு தனிமனிதனாக நாம் எப்படி வாழ்கிறோம் என்பதில் தான் நம் மகிழ்ச்சி அடங்கியுள்ளது. உங்கள் சிந்தனையை தெளிவுப்படுத்துங்கள். இந்த 5 விஷயங்களில் நீங்கள் தெளிவாக இருந்தால், வாழ்க்கை உங்களுக்கும் மகிழ்ச்சிகரமான ஒன்றுதான்.

வாழ்க்கைக்கு தேவையான 5 முக்கிய விஷயங்கள்:

Health is Wealth

முதல் விஷயம் நம்முடைய ஆரோக்கியம். எதிர்காலதிற்காக சேமித்து வைக்க எண்ணி ஆரோக்கியத்திற்கு செலவு செய்ய தயங்காதீர்கள். உடல் ஆரோக்கியம் மிக முக்கியம். ஏனெனில் நம் இறுதி மூச்சு வரை நம்மோடு பயணிப்பது நம் உடல் மட்டும்தான். அதை நன்றாக பார்த்துக் கொள்வதுதான் நம் முதல் கடமை.

Confidence & Self love

இரண்டாவது விஷயம் தன்னம்பிக்கை மற்றும் சுயஅன்பு. உங்களை நீங்கள் நம்புங்கள். உங்களை நீங்கள் முதலில் காதலியுங்கள். மற்றவர்கள் தன் மீது அன்பு காட்ட வேண்டும் என்று எதிர்பார்க்காமல், உங்கள் மீது நீங்கள் அன்பு காட்டுங்கள்.

Being Grateful

மூன்றாவது நன்றியுணர்வு. உங்கள் வாழ்க்கைக்கும், உங்கள் வாழ்க்கையில் இருப்பவர்களுக்கும், கிடைக்கும் அனைத்திற்கும் நன்றி கூறிக் கொண்டே இருங்கள். உங்களுக்கு தேவையான அனைத்தும் உங்களை வந்து சேரும்.

Be honest to yourself

நான்காவது விஷயம் உங்களுக்கு நீங்களே நேர்மையாக இருங்கள். மற்றவர்கள் உங்களை நம்ப வேண்டும், மற்றவர்கள் எனக்கு நேர்மையாக இருக்க வேண்டும் என்று வாழாமல், 'என்னை நான் நம்புகிறேன்', 'எனக்கு நான் உண்மையாக இருக்கிறேன்' என்று வாழ்ந்தாலே மனநிறைவாக இருக்கும்.

Live in the present

ஐந்தாவது, நிகழ்காலத்தில் வாழ்வது. கடந்த காலத்தை நினைத்து வருந்துவது, எதிர்காலத்தை நினைத்து கவலை படுவது என வாழாமல் நிகழ்காலத்தில் வாழுங்கள். அந்த நிமிடம் உங்களுக்கு கிடைத்த நேரத்தை சிறப்பாக பயன்படுத்தி மகிழ்ச்சியாக இருங்கள்.

காலம், புகைப்படம் போல் அப்படியே நின்று விடாது. கடந்து விட்ட நேரம் மீண்டும் கிடைக்காது. கிடைக்கும் நேரத்தை அனுபவித்துக் கொள்ள வேண்டும். நமது எண்ணங்களை சிறப்பாக பயன்படுத்தினாலே மகிழ்ச்சி தானாக கிடைக்கும்....

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT