Motivation image Image credit - pixabay.com
Motivation

சுயமரியாதையுடன் வாழுங்கள். கௌரவமான வெற்றி சர்வ நிச்சயம்!

இந்திரா கோபாலன்

ண் விழித்துக் படிக்கும் அருமைப் பிள்ளைக்கும் காபி கொடுத்துவிட்டு டம்பளரை கையில் வாங்கிப்போகும் பெற்றோர்கள் எதிர்காலத் தலைமுறையை உருவாக்குகிறார்களா? இல்லை உருக்குலைக்கிறார்கள்.

தன் வேலைகளை தானே பார்க்காதவனே தலைவன், மேலாளர், மேம்பட்டவன், மேஸ்திரி என்ற அபிப்ராயம் அடிமைப்புத்தி இந்தியாவின் பலவீனம். வளர்ந்த நாடுகளில் இந்த அடிமைத்தனம் இல்லை. முன்னேறிய நாடுகளின் ஹோட்டல் அறைகளில் காபி மேக்கர் இருக்கும் தனக்கான காபியை தானே தயாரித்துக் கொள்வார்கள். அதே போன்று அவர்களது வாழ்க்கையையும் அவர்களே  தயாரிக்கும் கட்டாயம்  அங்கே இருக்கிறது. அளவுக்கு மேல் பிறரைப் சார்ந்திருக்கும் அடிமைத்தனத்திலிருந்து வெளியே வர வேண்டும். இன்று ஒரு தனிமனிதனின் வருகைக்கு நூற்றுக்கணக்கான மனிதர்கள் அதுவும் இளைஞர்கள் தங்கள் பொன்னான நேரத்தை வீணாக்கிக்  காத்திருக்கிறார்கள்.

இளைஞர்களே எந்த தலைவருக்கும் ஜே போடாதீர்கள். பெட்டி தூக்காதீர்கள். அடிமைகளாகிச் சுயமரியாதையை இழக்காதீர்கள். பகுத்தறிவுவாதிகளும்  இயக்கங்கள் பெயரால் சிந்திக்காத அடிமைகளை இன்று உருவாக்கு கிறார்கள். பிறருக்கு அடிமையாவதும் தவறு. பிறரை அடிமையாக்குவதும் தவறு.

ஜார்ஜ் வாஷிங்டன் அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி. அவர் தலைமையில் அமெரிக்காவில் போர் நடந்து கொண்டிருந்த சமயம். பத்துப் பதினைந்து வீரர்கள் ஒரு உத்திரத்தைப் படாதபாடு பட்டு நகர்த்திக் கொண்டிருந்தார்கள். அவர்கள் குழுவின் தலைவன் குதிரை மீது அமர்ந்தபடி அவர்களை அதட்டி உருட்டி வேலை வாங்கிக் கொண்டிருந்தான். அவர்கள் ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு அந்த உத்திரத்தை நகர்த்த முடியாதபடி அதிக சிரமப்பட்டார்கள்.

அப்போது அங்கு குதிரையில் வந்த வீரன் ஒருவன் அந்தத் தலைவனைப் பார்த்து "அவர்கள் இவ்வளவு கஷ்டப்படுகிறார்களே, நீயும் அவர்களோடு சேர்ந்து நகர்த்தக்கூடாதா" என்று கேட்டான்.

அதற்கு குழுத்தலைவர் "நான் யார் தெரியுமா? அவர்களுக்குத் தலைவன். நான் அவர்களோடு சமமாக வேலை செய்ய முடியுமா.?" என்றான்.

குதிரையில் வந்தவன் இறங்கி வீரர்களுக்கு உதவி உத்திரத்தை நகர்த்தி அதன் இடத்தில் வைத்து விட்டுத் தன் குதிரை மீது அமர்ந்து அந்த தலைவனிடம், "இனி இப்படிக் கடினமான வேலை இருந்தால் என்னிடம் சொல்லி அனுப்பு. அவசியம் நான் உதவுகிறேன்" என்றான்.

உடனே தலைவன் நீயார். உனக்கு எப்படிச் சொல்வது?.உன் இருப்பிடம் எது என்று அலட்சியமாக  கேட்டான்.

"நானா. ஜார்ஜ் வாஷிங்டன். உங்கள் தலைமைத் தளபதி" என்று கூறி குதிரையில் சிட்டாய் பறந்து விட்டார். அந்த நாட்டின் வெற்றியின் ரகசியம் புரிகிறதா? அடிமையாக ஆசைப்படும் மக்கள் நிலைமை அபத்தமானது. அடிமையாக்க ஆசைப்படும் சுயநலத் தலைமை ஆபத்தானது. சுயமரியாதையுடன் வாழுங்கள். கௌரவம் நிச்சயம். கௌரவமான வெற்றி சர்வ நிச்சயம்.

இனி சிறுகோள்களில் உணவு உற்பத்தி செய்யலாம்!

உங்கள் தன்னடக்கத்தை மேம்படுத்தும் 5 வழிகள்!

வேற்று கிரக வாசிகளால் செய்யப்பட்ட சிலையா? எந்தக் கோவிலில் உள்ளது தெரியுமா?

தொடர் ஏப்பத்துக்கான காரணமும் இயற்கை வழி தீர்வும்!

ஹீரோயினுக்காக கழிவறை கழுவிய இயக்குநர்… யாருப்பா அவர்?

SCROLL FOR NEXT