Lifestyle stories Image credit - pixabay
Motivation

மன உறுதியை மேம்படுத்தும் 5 குறிப்புகள்!

பொ.பாலாஜிகணேஷ்

ன உறுதி ஒரு மனிதனுக்கு உயிர் போன்றது. ஏனென்றால் நம் செயல்பாடுகள் அனைத்திலும் மனஉறுதி இருந்தால் மட்டுமே எந்த காரியத்திலும் வெற்றிபெற முடியும். ஏதோ செய்தோம் என்று இல்லாமல் மனது உறுதியோடு செய்யப்படும் அனைத்து காரியங்களும் நிச்சயம் வெற்றியைத்தரும். மன உறுதி இல்லாதவர்கள் மற்றும் மன உறுதியை மேம்படுத்த விரும்புபவர்கள் இந்த 5 குறிப்புகள் உதவும்.

1-இயற்கையோடு இணையலாம்.

பூங்கா, காடு, வயல் போன்ற பச்சை நிறம் கொண்ட இடங்களில் மற்றும் ஏரி, கடல் போன்ற நீலநிறம் கொண்ட இடங்களில் நம்முடைய நேரத்தைச் செலவிடும்போதோ, வசிக்கும்போதோ மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு ஆகியவை குறைவதாகவும் மேலும், கவலையும் அச்சமும் கலந்த மனநிலை கொண்டவர்கள் தெளிவான மனநிலையைப் பெறுகிறார்கள்.

 2-மன்னிப்பு

மனித வாழ்க்கை என்பது சவால்கள் நிறைந்தது. அத்தகைய சவால்களை எதிர்கொண்டு பாதிக்கப்படும்போது, சிக்கலுக்கு ஆளாகின்ற போதும் நம்மை நாமே குறை கூறிக் கொண்டு சுருங்கிவிடக் கூடாது. வாழ்க்கைப் பாடங்கள்தான் நம்மை முழு மனிதனாக ஆக்குகின்றன என்பதை அறிந்து, நீங்கள் தெரியாமல் தவறு செய்துவிட்டாலோ, உங்களிடம் குறைகளைக் கண்டறிந்தாலோ அடுத்தமுறை இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்து உங்களை நீங்களே மன்னிக்கப் பழகுங்கள்.

3-மற்றவர்களுக்கு உதவலாம்

தன்னார்வ சேவை செய்யும்போதும், பிறருக்கு உதவி செய்யும்போதும் மூளையின் குறிப்பிட்ட பகுதிகள் தூண்டப்பட்டு மனமகிழ்ச்சியை நமக்கு கொடுப்பதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. மேலும், அன்பு மற்றும் உதவி செய்யும் குணத்துடன் இருப்பதால் நாம் வாழ்வின் நோக்கமான நற்பெயரையும் அடையலாம்.

4-நிகழ்காலத்தில் வாழ்வோம்

நேற்றில் இருந்து கற்றுக்கொள், இன்றைய நாளில் வாழ், நாளை மீது நம்பிக்கைகொள் என்பது ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறிய பொன்மொழி. கடந்த கால தவறுகள், கசப்புகளை நினைத்துப் பார்க்காமல், எதிர்காலம் பற்றி பயப்படாமல், தேவையில்லாமல் பிரச்னைகளை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்காமல் இருப்பதன் மூலம், நிகழ்காலத் தருணங்களை அனுபவித்து மகிழ்ச்சியுடன் வாழமுடியும்.

5-உறவுகள் இனிமை தரும்

நமக்கு எது மகிழ்ச்சியும், உடல் நலனும் தருகின்றது என்று 80 ஆண்டுகளுக்கு மேலாக நடந்த அறிவியல் ஆய்வின் முடிவுகள் கூறும் ஒரே பதில் என்ன தெரியுமா இனிமையான உறவுகள் என்பதுதான். இனிய உறவுகளுடன் நாம் நேரம் செலவிடும்போது மகிழ்ச்சியை பெறுகின்றோம். அப்படி மகிழ்ச்சியுடன் இருப்பதால் நல்ல உடல்நலம் கிடைக்கின்றது. தனிமையில் இருப்பவர்களின் மகிழ்ச்சியும் வாழ்நாளும் குறைகின்றன. ஆகவே, இனிமையான உறவுகளைப் போற்றிப்பாதுகாப்போம்.

திரைத்துறையில் ஒரு மாபெரும் கவிஞனின் பங்கு!

வருந்தும் மரத்தை தெரிந்து கொள்வோம் வாருங்கள்!

உங்களை மற்றவர்கள் Demotivate செய்வதை எப்படி கையாள வேண்டும் தெரியுமா?

ராமன் 'சாப்பாட்டு ராமன்' ஆன கதை தெரியுமா மக்களே!

News 5 – (05.10.2024) ‘மூவாயிரம் ரயில் சேவைகள் தொடங்கப்படும்‘: அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்!

SCROLL FOR NEXT