Motivational articles 
Motivation

துணிவும் முயற்சியுமே வெற்றியைத் தரும்!

கவிதா பாலாஜிகணேஷ்

மக்கு வெற்றி கிடைக்க வேண்டுமென்றால் நாம் முதலில் செய்ய வேண்டியது முதலில் நம்மை புரிந்துகொண்டு நமக்கு எதில் ஆர்வம் இருக்கிறது என்பதை அறிந்துகொண்டு அதில் முயன்றால் நிச்சயமாக வெற்றி பெறலாம். 

முயற்சி செய்யாதவர்கள் யாருமே நிச்சயமாக வெற்றி பெற்றதாக இதுவரை சரித்திரம் இல்லை. ஒவ்வொரு வெற்றியாளர்களின் பின்னாலும் நீங்கள் பார்த்தால் அவரின் முயற்சிகள் மிகவும் அபாரமாக இருக்கும். நம்மை ஆச்சரியப்படுத்தும். முதலில் நம்மை நாம் புரிந்து கொண்டு முயன்றால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்பதை உணர்த்தும் ஒரு வெற்றி மனிதனின் கதை இப்பதிவில்

எழுத்தாளர் எட்கர் ஆலன்போ என்பவர் சிறுவனாக இருந்தபோது மிகவும் நோய்வாய்ப்பட்டவராகக் காணப்பட்டார். தனது மூன்று வயதில் தாய், தந்தையரை இழந்த அவரைப் பல்வேறு தொல்லைகளுக்கும் உட்படுத்தினார்கள் சமூக விரோதிகள். அநாதையாக ஒரு கல்வியகத்தில் சேர்ந்தபோது அடித்துத் துரத்தினார்கள்.

அவருடைய பதினேழு வயதில் அவரது இதயத்தில் கோளாறு இருப்பதாகக் கண்டறியப்பட்டது. ஆயினும் தனது இருபது வயதில் ஓர் எழுத்தாளராகத் தன்னை வெளிப்படுத்தினார் எட்கர் ஆலன். அவரது கட்டுரைகள், எழுத்து மடல்கள் வெகுவாகப் பாராட்டப்பட்டன.

அவர் எழுதிய துப்பறியும் நாவல்களுக்கு அமோக மதிப்பிருந்தது. அவரது ஒரு கவிதையின் படிவம் கலிபோர்னியாவிலுள்ள உலகப் புகழ்பெற்ற ஹன்டிங்டான் நூலகத்தில் அக்காலத்திலேயே ஐம்பதாயிரம் அமெரிக்க டாலர் மதிப்பில் வாங்கி வைக்கப்பட்டுள்ளது. 

வாழ்வின் தொடக்க நாட்களில் இளமைப் பொழுதுகளில் வேதனைகளைச் சுமந்த எட்கர் ஆலன் தன்னைச் சரியாகப் புரிந்துகொண்டு முயன்றதால் புகழ்பெற்றார்.

துன்பங்களையே பரிசாகப் பெற்ற துணிவோடு வாழ்வை எதிர்கொண்ட எட்கர் ஆலன் உழைப்பால் உயர்ந்துள்ளார். வேதனைகளுக்கு மத்தியிலும் தனது வாழ்க்கையில் அர்த்தமுள்ளது என்று முயல்பவர்கள் வரலாறு படைக்கிறார்கள்.

இனி எந்த காரியம் செய்ய நீங்கள் இறங்கினாலும் முதலில் துணிவோடு முயற்சி செய்யுங்கள். நிச்சயமாக நீங்கள் ஒரு வெற்றியாளராக திகழ்வீர்கள் என்பதில் சந்தேகமே இல்லை. இப்பொழுது புரிந்திருக்குமே வெற்றி என்பது வெளியில் இருந்து வருவது அல்ல எல்லாம் உங்களிடம்தான் உள்ளது.

நீரிழிவு நோய் வராமல் தடுக்க உதவும் வழிமுறைகள்!

விழிப்புணர்வு தேவை; வாழ்வியல் மாற்றங்களும் கட்டுப்பாடுகளும் மிக மிக தேவை!

Jawaharlal Nehru Quotes: குழந்தைகள் பற்றி ஜவஹர்லால் நேரு கூறிய 15 பொன்மொழிகள்!

தஞ்சை பெருவுடையார் கோயிலின் 10 ஆச்சரியத் தகவல்கள்!

இந்த 6 அறிகுறிகள் உங்கள் வாழ்க்கையில் இருந்தால் ஜாக்கிரதை!  

SCROLL FOR NEXT