motivation image Image credit - pixabay.com
Motivation

உரிய நேரத்தில் பேசவில்லை என்றால் வாய்ப்புகள் பறிபோகும்!

பொ.பாலாஜிகணேஷ்

நாம் பேச வேண்டிய நேரத்தில் பேசாமல் பல அறிய வாய்ப்புகளை தவற விட்டிருப்போம். ஆனால், அது பற்றி பிற்காலத்தில் மிகவும் வருத்தப்பட்டு இருப்போம். பேசியிருக்கலாமே தவறு செய்து விட்டோமே என்று உரிய நேரத்தில் உரியதை பேசாமல் வாய்ப்புகள் பரிபோனவர்கள் நம்மில் ஏராளமான இருக்கிறார்கள்.

பேச வேண்டிய நேரத்தில் பேசுங்க! எதையுமே தாமதிக்கக் கூடாது. சிலர் பேச வேண்டிய நேரத்தில் பேச மாட்டார்கள். ஆனால் பேச விரும்பும்போது அவர்களுக்கான காலத்தைத் தவற விட்டிருப்பார்கள்.

பேச வேண்டிய நேரத்தில் பேச வேண்டும். அமைதி காக்க வேண்டிய இடத்தில் அமைதி காக்க வேண்டும். பேச வேண்டிய நேரத்தில் பேசாமலிருப்பது பிரச்சினைக்கு வழிவகுக்கும். சிலர் பேச வேண்டிய நேரத்தில் பேசாமல் அந்த சந்தர்ப்பத்தைத் தவற விட்டுடேனே என்று பிறகு புலம்புவார்கள். கிடைக்கும் சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்பவனே சிறந்த மனிதன்.

ராமு நேர்காணலுக்குச் சென்றிருந்தான். எழுத்துத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று குழு விவாதத்திற்குத் தயாரானான். குழு விவாதத்தில் அவனுக்கான வாய்ப்புக் கிடைத்தபோது அவன் பயத்தில் சரியாகப் பேசவில்லை. அதனால் அவனுக்கு வேலை கிடைக்கவில்லை. இருபத்தைந்தாயிரம் ரூபாய் சம்பளம் கொண்ட வேலை அது. அவன் சரியாகப் பேசாததால் அவனுக்கு வேலை கிடைக்கவில்லை. பேச வேண்டிய இடத்தில் உங்கள் கருத்துகளைத் தெரிவித்து விடுங்கள் மற்றுமொரு வாய்ப்பு கிட்டுமா என்பது நமக்குத் தெரியாது.

கிடைத்தற்கரிய வாய்ப்புகள் கூட நீங்கள் பேசாதிருப்பதால் கிடைக்காமல் போகலாம். தைரியமாகப் பேசுங்கள். கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு பேசி உங்கள் திறமைகளை மற்றவர்களுக்கு வெளிப்படுத்துங்கள். பேசாமல் இருந்துவிட்டு இந்த பொன்னான வாய்ப்பைத் தவற விட்டுவிட்டோமே என்று பின்னர் வருந்தாதீர்கள்.

வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்றால் நிச்சயம் பேச வேண்டும். பேச வாய்ப்புக் கிடைக்கும்போது அதை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். பேச வேண்டிய நேரத்தில் கண்டிப்பா பேசுங்க வாழ்க்கை அழகாக இருக்கும்.

நாம் எதை எப்பொழுது பேச வேண்டுமோ அதை தயங்காமல் கூச்சப்படாமல் எது தேவையோ அதை கண்டிப்பாக பேசுவோம். தயக்கம் காட்டாமல் பேசி நமக்கான சந்தர்ப்பத்தையும் நமக்கான நல்ல வாய்ப்பையும் நழுவ விடாமல் கைப்பற்றுவோம்.

இனி சிறுகோள்களில் உணவு உற்பத்தி செய்யலாம்!

உங்கள் தன்னடக்கத்தை மேம்படுத்தும் 5 வழிகள்!

வேற்று கிரக வாசிகளால் செய்யப்பட்ட சிலையா? எந்தக் கோவிலில் உள்ளது தெரியுமா?

தொடர் ஏப்பத்துக்கான காரணமும் இயற்கை வழி தீர்வும்!

ஹீரோயினுக்காக கழிவறை கழுவிய இயக்குநர்… யாருப்பா அவர்?

SCROLL FOR NEXT