Motivation 
Motivation

முயன்றால் முடியும் எந்த வயதிலுமே!

வாசுதேவன்

இந்த நிகழ்வு பல வருடங்களுக்கு முன்பு சென்னையில் நடைப்பெற்றது.

அப்பொழுது மெட்ராஸ் 17 என்று அழைக்கப் பட்ட தி நகர் பகுதியில் உள்ள தக்க்ஷின பாரத இந்தி பிரஸார் சபா கட்டிடத்திற்கு ஒரு வயதானவர் வந்தார். அங்கு இருந்த சிறிய தபால் ஆபிசில் தனது வேலையை முடித்துக் கொண்டார். அடுத்து அருகில் இருந்த ஒரு அறைக்கு சென்றார். அது ஒரு வகுப்பு அறை.

அங்கு இருந்த பெண் இவரிடம், "என்ன வேண்டும்..?", என்று வினவினாள்.

இவர் அந்த பெண்ணிடம், இந்தி முதலில் இருந்து எழுத, படிக்க, பேச எவ்வளவு நாட்கள் ஆகும்; அதற்கான பீஸ் போன்ற விவரங்களை விளக்கும் படி கேட்டுக் கொண்டார்.

அந்த பெண்ணும் (அவர் தான் வகுப்பும் நடத்துபவர் ) பொறுமையாக விளக்கினார்.

எப்பொழுது சேர்ந்து கொள்ளலாம் என்று இவர் கேட்க, அந்த பெண், "இப்பொழுது கூட சேர்ந்துக் கொள்ளலாம்..!" என்று கூறிவிட்டு, "அட்மிஷன் யாருக்கு? உங்கள் பேத்திக்கா? எங்கே அவளை காணோம்..?" என்று கேட்டாள்.

இவரிடமிருந்து வந்த பதில், அந்த பெண்ணை திடுக்கிட வைத்தது.

"எனக்கு தான் அட்மிஷன். இந்தாங்க..!", என்று அவள் கூறிய பணத்தை எடுத்துக் கொடுத்தார்.

அவளால் நம்ப முடியவில்லை. என்ன செய்வது என்று திணறினாள்.

"சார்..! இங்கே இந்த அடிப்படை பிராத்மிக் வகுப்பிற்கு சிறுவர், சிறுமியர் அல்லவா சேர்ந்து படிப்பார்கள். உங்களால் அவர்களுடன் சேர்ந்து படிக்க முடியுமா?" என்று தயக்கத்துடன் கேட்டாள்.

சமீபத்தில் வேலையில் இருந்து ஓய்வு பெற்ற அவர் கூறிய பதில் அவளை மேலும் அசத்தியது.

"இவ்வளவு வருடங்கள் விடாமல் இந்த ஊரிலேயே வேலை செய்த எனக்கு சும்மா இருக்க பிடிக்கவில்லை. என்ன செய்வது என்று யோசித்த பொழுது ஏன், இந்தி கற்றுக் கொள்ளக் கூடாது என்று தோன்றியது. என் வீடும் இங்கிருந்து வெகு அருகில் உள்ளது. நேரத்தை வீணடிக்காமல் பயன் படுத்திக் கொள்ள விரும்புகிறேன்..!" என்றார்.

அவரது தன்னம்பிக்கை கவர்ந்தது. அட்மிஷன் கிடைத்தது.

மிகவும் சிரத்தையாக கற்றுக் கொண்டார். வீட்டில், கற்றுக் கொண்டவற்றை எழுதி பார்த்து சிறப்பாக படித்தார். முதலில் அவருடன் பயிலும் சிறுவர், சிறுமியர் தயங்கினாலும் நாளாடைவில் பிரெண்ட்ஸ் ஆக பழகினர். ஆர்வம், கூர்ந்து கவனித்தல், புரியாதவற்றை கேட்டு தெரிந்துக கொண்டு பயின்றார். மேலும் வகுப்பு தினங்களில், ஆரம்பிப்பதற்கு முன்பே வந்து காத்திருந்து கற்றுக் கொண்டார். அந்த பரீட்சையில் முதல் வகுப்பில் சிறப்பாக பாஸ் செய்து அசத்தினார்.

இந்த நிகழ்வினால் அறிந்துக் கொள்ள வேண்டியவை.

. கற்றுக் கொள்ள வயது எந்த வகையிலும் தடையாகாது.

. தயக்கம் கூடாது.

. ஆனால் நேர்மையான ஆர்வம் நிச்சயமாக ஒரு உந்துக் கோலாக அமையும். (sincere interest would serve as a motivational measure )

. இலக்கை அடைய ஒருமுகப் படுத்துதல் ( to reach the goal, concentration is crucial ) தேவை

. இடைவிடா முயற்சி அதன் ரிசல்டை அளிக்கும்.

. முயன்றால் முடியாதது இல்லை.

இளம் வயதினரைத் தாக்கும் புற்று நோய்கள் என்னென்ன தெரியுமா? 

கென்யாவில் 'தேனீ வேலி' - யானைகளையும் மனிதர்களையும் காக்கும் நல்முயற்சி!

விண்வெளியில் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக இருக்க முடியுமா?

தொற்று நோய்களைப் புரிந்துகொள்வது எப்படி?

வரமிளகாய் வத்தக்குழம்பும், ஸ்பைசி தொண்டக்காய் வறுவலும்!

SCROLL FOR NEXT