motivation image Image credit -pixabay.com
Motivation

பெரிய பலசாலியும் தன் குழுவுடன் இணைகிறபோதுதான் உயர்வான வெற்றி பெருகிறான்!

இந்திரா கோபாலன்

ந்தியாவின்  நேஷனல் ஹீரோ இராமன். இவரது சிலையை தனியாக பார்த்திருக்கிறீர்களா.? சீதை லக்ஷ்மணன் அனுமான் என்று சேர்ந்துதான் காட்சி தருவார். இராமனது வெற்றி ஒரு குழுவினரின் வெற்றி. இராமன் காடு போனதும் மக்கள் மனதை மாற்றி ராஜ்ஜியத்தை தன் பக்கம் கொண்டுபோக பரதன் நினைத்திருந்தால் இராமன் நாட்டை விட்டுக்கொடுத்த தியாகம் கேலிக்குரியதாக இருக்கும். பாதுகையுடன் காத்திருந்த பரதனின் பண்புதான் இராமனின் வெற்றியை கௌரவப்படுத்தியது.

சுயநலமற்ற எந்த எதிர்பார்ப்பும் இல்லாத  தூய தொண்டன் அனுமன் கிடைக்கவில்லையென்றால் இராமன் இத்தனை வெற்றிகளை அடைந்திருக்க முடியுமா. அனுமன் தற்கொலை செய்யயிருந்த சீதையைக்காத்தான். பிரம்மாஸ்திரத்தால் சாய்ந்த இலக்ஷ்மணனைக்காத்தார். சீராமஜெயம் என்பது ஒரு தனிமனித வெற்றி அல்ல. ஒரு குழுவின் வெற்றி. கொள்கை  பிடிப்புடைய குழு வெற்றிபெறும் என்பதை இராமாயணம் காட்டியுள்ளது. இந்தியாவில் பலர் பல சாலி,திறமைசாலி, அறிவாளி. ஆனால் குழுவாகப் பணியாற்றத். தகுதியற்றவர்கள். தன் முனைப்பு காரணமாக ஒருவரையொருவர் கவிழ்க்கும் இயல்பினர். அகப்பட்ட மருமகளைக் கசக்கியதால் கூட்டுக் குடும்பங்கள் அழிந்தன. உழைக்கும் தொண்டனை ஓட ஓட விரட்டியதால் கட்சிகள்களை இழக்கிறது.

கண்டம் விட்டுக் கண்டம் பறக்கும் பறவைகளிடமிருந்து  டீம் ஒர்க் பற்றி நாம் கற்றுக் கொள்ள வேண்டும். அவை எப்படி பறக்கும் தெரியுமா? முதலில் ஒரு பறவை அதன் இறக்கைகளை ஒட்டி இரண்டு. அவற்றின் இறக்கைகளை ஒட்டி நான்கு. இப்படி அம்பு மாதிரி அணிவகுக்கும். ஏன் முதல் பறவையின் இறக்கைகளைப் பின்பற்றி நிற்கின்றன தெரியுமா.? அதன் இறகு அமைப்பில் காற்று விலகுவதைப் பயன்படுத்திக் கொண்டு  அடுத்த பறவை சுலபமாக முன்னேறி விடலாம். ஆனால் அலகாலும் இறகாலும் காற்றைக் கிழிப்பதால் முதல் பறவை மிக விரைவில் சோர்ந்துவிடும். ஆனால் கடைசி பறவை சுகமாகக் களைப்படையாமல் வரும்.

மனித இனமாக இருந்தால் முதல் பறவையைச் சாகும் வரை வேலை வாங்குவோம். ஆனால் பறவைகள் பண்பானவை. முதல் பறவை சோர்ந்ததும் பின்னால் கடைசி வரிசைக்கு வந்துவிடும். அடுத்து நிற்கும் பறவை தலைமை ஏற்கும். களைப்பு ஏற்பட்டதும் கடைசி வரிசைக்கு வந்துவிடும். இப்படி மாறி மாறி துயரங்களை பங்கு வைத்து அந்தக் குழுவே சுலபமாக முன்னேறும். குடும்பம், அலுவலகம், பொது இயக்கம் எதுவானாலும் நானே எல்லாம் என் இழுத்துப் போட்டுக் கொண்டு துயரப்படாமல் கஷ்டங்களை பிறருக்கும் புரிய வைப்பவர்கள், பிறரையும் பங்கேற்க  செய்வார்கள். அவர்களின் பங்களிப்பை மறவாது பாராட்டுவார்கள். குழுவாக வெற்றி பெறுகிறார்கள். அப்படிச் செயல்படுபவர்களுக்கு வெற்றி நிச்சயம்.

இனி சிறுகோள்களில் உணவு உற்பத்தி செய்யலாம்!

உங்கள் தன்னடக்கத்தை மேம்படுத்தும் 5 வழிகள்!

வேற்று கிரக வாசிகளால் செய்யப்பட்ட சிலையா? எந்தக் கோவிலில் உள்ளது தெரியுமா?

தொடர் ஏப்பத்துக்கான காரணமும் இயற்கை வழி தீர்வும்!

ஹீரோயினுக்காக கழிவறை கழுவிய இயக்குநர்… யாருப்பா அவர்?

SCROLL FOR NEXT