Motivation Image pixabay.com
Motivation

நமது வாழ்வில் கட்டாயம் பின்பற்ற வேண்டிய 10 விஷயங்கள்!

பாரதி

நாம் இந்த 10 விஷயங்களில் கவனமாக இருந்தால் வாழ்வில் எந்தச் சூழ்நிலைகளிலும் தடுமாறத் தேவையில்லை.

1. ந்த மனிதர்களும் உங்களுக்கு எதிரி இல்லை. எந்த மனிதர்களும் உங்களுக்கு விரோதியாக இல்லை என்று மட்டும் நினைவில்கொள்ளுங்கள். அது அவர்களின் குணம். அவர்களுடைய குணங்களின் வெளிப்பாடு என்றே கடந்து செல்லவேண்டும்.

2. முடிந்த வரை வருடத்திற்கு ஒருமுறையாவது மலை ஏறுங்கள். ஏனெனில் இந்த உலகம் உங்களைப் பார்க்கிறதா என்பது சந்தேகம்தான். ஆனால், மலை மீது ஏறிப் பார்த்தால் இந்த உலகமே உங்களுக்குத் தெரியும். இந்த உலகைக் காணத் தயாராகுங்கள். மலை ஏறுதல் உங்களுக்கு வாழ்க்கை பாடங்கள் பலவற்றைக் கற்றுத்தரும்.

3. வெற்றியில்விட தோல்வியில் அதிகமாகக் கற்றுக் கொள்ளுங்கள். தோல்வியைக் கண்டு பயந்து முயற்சிகளை நிறுத்திவிடாதீர்கள். தோல்வியே உங்கள் நற்குணங்களையும் சோதிக்கும். ஆகையால் தோல்வியில் கவனம் மிக முக்கியம்.

4. ந்தயம் மூலமோ அல்லது அப்புறம் பணம் செலுத்திக் கொள்ளலாம் என்றோ எந்தப் பொருட்களையும் வாங்கிவிடாதீர்கள். ஏனெனில், இதுதான் வாழ்வின் மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும். எதுவாயினும் சொந்தமாக சம்பாதித்தப்பிறகு வாங்குவது நல்லது.

5. ங்களை எங்கு மதிக்கிறார்களோ அங்கு மட்டுமே செல்லுங்கள். உங்களைப் புறக்கணிக்கும் இடத்தை நீங்கள் புறக்கணிப்பது நல்லது. இது உங்கள் சுயமரியாதையைக் காக்கும். சுயமரியாதையை நீங்களே விட்டுவிட்டால் பிறர் உங்களை மதிப்பது கடினமே.

6. வாழ்வில் அதிக நேரம் நீங்கள் யாருடன் செலவிடுகிறீர்கள் என்று கேட்டால், நிச்சயம் அது உங்களுடன்தான். ஆகையால், முடிந்தவரை உங்களை நீங்கள் சுவாரசியமாக வைத்துக்கொண்டால் பிறர் துணை தேவையில்லை.

7. பிறரிடம் நீங்கள் வைக்கவேண்டிய வரம்புகளைத் தெரிந்துக்கொள்ளுங்கள். அதற்கு முன்னர் உங்களுக்கான வரம்புகளை நீங்கள் முதலில் தெரிந்துக்கொள்வது அவசியம். அதுவே உங்களை பிறரிடம் அவமானப்படாமல் தடுக்கும்.

8. க்கமான வார்த்தைகள் மட்டுமே உங்களை ஊக்கப்படுத்திவிடாது. அதையும் தாண்டி நம்மை ஊக்கப்படுத்தும் ஒன்று உள்ளது. ஆம்! அதுதான் குளியல். அதனால்தான் அதனைத் தினமும் செய்கிறோம். ஆகையால் நாள் தவறாமல் குளிப்பது அவசியம்.

9. தினமும் நீங்கள் சந்திக்கும் யாரோ ஒருவரை இழந்துவிடுவீர்களோ என்ற பயம், அவர்மீதும் கோவம் கொண்டுவிடுவோமோ என்ற பயம், நம்மை அவர் ஏமாற்றிவிடுவாரோ என்ற பயம் இருப்பது சகஜம்தான். ஆகையால் பயம் கொள்ளாமல் இருக்க உங்களைப் பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள்.

10. சதியான இடங்களில் மற்றும் சூழ்நிலைகளில் வெகு நாட்கள் தங்கிவிடாதீர்கள். இது உங்களை வெற்றிப் பாதையை விட்டு விலக வைத்துவிடும்.

மேற்சொன்ன பத்து விஷயங்களை நாம் எப்போதும் நினைவில்கொள்வது அவசியம். அதைவிட அந்த விஷயங்களைப் பின்பற்றுவது மிகமிக அவசியம்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT