Sunday 
Motivation

அதற்குள்ளேயே ஞாயிற்றுக்கிழமை ஓடிவிட்டதா என்று நினைப்பவரா நீங்கள்!

A.N.ராகுல்

ஞாயிற்றுக்கிழமை என்றாலே பெருவாரியான மக்களுக்கு ஒரு வித நிம்மதியைத் தரும், அது பள்ளிக்கூடம் போகும் மாணவர்கள் முதல் வேலைக்குப் போகும் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இருக்கும் ஒரே எண்ணம் இன்று ஒரு நாள் விடுமுறை என்ற சந்தோசமே. ஆனால், அது என்னமோ கண்ணை மூடி திறப்பதற்குள் அந்த ஒரு நாளான ஞாயிற்றுக்கிழமை வேகமாக ஓடி, அடுத்த நாளான திங்கட்கிழமை வந்து நம் கண்முன் நிற்கும். காரணம் எந்தளவு ஞாயிற்றுக்கிழமையை சிலர் விரும்புகிறார்களோ அந்தளவு திங்கள்கிழமையை வெறுப்பார்கள். ஏன் இப்படி? எப்படி இந்த எண்ணத்தைத் தவிர்க்கலாம்? வாருங்கள் பார்ப்போம்...

1. முன்னதாகவே தயாராக இருங்கள்:

ஒரு மாற்றம் நிகழப் போகிறது என்றால் அதற்கு முன்னதாகவே நாம் சில விஷயங்களை செய்து வைக்கவேண்டும். ஞாயிற்றுக்கிழமை மாலையில் சிறிது நேரம் செலவழித்து அடுத்த வார தொடக்கத்திற்குத் தயாராகுங்கள். உங்கள் துணிகளை அயன் செய்வது முதல், நீங்கள் உபயோகிக்கும் பையை பேக் செய்வது, அடுத்த நாள் என்ன சமைப்பது என்பதை முடிவு செய்து வைப்பது போன்றவற்றை மேற்கொள்ளலாம். பணிபுரிபவர்கள், உங்கள் அட்டவணையைத் தயாரித்து எந்தெந்தப் பணிகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதைக் கணக்கிடுங்கள். பள்ளி மாணவர்கள் தங்களின் படிப்புப் பொருட்களை திங்கட்கிழமை செய்வதற்கு பதிலாக ஞாயிற்றுக்கிழமையே செய்யலாம். இல்லத்தரசிகள் திங்கள் காலை அவசரத்தைக் குறைக்க ஒரு வாரத்திற்கான மெனுவையே திட்டமிடலாம். இந்தச் சிறிய சிறிய விஷயங்களை மேற்கொள்வதன் மூலம், திங்கட்கிழமையன்று நீங்கள் விழிக்கும்போது உங்கள் மனதை ஒரு கட்டுப்பாட்டில் வைத்து குறைவான சோர்வுடன் இருப்பீர்கள்.

2. ஒரு நேர்மறையான எண்ணத்துடன் தொடங்குங்கள்:

ஒரு நேர்மறையான எண்ணத்தைக் காலையில் உருவாக்குவதன் மூலம், அதை நாள் முழுவதும் கடைபிடிக்கலாம். முதலில் எது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறதோ அதன் மூலம் தொடங்குங்கள். அது ஒரு குறுகிய நடைப்பயணம் மேற்கொள்ளவது, காலை காபியுடன் சிறிது அமைதியான நேரத்தை செலவிடவாதோ அல்லது உங்களுக்கு உற்சாகமளிக்கும் இசையை ரசிப்பது போன்றவற்றைச் செய்யலாம். மாணவர்கள், ஒரு சுவாரசியமான தலைப்பை எடுத்து படிக்கலாம். இது அவர்களின் மனதை உற்சாகப்படுத்தலாம். இல்லத்தரசிகள் தியானம் அல்லது யோகாவை மேற்கொள்ளலாம். பணிபுரிபவர்கள் வேலைக்குச் செல்வதற்கு முன் தங்கள் மனதைத் தெளிவுபடுத்த ஒரு எளிதான நினைவாற்றல் பயிற்சியைச் செய்யலாம்.

3. சீக்கிரம் அடையக்கூடிய இலக்குகளை அமைக்கவும்:

திங்கட்கிழமைகளின் பதற்றம் பெரும்பாலும் நாம் கையாளப்போகும் பணிகளின் மொத்த அளவே. அதனால் ஒரே நேரத்தில் கையாள முயற்சிப்பதற்குப் பதிலாக, உங்கள் நாளை சில பகுதிகளாக பிரித்துக்கொள்ளுங்கள். சிறிய இலக்குகளை அமைத்து, ஒரு நேரத்தில் ஒரு பணியைத் திருப்தியாக செய்து அதற்கான வெற்றியை நீங்களே கொண்டாடிப் பாருங்கள். அதுவே, உங்கள் அடுத்தடுத்து பணியை முடிப்பதற்கு ஊன்றுகோலாக இருக்கும். மற்றும் புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்வது என்று சில நேர்மறையான அணுகுமுறையுடன் உங்கள் நாளை தொடங்குவது. திங்கட்கிழமை என்ற மன அழுத்தத்தைக் குறைக்க உதவும்.

4. அனைவரிடமும் இணைந்திருங்கள்:

கூட்டத்தோடு கூட்டமாய் இருக்கும்போது உங்கள் நாளைப் பற்றி நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்பதை உணர்ந்து பாருங்கள். காரணம் உங்கள் எண்ணங்களையும் அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ள குடும்பத்தினர், நண்பர்கள் அல்லது சக ஊழியர்களுடன் செலவிடுங்கள். மாணவர்கள் தங்கள் வகுப்பு தோழர்களுடன் அரட்டையடிக்கலாம், இல்லத்தரசிகள் தங்களுக்குத் தெரிந்தவர்களுடன் தொலைபேசியில் பேசலாம், மற்றும் பணிபுரிபவர்கள் சக ஊழியர்களுடன் நன்றாக பழகி ஒரு நல்ல நண்பர் குழுவை உருவாக்கிக்கொள்ளலாம். இப்படி சமூகத் தொடர்புகள் ஓர் உணர்ச்சிபூர்வமான ஆதரவை வழங்குவதோடு, ஒரு சாதாரணமான திங்கட்கிழமையை மிகவும் சுவாரஸ்ய நாளாக மாற்றும்.

5. சுய-கவனிப்பு:

உங்கள் தினசரி வழக்கத்தில் உங்களுக்குரிய சுயப் பாதுகாப்பு நடைமுறைகளை இணைத்துக்கொள்ளுங்கள். தேவையான பொழுதுபோக்கை அனுபவிப்பது, புத்தகம் படிப்பது அல்லது நிதானமாகக் குளிப்பது என்று எதுவேனாலும் இருக்கலாம். கூடுதலாக, இதற்கென்று நேரத்தை ஒதுக்குவதனால் உங்கள் மனம் லேசாகி தேவையற்ற எண்ணங்களை விரட்டச் செய்யும். இதனால் திங்கட்கிழமை மட்டும் அல்ல வாழ்நாள் முழுவதும் அனைத்து நாட்களையும் புத்துணர்ச்சியுடன் கடக்க முடியும்.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT