Everything needs moderation! 
Motivation

எதிலும் நிதானம் தேவை!

கிரி கணபதி

ம்முடைய வாழ்வில் நாம் எடுக்கும் முடிவுகளும், அதற்கு ஏற்றவாறு நாம் செய்யும் செயல்களும் தான் நம்மை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறது. அது நல்லதாகவும் இருக்கலாம் கெட்டதாகவும் இருக்கலாம்.

எதுவாக இருந்தாலும் முதலில் அடிப்படையினை நன்கு அறிந்து கொள்ளுங்கள். உங்களைப்பற்றி நன்கு அறிந்து கொள்ளுங்கள். ஏதேனும் செய்ய விரும்பினால், அதனைப் பற்றி நன்கு கற்றுணர்ந்து, அதற்கேற்ற வாய்ப்புகளை நோக்கி பயணம் செய்யுங்கள்.

உங்கள் வாழ்வில் யாரும் மாயாஜாலம் நிகழ்த்த வரமாட்டார்கள். நீங்கள் தான் உங்களுக்கான விஷயங்களை தேடிச் செல்ல வேண்டும்.

இதில் மிக முக்கியமாக நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது மக்களை புரிந்து கொள்வது. எந்த அளவுக்கு உங்களை சுற்றியுள்ளவர்களை நீங்கள் புரிந்து வைத்துள்ளீர்களோ, அந்த அளவுக்கு உங்களுடைய முடிவுகளில் தெளிவு என்பது ஏற்படும். பிறருக்கு என்ன தேவை, ஒருவரிடம் நாம் எப்படி வெளிப்பட வேண்டும் என்பதனை அறிந்து கொண்டாலே, நமக்குள் சிறந்ததொரு மனமாற்றம் நிகழும்.புதினா செடியை எப்படி வளர்க்க வேண்டும் தெரியுமா?

குறிப்பாக, உங்களுக்கு முதலில் உண்மையாக இருக்கப் பழகுங்கள். உங்களுக்குள் இருக்கும் குறைகளை ஏற்றுக்கொண்டு, அவற்றை களைவதற்கான செயல்களில் இறங்குங்கள். மீண்டும் மீண்டும் உங்கள் குறைகளை நினைத்து கவலை கொள்ள வேண்டாம். உங்களுக்கு எது தெரியும் தெரியாது என்று ஏற்றுக்கொண்டு, அதற்கேற்றவாறு உங்களுடைய செயல்பாடுகளை வழி நடத்துங்கள். வெறும் கேள்விகள் மட்டுமே உங்களின் வாழ்க்கையை மாற்றி விடாது. செயல்களுக்கே சக்தி அதிகம்.

இறுதியாக, வாழ்வினது உண்மையான அர்த்தத்தை உணர்ந்து கொள்ளுங்கள். தேவையில்லாத அழுத்தங்களை உங்கள் மனதில் போட்டு திணிக்க வேண்டாம். நிச்சயமாக பிற மனிதர்களின் எண்ணங்கள் உங்களை முழுமையாக ஆட்கொண்டிருக்கும். அவற்றிடமிருந்து சற்று தூர விலகி, உங்களுடைய மகிழ்ச்சிக்கு உரித்தானதைச் செய்யத் தொடங்குங்கள்.

இதை செய்தால் வெற்றி பெறலாம், என்பனவற்றை முழுமையாக நம்ப வேண்டாம். உங்களுடைய திறமையும், அதனை வெளிப்படுத்தும் வாய்ப்புகளுமே உங்களுக்கான இடத்தை பெற்றுத்தரும் என்பதை அழுத்தமாக நம்புங்கள். 

நிச்சயமாக அது உங்களுடைய செயல்பாடுகளை மேலும் சிறப்பாக செய்ய உதவும். பொறுமையாக அனைத்தையும் அறிந்து கொண்டு, நீங்கள் உங்களுக்காக செய்யும் செயலை முடிந்தவரை சிறப்பாக செய்யுங்கள். அது நிச்சயம் உங்களுக்கானதை பெற்றுத்தரும்.

VR மூலமாக கோவில்களை சுற்றிப் பார்க்கலாம் – ஏ.ஆர்.ரஹ்மான்!

பாத்ரூமிலும் செல்போன் பயன்படுத்துபவரா நீங்கள்? அச்சச்சோ ஜாக்கிரதை!

வரும் வாய்ப்புகளை எப்படி பயன்படுத்திக்கொள்வது?

கடினமான சூழ்நிலையையும் அமைதியாக கையாள்வது எப்படி தெரியுமா?

சபரிமலையின் புண்ணிய வரலாறு!

SCROLL FOR NEXT