Charlie Chaplin 
Motivation

Charlie Chaplin Quotes: சார்லி சாப்ளினின் 15 அனுபவ தத்துவங்கள்!

பாரதி

லண்டனில் பிறந்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்த சார்லி சாப்ளினைத் தெரியாதவர்கள் யார் இருக்கிறார்கள்? கஷ்டங்களுடன் வளர்ந்தவருக்குதான், அனுபவப் பாடம் அதிகம் இருக்குமாம். சாதாரண மனிதனாகப் பிறந்து சாதனை வழியில் பயணித்த சார்லி சாப்ளின் கண்ட வலிகள் ஏராளம். அந்த வலிகளின் வழியில் பாடம் கற்றுக்கொண்டதும் ஏராளம். அந்தவகையில் அவரின் சிறந்த 15 தத்துவங்களைப் பற்றி பார்ப்போம்.

1. இந்தப் பொல்லாத உலகில் எதுவுமே நிரந்தரமல்ல, உங்கள் பிரச்சனைகள் கூட இல்லை.

2. நீங்கள் கீழேயே பார்த்துக்கொண்டிருந்தால், வானவில்லைக் காணமாட்டீர்கள்.

3. கண்ணாடியே என் சிறந்த நண்பன், ஏனெனில் நான் அழும்போது அது சிரிப்பதில்லை

4.  உங்களை நீங்களே நம்ப வேண்டும். அதுதான் ரகசியம்.

5. வரலாற்றுப் புத்தகங்களில் இருப்பதை விட கலைப்படைப்புகளிலேயே சரியான உண்மைகள் மற்றும் விவரங்கள் அதிகம் உள்ளன.

6.  உங்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது உங்களைப் பற்றி சிந்தியுங்கள், இல்லையெனில் இந்த உலகின் மிகச்சிறந்த நகைச்சுவையை நீங்கள் இழக்க நேரிடும்.

7.  தனக்குச் சமமானவர்களை எப்படி நடத்துகிறான் என்பதை வைத்து ஒரு மனிதனை மதிப்பிடாதீர்கள், தன்னைவிட தாழ்ந்தவர்களை எப்படி நடத்துகிறான் என்பதை வைத்து அவனை மதிப்பிடுங்கள்.

8.  இது ஒரு இரக்கமற்ற உலகம், அதை சமாளிப்பதற்கு ஒருவர் இரக்கமற்றவராக இருக்க வேண்டும்.

9.  நாம் அனைவரும் நம்மை நாமே இழிவாக நினைக்கின்றோம். அதுதான் இந்த உலகின் பிரச்சனை.

10.  நான் ஒரு பேரரசராக இருக்க விரும்பவில்லை. அது எனது தொழில் இல்லை. நான் யாரையும் ஆளவோ அல்லது வெற்றிகொள்ளவோ விரும்பவில்லை.

11. ஆசைப்படுவதை மறந்துவிடு. ஆனால், ஆசைப்பட்டதை மறந்துவிடாதே.

12. கனவுகள் எல்லாம் நினைவுகள் ஆகும், நிறைய காயங்களுக்குப் பிறகு.

13. என் வாழ்வில் எனக்கு மிக அதிகமான துன்பங்கள் இருக்கின்றன. ஆனால் அவை என் உதடுகளுக்கு தெரியாது. அவை எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்கும்.

14. பணம் நமக்கு எல்லாவற்றையும் கொடுக்கலாம். ஆனால், வறுமை நம்மிடம் இருந்து பறித்த சிலவற்றை பணத்தால் திருப்பித் தர முடியாது.

15. போலிக்கு தான் பரிசும் பாராட்டும். உண்மைக்கு ஆறுதல் பரிசு மட்டுமே.

வலிகளை பரிசுகளாக நினைத்து அனுபவித்தால், நீங்கள் நிறைய கற்றுக்கொள்ளலாம் என்பதுதான் சார்லி சாப்ளினின் வாழ்க்கைத் தத்துவமாகும்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT