மன அழுத்தம் இன்று நூற்றில் 99 பேருக்கு உள்ளது. நாம் எவ்வளவுதான் கட்டுப்பாடாக இருந்தாலும் ஏதாவது ஒரு விதத்தில் மன அழுத்தம் நம்மை நெருங்கிக் கொண்டு ஆட்டிப் படைக்கிறது. மன அழுத்தம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போனால் நம் ஆரோக்கியம் சீர்கெட்டு விடும்.
சரி மன அழுத்தம் வராமல் எப்படித்தான் காப்பது… அதற்கு என்னதான் வழி இதோ இந்த பதிவை படியுங்கள்.
தினமும் இரவில் தூங்கத் தொடங்கும் நேரத்தையும், காலையில் எழும் நேரத்தையும் ஒரே மாதிரியாகப் பின்பற்ற வேண்டும். உறங்கும் இடம் சுத்தமாகவும், நிறைய பொருட்களை வைத்து அடைத்திருக்காமலும் இருக்க வேண்டும்.
உறங்குவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்னதாகவே உணவை அருந்திருக்க வேண்டும். உறங்குவதற்கு முன் தொலைக்காட்சி மற்றும் தொலைபேசியை பயன்படுத்த கூடாது.
தினமும் குறைந்தபட்சம் 45 நிமிடங்கள் எந்த விதத்திலாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். நடைப்பயிற்சி, யோகா பயிற்சியாகவும் இருக்கலாம். எதுவாக இருந்தாலும் தினசரி செய்ய வேண்டும்.
நமக்குப் பிடித்தமான நேரம் ஒதுக்கி அதனை ஆனந்தமாக தினமும் செய்ய வேண்டும். அதாவது சமைத்தல், ஆடை தைத்தல், இசை, ஓவியம் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இப்படி நமக்குப் பிடித்ததை அன்றாட வாழ்வில் செய்யலாம்.
சில விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளும் வகையில், மனம் விட்டுப் பேசக் கூடிய சில நண்பர்களை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். இவை வாழ்க்கை நிலை மாற்றமாக அமையும்.
உணவு வகைகளை ஆரோக்கியமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது, சரியான முறையில் காய்கறி, பழங்கள், பருப்பு வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
அன்றாட வாழ்வில் செய்ய வேண்டிய செயல்களை அட்டவணைப்படுத்திக் கொள்ளவும். பிறகு செயல் பாடுகளுக்கேற்ப முக்கியத்துவம் கொடுத்து, தினமும் அவற்றைப் பின்பற்றவும். இதுபோல வாழ்க்கை நடைமுறைகளைச் சரி செய்தாலே மன அழுத்தம் வராமல் தடுக்கலாம்.