buddha 
Motivation

வெற்றியடைய புத்தர் சொன்ன அருமையான போதனை!

நான்சி மலர்

நாம் வெற்றியடைய வேண்டும் என்று நினைக்கும்போது நம்முடைய பார்வையும் அதற்கேற்றார்போல விசாலமாக இருக்க வேண்டும். ‘குண்டு சட்டியில் குதிரை ஓட்டாதே’ என்றொரு பழமொழி உண்டு. எனவே, நம் சிந்தனையும், செயலும் விசாலமாக இருக்க வேண்டியது அவசியமாகும். இதை புரிந்துக்கொள்ள ஒரு குட்டி கதையைப் பார்ப்போம்.

ஒருநாள் புத்தரிடம் சீடன் ஒருவன் வந்து, ‘நீங்கள் சொல்லித்தரும் எல்லா போதனைகளையும் நான் கடைப்பிடிக்கிறேன். ஆனால், என்னால் மட்டும் வாழ்க்கையில் வெற்றியடைய முடியவில்லை. மற்ற எல்லோருமே வெற்றியடைகிறார்கள்’ என்று கேட்டார்.

இதைக்கேட்ட புத்தரும் உடனேயே ஒரு கை நிறைய உப்பை அள்ளி அந்த சீடரிடம் கொடுத்து, ‘இதை கரைத்து குடி என்று சொன்னாராம். உடனே சீடரும் அந்த உப்பை எடுத்துச் சென்று ஒரு சிறிய குவளையில் கரைத்துக் குடித்தார். வாயில் வைத்ததுமே துவர்ப்பு சுவை தாங்க முடியாமல் குடித்ததை துப்பி விடுகிறார்.

இப்போது அந்த சீடர் வேகமாக புத்தரிடம் ஓடிவந்து, ‘நீங்கள் சொன்னதுபோல நான் செய்தேன். இருப்பினும், அதன் துவர்ப்பு சுவையை தாங்க முடியாமல் துப்பி விட்டேன்’ என்று கூறினார்.

இதைக்கேட்ட புத்தர், ‘நீ உப்பை எதில் கரைத்து குடித்தாய்? என்று கேட்கிறார். சீடரும் அவர் வைத்திருந்த சிறு குவளையை காட்டுகிறார். ‘சரி, இப்போது அதே உப்பை எடுத்துச் சென்று நதியிலே கரைத்து குடித்துப்பார்’ என்று புத்தர் கூறினார். சீடரும் உப்பை எடுத்துச் சென்று நதியிலே கரைத்துக் குடிக்கிறார். இப்போது அவருக்கு அந்த துவர்ப்பு சுவை தெரியவில்லை. தண்ணீர் இனிப்பாகவே இருக்கிறது.

இப்போது புத்தர் கூறினார், ‘நான் உன்னிடம் வெறும் உப்பை மட்டுமே கொடுத்து கரைத்துக் குடிக்க சொன்னேன். ஆனால், அதை நீ கரைத்துக் குடிக்க தேர்ந்தெடுத்தது ஒரு சின்ன குவளை.

அதைப்போலதான் நான் சொல்லும் போதனைகளை எல்லாம் நீ ஒரு சின்ன குவளையிலேயே கரைத்து குடித்துக் கொண்டிருந்தால், நீ வெற்றியடைய முடியாது. பெரிய நதியில் கரைத்துக் குடித்துப்பார் வெற்றியடைவாய்!’ என்று கூறினார். இந்தக் கதையில் சொன்னதுப்போல தான். வெற்றியடைய வேண்டும் என்றால் நம்முடைய பார்வையை விசாலமாக்கிக் கொள்ள வேண்டியது அவசியமாகும். முயற்சித்துப் பாருங்கள்.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT