Motivation Image Image credit- pixabay.com
Motivation

கண்ணுக்குத் தெரியாத உண்மைகள் பற்றித் தெரியுமா?

இந்திரா கோபாலன்

ருவர் பார்க்க  சாதாரணமாக இருந்தார். இவர் பல தொழில்களில் வெற்றி மேல் வெற்றி பெற்றவர்.  பல நிறுவனங்கள் தலைமுறை தலைமுறையாக  வெற்றி பெற்றுக் கொண்டிருக்கின்றன. அதன் ரகசியம் பற்றிக் கேட்டதற்கு அவர், தொழிலில் வெற்றி பெற வேண்டுமானால் இந்த பிரபஞ்சத்தைப் பற்றி நாம் புரிந்து கொள்ளல் வேண்டும். பணம் காசு நகை நிலம் நீச்சு என்று கண்ணுக்கு தெரியக்கூடிய விஷயங்களில்தான் ஆசை வைக்கிறோம்.

கண்ணுக்குப் புலனாகாத  ஒரு உலகத்திலிருந்து   உங்கள் மனதிலிருந்து நீங்கள் விரும்புகிற  ஆசைகளிலிருந்து எழுகின்றன. கண்ணுக்குத் தெரியாத அந்த உலகின் இயல்புகளைப் புரிந்து கொண்டால், கண்ணுக்குத் தெரிகிற இந்த உலகில் எல்லாவற்றையும் சாதிக்கலாம்.

பணம் வேண்டுமென்றால் பணத்தைப் பற்றி எண்ணாதீர்கள். பணத்தை உண்டு பண்ணும் அந்த சக்தியை  அந்த விஷயத்தை எண்ணுங்கள். தரமான பொருட்களை உற்பத்தி செய்வேன். எல்லோருக்கும் பயன்படக்கூடிய பொருளை உற்பத்தி செய்வேன். திருப்திதான் எனக்கு முக்கியம் என்று எண்ணுங்கள். வாங்குகிற மக்கள் மனதில் ஏற்படும் திருப்தி இருக்கிறதே. அதுதான் உங்களுக்கு மேலும் மேலும் பொருளை வாங்கித் தூண்டி பணத்தைக் கொண்டு வருகிறது.

கண்ணுக்குத் தெரியாத விஷயம்தான் கண்ணுக்குத் தெரிகிற காசு பணத்தைக் கொண்டு வருகிறது. காரை உற்பத்தி செய்த ஹென்றி ஃபோர்டு கோடீஸ்வரர் ஆனார். ஆனால் அவர் மனதில் நான் பணக்காரனாகப் போகிறேன். அதற்காக காரை உற்பத்தி செய்கிறேன் என்று நினைக்கவில்லை. "விரைவில் செல்லக்கூடிய கார் ஒவ்வொருவரிடமும் இருந்தால் எல்லோருக்கும் வசதியாக இருக்கும்" என்று எண்ணினார். மற்றவருக்கு ஏற்படும் நன்மையில் குறி வையுங்கள். பணம் நாய்க்குட்டிபோல் தானே உங்க பின்னால் வரும். 

அதேபோல் கார்னகி என்பவர் இரும்பை உருக்கும் ஒரு பெரிய தொழிற்சாலையை விலைக்கு வாங்கினார். இரும்பை எப்படி விற்பேன் என்று அவர் கவலைப் படவில்லை. அப்போதெல்லாம் ஆற்றைக் கடக்க மரப்பாலங்கள்தான் இருந்தது. அவை அடிக்கடி மக்கிப்போயின. "அடடா இரும்பிலே பாலம் கட்டினால் நெடுநாளைக்கு வருமே" என்று எண்ணினார். பிறர் நன்மையைக் கருதினார். இரும்பு டன் டன்னாக விற்பனை ஆயிற்று. எத்தனையோ காபி கடைகள் உள்ளன. சரவணபவன் காபி மாத்திரம் ஏன் புகழ் பெற்றது. மேலும் மேலும் கிளைகள் திறக்கப்பட்டன. அங்கு வருபவர்கள் திருப்தி சுவை சுகாதாரம் கவனிப்பு போன்ற விஷயங்கள் தான். செய்யும் தொழிலின்மீது காதல். அது பணமல்ல. ஆனால் அது பணத்தைக் கொண்டு வருகிறது. செய்யும் தொழிலே தெய்வம் என்றார் பாரதியார். உதாரணமாக எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி காசுக்காகவா பாடினார்.

இவர்கள் செய்யும் தொழிலில் ஐக்கியமாகி அதைச் செய்கிறார்கள். வாழ்வு என்பது ஒரு பயணம். அது உன்னதத்தை நோக்கிய பயணமாக இருக்க வேண்டும். தொழில் வெற்றியின் ரகசியமும் இதுதான்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT