Motivation article Image credit - pixabay
Motivation

முன்னேற்றம் தராத இயக்கங்களை விட்டு விலகுங்கள்!

சேலம் சுபா

"Do not confuse motion and progress. A rocking horse keeps moving but does not make any progress.
"இயக்கத்தையும், முன்னேற்றத்தையும் குழப்பிக் கொள்ளக் கூடாது. ஆடும் குதிரை தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கும், ஆனால் முன்னேறாது."-- Alfred A. Montapert.

மெரிக்கரான ஆல்ஃபிரட் அர்மண்ட் மான்டேபர்ட் (1906-97) பொறியியலாளர், தத்துவவாதி மற்றும் எழுத்தாளர் என்ற பன்முகத்தன்மை கொண்ட பிரபலமானவர். லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மின் பொறியியல் படித்து, லிஃப்ட்களில் மின் சரிசெய்தல் திறனாளராகி தனது 21 வயதில் லிஃப்ட் வணிகமான எலிவேட்டர் பராமரிப்பு நிறுவனத்தை சொந்தமாகத் தொடங்கினார். 1927-57 வரை அதன் தலைவராக இருந்தார். வெற்றிக்கு உதவியாக இவர் எழுதிய பல புத்தகங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இவர் கூறிய வெற்றி சூத்திரங்களில் ஒன்றுதான் மேலே சொன்னது லாயத்தில் கட்டப்பட்ட குதிரை அவ்விடத்திலேயே நின்று ஆடிக் கொண்டிருக்கும். ஆனால் ஒரு அடி கூட எடுத்து முன்னேறாது. அப்படி இருக்கக் கூடாது நமது இயக்கம். முன்னேற்றத்திற்கான நமது இயக்கம் எப்படி இருக்க வேண்டும் என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும். 

வெறுமனே இருந்த இடத்திலிருந்து நான் இயங்குகிறேன் என்று போலியாக பந்தா காட்டுவதை விட உடல் உழைப்பு கொண்டு இயங்கி, மற்றவர்களுடன் இணைந்து பழகி முன்னேற்றம் காண்பதே வெற்றிக்கு சிறந்த வழி. சிலர் எப்போதும் ஒரே பணியை சலிக்காமல் செய்து வருவார்கள். அடுத்த கட்டத்திற்கு செல்லாமல் தேங்கி நிற்பார்கள். இவர்கள் தரும் இயக்கம் அந்தக் குதிரை போல் முன்னேற்றம் தராத இயக்கமாகவே இருக்கும்.

ஒரு குளத்தை தூர்வார இரு இளைஞர்களை அழைத்துச் சென்றார் அந்த ஊரின் பெரியவர் . இருவருக்கும் தூர்வாரும் குளத்தை காண்பித்து விட்டு வேலையை செய்ய சொல்லிவிட்டு சென்று விட்டார். மதிய நேரம் வந்தது. இருவரும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று பார்க்கலாம் என்று அந்த பெரியவர் வந்தார். ஒரு பக்கம் மண்  மேடாக குவிந்திருக்க  மறுபக்கம் அக்கம் பக்கத்தில் இருந்த பள்ளங்கள் அனைத்தும் மண் கொண்டு நிரப்பி சீராக காட்சி அளித்தது அந்த இடம்.

இதை பார்த்த அந்த பெரியவர் இருவரையும் அழைத்து "என்ன செய்கிறீர்கள்?" என்று கேட்டார்.

ஒருவன் சொன்னான் "நான் நீங்கள் சொன்னதுபோல் குளத்தில் இருந்த மண்ணையெல்லாம் இதோ இங்கே குவித்திருக்கிறேன்"…

மற்றவன் சொன்னான் "ஐயா  குளத்தில் இருக்கும் அந்த மண்ணை எடுத்ததுடன் கையோடு அவற்றை அந்த பள்ளங்களை நிரப்பி சீர் செய்தும் விட்டேன். உங்களுக்கு மகிழ்ச்சிதானே? "என்று கேட்டான்.

பெரியவர் அந்த இளைஞனை பாராட்டினார்.

"இயக்கம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். செய்ததையே செய்யாமல் யோசித்து விழிப்புணர்வுடன் ஒரு பணியை செய்தால்தான் அந்த இயக்கத்திற்கான வெற்றியும் அந்த பணியை செய்ததற்கான முழுமையும் கிடைக்கும்" என்றார் அந்த பெரியவர். அந்த இன்னொரு இளைஞனும் இதிலிருந்து பாடத்தைக் கற்றுக்கொண்டான்.

நாம் நின்ற இடத்திலேயே நின்று இயங்கும் அந்தக் குதிரைபோல ஆகவேண்டுமா அல்லது பெரியவர் பாராட்டிய அந்த இளைஞன் போல ஆகவேண்டுமா? முடிவு நம் கையில்.. வெற்றியும்.

இனி சிறுகோள்களில் உணவு உற்பத்தி செய்யலாம்!

உங்கள் தன்னடக்கத்தை மேம்படுத்தும் 5 வழிகள்!

வேற்று கிரக வாசிகளால் செய்யப்பட்ட சிலையா? எந்தக் கோவிலில் உள்ளது தெரியுமா?

தொடர் ஏப்பத்துக்கான காரணமும் இயற்கை வழி தீர்வும்!

ஹீரோயினுக்காக கழிவறை கழுவிய இயக்குநர்… யாருப்பா அவர்?

SCROLL FOR NEXT