எதற்கெடுத்தாலும் அவசரப்படுவது, கட்டுப்பாடு இல்லாமல் இருப்பது போன்ற குணங்கள் உங்களிடம் இருக்கிறதா? அப்போ கவனமாக இருங்கள். ஏனெனில், நீங்கள் வாழ்க்கையில் வெற்றியாளராக வரவேண்டு மென்றால் அதற்கு Delayed Gratification என்னும் குணம் கண்டிப்பாக இருக்க வேண்டும். இதைப் பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
1970 ஆம் ஆண்டு Walter Mischel என்னும் சைக்காலஜிஸ்ட் 32 சின்ன குழந்தைகளை பொதுவாக தேர்ந்தெடுக்கிறார். அந்த 32 சின்ன குழந்தைகளையும் ஒவ்வொரு வகுப்பறைக்கு அழைத்து செல்கிறார்கள். அந்த ரூமில் இருந்த மேஜையின் மீது Marshmallow சாக்லேட் வைக்கப்பட்டிருந்தது.
இப்போது ஆசிரியர் அந்த குழந்தையிடம், ‘நான் வெளியிலே சென்றுவிட்டு சிறிது நேரத்தில் வந்துவிடுவேன். உனக்கு வேண்டுமென்றால் நீ இந்த சாக்லேட்டை சாப்பிடலாம். இல்லை நான் வரும் வரை காத்திருந்தால் இதனுடன் சேர்த்து இன்னொரு சாக்லேட்டை பரிசாக தருவேன்’ என்று சொல்லிவிட்டு செல்கிறார். இதைப்போலவே அந்த 32 குழந்தைகளுக்கும் செய்கிறார்கள்.
அந்த பரிட்சையில் 80 சதவீதக் குழந்தைகள் ஆசிரியர் வருவதற்கு முன்பே ஒரு கட்டுப்பாடு இல்லாமல் சாக்லேட்டை எடுத்து சாப்பிட்டு விடுகின்றனர். ஆனால், மீதமிருக்கும் 20 சதவீதக் குழந்தைகள் ஆசிரியர் வரும்வரை காத்திருந்து அந்த சாக்லேட்டை பரிசாக வாங்குகிறார்கள்.
இந்த பரிட்சை அத்தோடு முடியவில்லை. பலவருடங்கள் கழித்து தற்போது அந்த சின்னக் குழந்தைகளெல்லாம் இப்போது என்ன செய்கிறார்கள் என்று பார்த்தபோது, அந்த சாக்லேட்டை எடுத்து சாப்பிட்ட 80 சதவீதக் குழந்தைகள் Self confidence என்பதே இல்லாமல் ஒரு மிடில் கிளாஸ் வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருந்தனர்.
ஆனால், சாக்லேட்டை எடுத்து சாப்பிடாமல் கட்டுப்பாட்டுடன் இருந்த 20 சதவீதக் குழந்தைகள் இன்று இந்த சமுதாயத்தில் பெரிய பதவியிலும், உயர்ந்த நிலையிலும் வெற்றிப்பெற்ற நபராக வாழ்ந்து வருகிறார்கள்.
இந்த கதையில் நடந்தது போலத்தான். நாமும் நம்முடைய வாழ்க்கையில், சின்ன சந்தோஷத்திற்கு ஆசைப்பட்டு பெரிய வெகுமதியை இழந்து விடுகிறோம். நம்மிடமும் Delayed Gratification என்ற எண்ணம் இருந்தால் நீங்களும் வெற்றி பெறுவதற்கு நிறையவே வாய்ப்புகள் இருக்கிறது. பொறுமையாக காத்திருக்கும் எண்ணம், கட்டுப்பாடு, ஒழுக்கம் ஆகிய குணங்களே சிறந்த வெற்றியாளர்களை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.