Persistence... 
Motivation

விடாமுயற்சியை மட்டும் விட்டு விடாதீர்கள்!

ம.வசந்தி

"முயற்சி சிறகுகளை அசைப்போம் முடிவில்லா வெற்றிகளைக் குவிப்போமஂ! சோம்பல் வில்லை ஒடிப்போம். சாதனை வானில் பறப்போம்!"

முயன்றால் வானவில்லைக் கூட நேராக நிமிர்த்த முடியும். தொடர்ந்து முயன்று கொண்டே இருந்தால், 'முடியாது' என்ற சொல் உங்களிடமிருந்து நிரந்தரமாக தன்னைத்தானே விடுவித்துக் கொள்ளும்.

எதையும் முயன்று சாதிக்கும் ஆக்க சக்தி உங்களிடம் இயற்கையாகவே இருக்கின்றது. அந்த ஆக்க ஆற்றலை செயல் ஆற்றலாக மாற்ற வேண்டும். ஆக்க சக்திக்கு செயல்வடிவம் கொடுக்கும்போதுதான் வெற்றிக் கிளைகளில் உங்களால் ஊஞ்சலாட முடிகின்றது.

அத்துடன் உங்கள் முயற்சி தொடர் முயற்சியாக இருந்தால்தான். உங்களால் மென்மேலும் உயர்ந்து கொண்டே இருக்க முடியும். நீங்கள் எவ்வளவு முயலவேண்டும் என்றால் வெற்றியடையும் வரை முயல வேண்டும். மேலும் வெற்றி என்பது ஒரு முடிவல்ல .அது ஒரு இனிய பயணம் என்பதையும் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

முன் வைத்த காலை பின் வைப்பதில்லை. வெற்றிக்கு முன்னால் ஓய்வென்பதில்லை என முழங்கிக் கொண்டே முயன்றால் "முடியாது" என்பது கிடையாது தோல்வி ஒரு ஆய்வுக்கூடம்.

நீங்கள் செய்யும் தொழிலில் சிறுசிறு தோல்விகள் நேரலாம். அதற்காக மனம் தளர்ந்து விடாதீர்கள் அத்தோல்வியை ஒரு படிப்பினையாக எடுத்துக் கொள்ளுங்கள். தோல்வி என்பது ஒரு ஆய்வுக்கூடம் .அதாவது தோல்வி நேர்வதற்கான காரணம் என்ன என்பதை திறந்த மனதுடன் எண்ணி ஆய்வுசெய்யும்பாது கிடைக்கும்காரணங்களை ஒவ்வொன்றாகப் பட்டியலிடுங்கள். பிறத அந்தக் காரணங்களை  எவ்வாறு நீக்குவது என்று யோசித்து அதற்கான செயல் திட்டத்தைத் தீட்டி செயல்படுங்கள். இதன்மூலம் தோல்வியை வெற்றியாக மாற்ற உங்களாலும் முடியும் என்பதை உணர்ந்து கொள்வீர்கள்.

வெற்றி என்பது தானாக வருவதில்லை அது வியர்வைத் துளிகளின் விளைச்சல். வெற்றி என்பதும் தோல்வி என்பலும் எப்பொழுதும் திர்ந்தரமானது அல்ல என்பதையும் நீங்கள் நன்கு புரிந்து கொள்வதோடு முயன்று கொண்டே இருக்க வேண்டும்.

ஏனென்றால் தொடர்ந்து முயற்சி செய்பவனுக்கு தோல்வி நிலையானது அல்ல என்பதையும்அவன் தொடர்ந்து முயன்று வெற்றியை அடைந்தே தீருவான்.

அதுபோல வெற்றியடைந்து விட்டோம். இனி நம்மை யாரும் அசைக்க முடியாது என்று மெத்தன எண்ணத்தில் மூழ்கி முடங்கிவிடுபவனுக்கு வெற்றி என்றும் நிலையானது அல்ல.

ஆகவே நீங்கள் தோல்வி அடைந்து விட்டால் அதற்காக மனம் தளராமல் தொடர்ந்து முயன்றால் நிச்சயம் வெற்றி அடைய முடியும். மேலும் வெற்றி அடைந்தவர் என்றால் உங்களுடைய வெற்றியைத் தக்க வைத்துக் கொள்வதற்கு தொடர்ந்து முயற்சி செய்யவேண்டும்.

பந்தா எதுக்குடா… கொஞ்சம் அடக்குடா.. நேத்துவர நாயர் கடை பன்னு தானே! 

விஸ்வரூப தரிசனம் என்றால் என்ன தெரியுமா?

இந்த பேய் படத்தைப் பார்க்க உங்களுக்கு தைரியம் இருக்கா? 

மக்கானாவில் அடங்கியுள்ள மகத்தான மருத்துவப் பலன்கள்!

இந்த சிற்றுண்டியில் இவ்வளவு நன்மைகளா?

SCROLL FOR NEXT