ஒரு டிடெக்டிவின் வேலை என்பது வெறும் குற்றங்களை தீர்ப்பது மட்டுமல்ல. ஒரு மனிதரைப் பார்த்ததும் அவரைப் பற்றி புரிந்து கொள்வதும்தான். இவர்களின் அடிப்படை திறன்களை நாம் எப்படி வளர்த்துக் கொள்வது என்பதை இந்த பதிவில் முழுமையாகப் பார்க்கலாம்.
உடல் மொழி:
ஒருவரின் உடல் மொழி அவர்களின் உள் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு வலுவான குறியீடாகும். குறிப்பாக, அவர்களின் கண்கள் மனதின் ஜன்னல் போன்றது. அது உண்மை என்ன என்பதை சொல்லிவிடும். ஒருவர் பொய் சொல்லும்போது அவர்களின் கண்கள் ஒரே இடத்தில் இருக்காது. அவர்கள் ஆர்வமாக இருக்கும்போது கண்கள் விரிவடையும்.
சிரிப்பு, கோபம், வருத்தம் போன்ற முக பாவங்கள் நம் உணர்வுகளை அப்படியே வெளிப்படுத்தும். ஆனால், சிலர் தங்கள் உணர்வுகளை பொய்யாகவும் முகபாவனைகள் செய்து காட்ட முடியும். இத்துடன் கை, கால்கள் போன்ற உறுப்புகளின் அசைவுகள், ஒருவரின் தன்மை, ஆதிக்கம் மற்றும் பாதுகாப்பு உணர்வை வெளிப்படுத்தும். இவற்றை கவனிப்பது மூலமாகவும் நீங்கள் ஒருவரைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள முடியும்.
பேச்சு:
ஒருவரின் பேச்சு, அவர்களின் சிந்தனை, கல்வி நிலை மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வெளிப்படுத்தும். ஒருவர் எதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்துகிறார் என்பதை வைத்து அவர்களின் கல்வி நிலை மற்றும் சிந்தனை முறையை நாம் தெரிந்து கொள்ளலாம்.
வேகமாக பேசுபவர்கள் பொதுவாக நம்பிக்கையுடன் இருப்பார்கள் அதேசமயம் மெதுவாக பேசுபவர்கள் சிந்தனை மிக்கவர்களாக இருப்பார்கள். பேசும்போது செய்யும் சைகைகள் அவர்களது பேச்சுக்கு கூடுதல் அர்த்தத்தை சேர்க்கும்.
சுற்றுப்புறம் மற்றும் பொருட்கள்:
ஒருவரின் வாழ்க்கை முறை, ஆர்வங்கள், சமூக நிலை ஆகியவற்றை அவர்களின் வாழும் இடம் பயன்படுத்தும் பொருட்கள் மூலம் அறியலாம். ஒருவரின் வீடு, அவர்களின் பொருளாதார நிலை, வாழ்க்கை முறை போன்றவற்றை பிரதிபலிக்கும். அவர்கள் பயன்படுத்தும் பொருட்கள் அவர்களின் ஆர்வங்கள் தொழில், சமூகநிலையை வெளிப்படுத்தும்.
உளவியல்:
ஒருவரை பார்த்ததும் ஏற்படும் முதல் பார்வை அவர்களது எதிர்காலத்தை நிர்ணயம் செய்கிறது. அதேபோல ஒருவரின் நேர்மையான குணம் அவர்களின் மற்ற குணங்களையும் நேர்மையாகவே பார்க்க வைக்கும். எனவே, பிறர் எப்படி தங்களை வெளிப்படுத்துகிறார்கள் என்பதை வைத்து அவர்களை நாம் முழுமையாக கணிக்கலாம்.
ஒருவரை பார்த்தவுடன் அவர்களைப் பற்றி புரிந்துகொள்வது என்பது ஒரு கலை. இது அனுபவம், பயிற்சி, தொடர்ச்சியான கற்றலின் மூலம் மேம்படும் ஒரு திறன். ஒரு டிடெக்டிவ் இந்த திறனைப் பயன்படுத்தி குற்றங்களை தீர்ப்பது மட்டுமல்லாமல் மனித உறவுகளை மேம்படுத்தவும் பயன்படுத்துவர். இவற்றை நாமும் பயன்படுத்தி ஒரு நபரை பற்றிய புரிதலை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.
அதே நேரம், இவற்றை நீங்கள் பயன்படுத்தும்போது திறந்த மனதோடு இருக்க வேண்டும். ஏனெனில், மனிதர்கள் சிக்கலானவர்கள். நீங்கள் நினைப்பதை விட அவர்கள் மிகவும் வித்தியாசமாக இருக்கலாம். எனவே, உங்களால் எதையும் கணிக்க முடியுமே தவிர உறுதியாக சொல்லிவிட முடியாது.