Lessons that 'Scam 1992' teaches us. 
Motivation

'Scam 1992' நமக்கு கற்றுக் கொடுக்கும் பாடங்கள்!

கிரி கணபதி

நிதி முறைகேடுகளின் உலகில், 1992 ஆம் ஆண்டில் ஹர்ஷத் மேத்தா என்பவரால் நடந்த ஊழல் மிகத் துணிச்சலானதாகும். இதை மையமாகக் கொண்டு வெளிவந்த ஸ்கேம் 1992 வலைத்தொடர், ஒரு மிகப்பெரிய ஊழல் சாம்ராஜ்யத்தின் எழுச்சி மற்றும் வீழ்ச்சியை விரிவாக விவரிக்கிறது. தவறான வழியில் பணக்காரன் ஆவது என்பதற்கு அப்பால், இந்தத் தொடர் ஒருவரின் லட்சியம், வெற்றி, தோல்வி, விலைமதிப்பற்ற பாடங்கள் போன்றவற்றை ஒருவருக்கு எடுத்துரைக்கிறது. 

1. லட்சியத்தின் முக்கியத்துவம்: 

ஸ்கேம் 1992, தன் வாழ்வில் தீராத வேட்கையால் உந்தப்படும் ஹர்ஷத் மேத்தா என்ற நபரை நமக்கு அறிமுகப்படுத்துகிறது. அவருடைய துணிச்சலான லட்சியம், பங்குச்சந்தையின் சவால் நிறைந்த விதிமுறைகளை உடைத்து, மிகப்பெரிய உயரத்தை அவர் அடைய வழி வகுத்தது. இருப்பினும் அவரது செயல்களின் விளைவுகளால் இறுதியில் அவர் தோற்றாலும், மேத்தா தனது லட்சியத்தை அடையப் போராடியதால் அடைந்த உயரத்தை நாம் மறுக்க முடியாது.

2. துன்பங்களை எதிர்கொள்ளும் திறன்: 

ந்தத் தொடரில் ஹர்ஷத் மேத்தா தன்னுடைய வெற்றி பாதையில் சந்தித்த பின்னடைவுகள் மற்றும் சோதனைகள் சிறப்பாக சித்தரிக்கப்பட்டிருந்தது. தொழில் ரீதியாக அவருக்கு ஏற்பட்ட துரோகங்கள் முதல், சட்டப் போராட்டங்கள் வரை, நம் சொந்த வாழ்வில் கடக்க முடியாததாகத் தோன்றும் பல தடைகளை அவர் தாண்டியுள்ளார். இவை அனைத்தையும் தனது விடாமுயற்சியால் தனித்து நின்று அவர் சாதித்துக் காட்டினார். 

3. தவறுகளிலிருந்து கற்றுக் கொள்ளுங்கள்: 

ஸ்கேம் 1992 தொடரிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்களில் ஒன்று, நம் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்வதன் முக்கியத்து வமாகும். மேத்தாவின் லட்சியத்திற்கான பயணத்தில் பல தவறுகள் ஏற்பட்டாலும், அவர் தனது கடந்த கால தவறுகள் அவரின் தற்போதைய நிலையை முடிவு செய்ய அனுமதிக்கவில்லை. இதற்கு மாறாக அவற்றை எதிர்கால வெற்றிப் படிக்கட்டுகளாக நினைத்து செயல்பட்டார். 

எனவே தோல்வி என்பது முடிவல்ல. இது வெற்றியை நோக்கிய பயணத்தின் மதிப்புமிக்க பகுதியாகும். நமது தவறுகளை ஒப்புக்கொள்வது மூலமாகவும், அவற்றிலிருந்து கற்றுக் கொள்வதன் மூலமாகவும், தேவையான திருத்தங்களை செய்து நம் இலக்குகளை நோக்கி தொடர்ந்து முன்னேறலாம் என்பதை நம்புங்கள். 

4. உறுதியான மனநிலை: 

ந்த ஒரு விஷயமாக இருந்தாலும் உறுதிப்பாடு மற்றும் விடாமுயற்சியுடன் அதைப் பற்றிக்கொள்ளும் நோக்கம் மிக முக்கியமாகும். இதுதான் ஸ்கேம் 1992 தொடரின் மையக்கருவாக உள்ளது. ஹர்ஷத் மேத்தா தன் இலக்குகளை அடைவதில் அசைக்க முடியாத உறுதிபாட்டுடன் இருந்தார். இதுவே அவரின் வெற்றிக்கு சான்றாக அமைந்தது. நமது நோக்கங்கள் தனிப்பட்டதாக இருந்தாலும் அல்லது தொழில் ரீதியாக இருந்தாலும் அதில் நாம் கொண்டிருக்கும் உறுதியான மனநிலை நம் வெற்றிக்கு வழிவகுக்கிறது. 

இந்த வலைத்தொடர் நீங்கள் முற்றிலும் எதிர்பார்க்காத ஒரு மனநிலையை உங்களுக்கு ஏற்படுத்தும். இது உங்களுக்கு ஊழல் செய்வதை ஊக்குவிப்பது போல் தெரிந்தாலும், நாம் நம்முடைய தனிப்பட்ட வாழ்வில் வெற்றி பெறுவதற்குத் தேவையான எல்லா விதமான ஊக்கமிகுந்த விஷயங்களையும் கொண்டிருக்கிறது. உங்களுக்கு நேரம் கிடைத்தால் கட்டாயம் ஒருமுறை இந்த வலைத்தொடரைப் பாருங்கள். நிச்சயம் உங்களுடைய நேரம் வீணானது போல் உணர மாட்டீர்கள். 

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT