Bruce Lee 
Motivation

புரூஸ் லீ-யிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய 6 வாழ்க்கைப் பாடங்கள்! 

கிரி கணபதி

புரூஸ் லீ 20ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த, அதிக செல்வாக்கு மிக்க தற்காப்புக் கலை வல்லுநர்களில் ஒருவர். அவர் தனது திரைப்படங்களின் மூலம் மட்டுமல்லாமல், தனது வாழ்க்கை முறையின் மூலமாகவும் பலரது கவனத்தை ஈர்த்தார். புரூஸ்லீயின் வாழ்க்கைப் பயணம் நம் அனைவருக்கும் பல பாடங்களைக் கற்றுத் தருகிறது. எனவே, அவரது வாழ்க்கையில் இருந்து நாம் கற்றுக் கொள்ளக்கூடிய 6 முக்கியமான பாடங்களை இந்தப் பதிவில் காண்போம்.

  1. கடின உழைப்பின் முக்கியத்துவம்: புரூஸ் லீ தனது வெற்றியை தன் கடின உழைப்பின் மூலமாகவே பெற்ற. அவர் தினமும் பல மணி நேரம் பயிற்சி செய்வர். அவரது கடின உழைப்பும், அர்ப்பணிப்பும்தான் அவரை சிறந்த நபராக மாற்றியது. நாம் எதை அடைய விரும்பினாலும், அதற்காக கடினமாக உழைக்க வேண்டும் என்பதை அவரது வாழ்க்கை நமக்கு கற்றுத் தருகிறது. 

  2. தன்னம்பிக்கை: புரூஸ் லீ தனது திறமைகளை ஆழமாக நம்பினார். அவர் தன்னால் எதுவும் செய்ய முடியும் என்ற நம்பிக்கை கொண்டிருந்தார். தன்னம்பிக்கை என்பது வெற்றியின் முக்கியமான காரணி என்பதை புரிந்து கொண்டு, நம்மை நம் நம்பினால், எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும் என்பதை உணர வேண்டும்.

  3. தொடர் கற்றல்: புரூஸ் லீ தன் வாழ்நாள் முழுவதும் புதிய விஷயங்களைக் கற்றுக் கொண்டே இருந்தார். அவர் பல்வேறு தற்காப்பு கலைகளைக் கற்றுக்கொண்டார். மேலும், பல புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதில் ஆர்வம் கொண்டிருந்தார். நாம் எதையும், எந்த வயதிலும் கற்றுக்கொள்ளலாம் என்பதற்கு சான்றாக அவர் திகழ்ந்தார். 

  4. உடல் மற்றும் மன ஆரோக்கியம்: உடல் மற்றும் மன ஆரோக்கியம் மிகவும் முக்கியம் என புரூஸ் லீ கருதினர்.  தன் உடலையும், மனதையும் வலுப்படுத்த ஆரோக்கியமான உணவுகளை உண்டார், தியானம் செய்தார், பல மணி நேரம் உடற்பயிற்சி செய்து வந்தார். நமது உடல் மற்றும் மன ஆரோக்கியம் இரண்டுமே ஒன்றோடொன்று இணைந்தவை. இதில் ஒன்று இல்லாமல் மற்றொன்றை சிறப்பாக வைத்திருப்பது சாத்தியமில்லாதது. 

  5. தன்னடக்கம்: புரூஸ் லீ தனது கோபத்தைக் கட்டுப்படுத்த கற்றுக்கொண்டார். அவர் எந்த சூழ்நிலையிலும் தன்னடக்கத்தைக் கடைபிடித்து வந்தார். தன்னடக்கம் என்பது வெற்றியின் மற்றொரு முக்கியமான காரணி. நாம் நம்மை கட்டுப்படுத்திக் கொள்ள கற்றுக்கொண்டால் நாம் வாழ்க்கையில் பல சாதனைகளை செய்ய முடியும். 

  6. வாழ்க்கையை முழுமையாக வாழ்வது: புரூஸ் லீ அவரது வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்தார். தனது கனவுகளை நிறைவேற்றிக் கொண்டு வாழ்க்கையை முழுமையாக அனுபவித்தார். நாமும் அவரைப் போலவே வாழ்க்கையில் பிடித்த விஷயங்களை செய்து கொண்டு, அதை முழுமையாக அனுபவிக்க வேண்டும். 

புரூஸ் லீயின் வாழ்க்கை நமக்கு பல பாடங்களை கற்றுத் தருகிறது. அவரது கடின உழைப்பு, தன்னம்பிக்கை போன்ற விஷயங்கள், நாம் நம் வாழ்க்கையில் கட்டாயம் பின்பற்ற வேண்டியவை. அவரது வாழ்க்கையில் இருந்து நாம் பலவற்றைக் கற்றுக்கொண்டு, நாம் நம் வாழ்க்கையை சிறப்பாக மாற்றிக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.‌ 

மூங்கிலில் ஒளிந்திருக்கும் அற்புதங்கள்..!

ஊரின் சமவெளிகளில் நடத்தப்படும் கர்நாடக மாநில நாட்டுப்புறக் கலை 'பயலாட்டம்'

ஜப்பான் நாட்டுக் கதை - மனம் திருந்திய மன்னர்

இந்த மாதம் மீன்கள் உண்பதை தவிர்க்கவும்... எந்த மாதம்? ஏன்?

'என்னால் முடியும்' தம்பி! உன்னால்?

SCROLL FOR NEXT