hippocrates 
Motivation

பிரக்ஞையுடன் உள்ள மகிழ்ச்சி நிறைவு தரும்!

இந்திரா கோபாலன்

ங்கள் வாழ்வில் ஏற்படும்  விளைவுகள் மீது மிக முக்கிய தாக்கம் ஏற்படுத்துகின்ற காரணி  உங்கள் மனநிலை தான். சிந்திப்பதற்கு நீங்கள்  நரம்புத் திசுக்களை பயன்படுத்துகிறீர்கள் என்றாலும், உங்களுடைய சிந்தனையை வழிநடத்துகின்ற  பகுதி மூளைக்கு  உள்ளேயோ அல்லது மூளைக்கு வெளியேயோ  இருக்கக் கூடும். அல்லது நீங்கள் ஒட்டு மொத்த உடலைக் கொண்டு சிந்திக்கக் கூடும். நீங்கள் உங்கள் வாழ்வில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது  உங்களின் ஏதோ ஒரு பகுதி உங்களுக்குள் இருந்து உங்களை கவனித்துக் கொண்டிருப்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

அந்தப் பகுதியில்தான் உங்கள் நம்பிக்கைகள் பதிவாகியுள்ளன. அந்த நம்பிக்கைதான் உங்கள் தனிப்பட்ட தத்துவமாகும். நம்முடைய மனத்திற்கும் உணர்ச்சிகளுக்கும் உடலுக்கும் இடையே  தொடர்பை காட்டுகின்ற ஏராளமான ஆராய்ச்சிகள் இன்று நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இது ஒரு புதிய கோட்பாடு அல்ல.. வாழ்வதற்கான மனவுறுதியும்  விருப்பமும், எந்த ஒரு நோயிலிருந்தும் குணம் பெறுவதற்கான முக்கியமான அம்சங்களில்  ஒன்று என்று திறமையான மருத்துவர்கள் ஏராளமானோர் காலங்காலமாகத் தங்கள் நோயாளிகளிடம் கூறி வருகின்றனர்.

சுமார் 2000 ஆண்டுகளுக்குமுன் மருத்துவத்தின் தந்தை என கருதப்படுகின்ற கிரேக்க  மருத்துவரான ஹிப்போகிரேட்ஸ், தன்னுடைய  மாணவர்களிடம் "எதிர்மறை உணர்ச்சிகள்தான் நோய்களை உருவாக்குகின்றன. அந்நோய்களிலிருந்து விடுபட்டு நலம் பெறுவதற்கு நேர்மறையான உணர்ச்சிகள் காரணிகளாக இருக்கின்றன" என்று கூறினார்.

இனி வரவிருக்கின்ற ஒரு நிகழ்ச்சி குறித்து நீங்கள் மகிழ்ச்சியாகவும், ஆற்றலுடனும், உற்சாகமாகவும் இருந்தாலோ அல்லது ஒரு தன்னம்பிக்கையுடன் கூடிற மனநிலையில் இருந்தாலோ, உங்கள் உடலில் நோயெதிர்ப்பு அமைப்புமுறை  சக்தியைப் பெறும். உங்களை ஆரோக்கியமான நிலையில் வைத்துக் கொள்ளும் விதத்தில் அது செயல்படும். நீங்கள் மனச்சோர்வுடனோ, வருத்தத்துடனோ  அல்லது வேதனையுற்றோ இருந்தால், உங்களுடைய நோயெதிர்ப்பு அமைப்புமுறை அந்த மோசமான மனநிலையை பிரதிபலிக்கும் விதமாகச் செயல்விடை அளிக்கும்.

ஒவ்வொரு கணமும் நம்முடைய உடலில் நிகழ்ந்து கொண்டிருக்கின்ற எதிர்மறை எண்ணக்கள் உயிரணு இனப்பெருக்கத்தின் மீது கூட  நம்முடைய சிந்தனை ஓர் அளப்பரிய தாக்கம் ஏற்படுத்துவதாக நவீன ஆராய்ச்சிகள்  தெரிவிக்கின்றன. எனவே நேர்மறை எண்ணங்களோடு பிரக்ஞையுடன் கூடிய மகிழ்ச்சி என்றும் நிறைவு தரும்.

மழை குறித்து பல்வேறு ஆச்சர்யத் தகவல்கள்!

பிரபஞ்சத்தைப் படைத்தது கடவுளா, இயற்கையா, அறிவியலா? 

முதுமைக்கால நோய்களைத் தவிர்க்க ஆராய்ச்சி முடிவுகள் கூறும் ஆலோசனைகள்!

விவசாயிகளே! தேமோர் கரைசல் தயாரிக்கலாம் வாங்க!

முகம் தங்கம் போல ஜொலிக்க, இது மட்டும் போதுமே!

SCROLL FOR NEXT