high blood pressure Image credit - pixabay
Motivation

உணர்ச்சிகளை அடக்கினால் என்ன ஆகும் தெரியுமா?

வி.ரத்தினா

ம் உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல் மனதுக்குள்ளேயே அடக்கி வைத்திருப்பது நாள்பட்ட மன அழுத்தம், பதற்றம் மற்றும் மனச்சோர்வுக்கு வழிவகுக்கும். கோபம், சோகம் அல்லது பயம் போன்ற உணர்ச்சிகள் தொடர்ந்து அடக்கப்படும்போது அவை மன அழுத்த ஹார்மோன்களைத் தூண்டக்கூடும், இது காலப்போக்கில் நோயெதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தி  உயர் இரத்த அழுத்தம், இதயநோய் மற்றும் செரிமானப் பிரச்னையை உருவாக்கும்.

அடக்கப்பட்ட உணர்ச்சிகள் நம் மனம் மற்றும் சில நேரங்களில் உடல் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. உணர்ச்சிகளை அடக்குவது எப்போதாவது ஒரு தற்காலிக தீர்வாக இருக்கும்,  ஆனால் அவை வெறுமனே மறைந்துவிடும் என்று அர்த்தமல்ல.  அவை பொதுவாக மன அழுத்தம் மற்றும் பதற்றமாக வெளிப்படுகின்றன. இந்த அடக்கப்பட்ட உணர்ச்சிகள் தலைவலி, முதுகுவலி மற்றும் செரிமான பிரச்சினைகள் போன்ற உடல் உபாதைகளுக்கு வழிவகுக்கும்.

கோபம், துக்கம் அல்லது அவமானம் போன்ற உணர்ச்சிகள் தொடர்ந்து அடக்கப்பட்டால் அவை உடல் ரீதியாக வெளிப்படும். பதற்றம் மற்றும் மனச்சோர்வு போன்ற மனநலக் கோளாறுகளுடன் உணர்ச்சி அடக்குமுறை தொடர்புடையது என ஆய்வுகள் காட்டுகின்றன.. நாம் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் போது ​​கார்டிசோல் போன்ற மன அழுத்த ஹார்மோன்கள் உயர்த்தப்பட்டு  உடல் வீக்கத்திற்கு வழிவகுக்கிறது மற்றும் நோயெதிர்ப்பு செயல்பாட்டை சீர்குலைக்கிறது.

பெரும்பாலான ஆண் குழந்தைகள் அழுதால் "பொம்பள புள்ளபோல அழாதே" என்று அடக்கி விடுவார்கள். அதுதான் தொடக்கம். வளரும்போது அவர்கள் வீடு மற்றும் சமூக அழுத்தங்களால் ”நான் ஆண், உணர்ச்சி வசப்படக்கூடாது” என தன் உணர்வுகளை வெளிப்படுத்துவதில்லை. அடக்கப்பட்ட உணர்ச்சிகள் மற்றும் எதிர்பாராத அதிர்ச்சிகள் இளம் சிறுவர்களையும் வளர்ந்த ஆண்களையும் கவலை, மனச்சோர்வு மற்றும் உணர்ச்சி சிதைவுகளை ஏற்படுத்தும் என்பது பலருக்கும் புரிவதில்லை.. தேசிய மனநல கணக்கெடுப்பின் அறிக்கைப்படி ஆண்களில் மனநோயின் பாதிப்பு பெண்களுடன் ஒப்பிடும்போது அதிகமாக இருப்பதாகத் தெரியவருகிறது.

சிறு வயதிலிருந்தே உணர்ச்சியற்றவர்களாக இருக்கவும்  உடல் வலியை சமாளிக்கவும் கற்பிக்கப்படுகிறார்கள். இந்த உணர்வுகள் எவ்வளவு காலம் அடக்கப்படுகிறதோ அந்த அளவு  மன அழுத்தத்தை நிர்வகிப்பது மிகவும் கடினமாகி விடும். மேலும்  இது கவலை மற்றும் உணர்ச்சிக் கொந்தளிப்பில் முடியும் .ஆண்களும்  பெண்களைப் போலவே  உணர்ச்சிகளை அனுபவிக்கிறார்கள், புண்படுத்தப்படுகிறார்கள். மேலும் தங்கள் சோகத்தையும் வலியையும் பொதுவில் வெளிப்படையாகக் காண்பிக்காமல் உணர்ச்சிகளை அடக்குவதால் இளைஞர்களின் உளவியல் மற்றும் அறிவாற்றல் வளர்ச்சி கணிசமாக பாதிக்கப்படுறது. இதன் விளைவாக ஆல்கஹால் மற்றும் போதைப் பொருட்களை நாடுகிறார்கள் என்பது உண்மை.

நோயாளிகள் கூட தங்களின்  தீராத துயரம் அல்லது மனக்கசப்பு தங்களின் நோய்களுக்கு காரணம் என்பதை ஒப்புக்கொள்கிறார்கள். இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கோபம் அல்லது மன அழுத்தத்தைக் கொண்டிருக்கலாம். இதேபோல்  குற்ற உணர்ச்சியும் அவமானமும் செரிமான கோளாறுகளுக்கு பொதுவான தூண்டுதல்களாகும், ஏனெனில் உணர்ச்சி மன அழுத்தம் நேரடியாக குடலை பாதிக்கிறது.

உணர்ச்சிகளை பொதுவாக அடக்கப்பட்ட உணர்ச்சிகளை நிர்வகிப்பதற்கும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் மனநல நிபுணரின் உதவியை நாடுவது முக்கியமான ஒன்று. ஒரு மனநல நிபுணருடன் பேசுவது அடக்கப்பட்ட உணர்ச்சிகளை ஆராய்ந்து நிவர்த்தி செய்ய வழிவகுக்கும் மேலும் உணர்வுகளைப் புரிந்துகொள்வதற்கும் நிர்வகிப்பதற்கும் முடியும். சில நேரங்களில்  நம்பிக்கையான ஒருவருடன் பேசுவது உணர்ச்சிகளைச் செயலாக்கவும் குறைவாக உணரவும் உதவும். தியானம், ஆழ்ந்த சுவாசம் மற்றும் யோகா போன்றவை உணர்ச்சிகளை திறம்பட நிர்வகிக்க உதவும். முடிந்தவரை உணர்ச்சிகளை அடக்காமல் எவ்வகையேனும் வெளிப்படுத்துவது நல்லது.

தூங்கும்போது முடியை விரித்துப்போடுவது நல்லதா? அல்லது பின்னிப் போடுவது நல்லதா?

கால்சியம் சத்தை அதிகரிக்கும் 7 வகை பானங்கள்!

நவம்பர் 24: உலக ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் தினம்!

ப்ரீபயாடிக்குகள் மற்றும் புரோபயாடிக்குகள் குடல் ஆரோக்கியத்திற்கு ஏன் முக்கியம் தெரியுமா?

மகாவிஷ்ணு கையில் சுழலும் சுதர்சன சக்கரத்தின் பெருமைகள்!

SCROLL FOR NEXT