வாழ்க்கையில் சாதித்தவவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழிகளில் சாதித்து இருப்பார்கள். அப்படி சாதித்தவவர்களின் வெற்றிக்கு வழி கூறும் "டானிக்" வார்த்தைகள் சில...
"லட்சியத்தை நோக்கி நம்பிக்கையோடு இரண்டு அடி எடுத்து வைத்தால், லட்சியம் நம்மை நோக்கி நான்கு அடி எடுத்து வைக்கும். இதுதான் வாழ்க்கை தத்துவம்"
-ஜேம்ஸ் கேமரூன் (லாரி ஓட்டுநராக வாழ்க்கையை ஆரம்பித்து டைட்டானிக் திரைப்படத்தின் மூலம் உலகப்புகழ் பெற்ற ஹாலிவுட் இயக்குநர்.)
"உங்கள் வாழ்க்கை குறுகியது அதை நினைவிற்கொண்டு வீணாக்காதிருங்கள். இது உங்கள் வாழ்க்கை எனவே நீங்கள் அடுத்தவர் வாழ்க்கையை வாழ்ந்தும் அடுத்தவர் சிந்தனையை சிந்தித்தும் வீணாக்கி விடாதீர்கள். பிறரது கருத்துகளின் பேராசையில் உங்கள் உள்ளுணர்வின் வார்த்தைகளை கவனமாக கேட்க மறந்து விடாதீர்கள். உங்கள் இதய உள்ளுணர்வு கூறுவதை கேட்டு அதன்படி வாழுங்கள். சாதிக்கும் தாகத்துடன் இருங்கள் அறிவுப் பசியோடு இருங்கள் "
-ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவன தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ் ஒரு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இளைஞர்களுக்கு கூறிய அறிவுரை.
"உங்களை நீங்களே கட்டுப்படுத்திக் கொள்ளாதீர்கள் இவ்வளவுதான் நம்மால் முடியும் என்று பலர் தங்களைத் தாங்களே கட்டுப்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால், உண்மை அப்படியல்ல நீங்கள் நினைக்கும் விஷயங்களை எல்லாம் சாதிக்க முடியும்-நம்பிக்கை இருந்தால். தடைகளை, தோல்விகளை வெற்றிக்கான வாய்ப்புகள் என்றே நம்புங்கள். எல்லா வெற்றிகளும் தோல்வி களிலிருந்தே துவங்குகின்றன. "
-பிசினஸ் சாம்ராஜ்யத்தின் ராணி என்று புகழப்படும் மேரி கேய் ஆஷ் கூறியது.
"என்னிடம் இருப்பதெல்லாம் உற்சாகம் மட்டுமே. விளையாட்டுத் திடலில் மட்டுமல்ல எல்லா நேரங்களிலும் உற்சாகமாக இருக்க என்னால் முடியும், உற்சாகம், உற்சாகம், உற்சாகம். பிறரையும் என்னால் எந்நேரமும் உற்சாகமாக வைத்திருக்க முடியும்"
-கால் பந்தாட்ட உலகில் 1000 கோல்களுக்கு மேல் அடித்தவர் பல உலக கோப்பை கால்பந்து போட்டியில் வெல்ல காரணமாக இருந்த கால்பந்தாட்ட நட்சத்திர வீரர் பீலே.
"வெற்றியடைய எந்தத் தகுதியும் தேவையில்லை, உங்கள் இதயம் கூறுவதை பின் பற்றி, உங்களை உற்சாகமூட்டும் வேலையைச் செய்பவராக இருந்தால் உங்கள் வெற்றி உறுதியாகி விட்டது. தேவையான தகுதிகளை வளர்த்துக் கொள்ளுங்கள். புதிய யோசனைகள் மற்றும் திறனாய்வு சிந்தனையை வளர்த்துக் கொள்ளுங்கள். எதிலும் மோதல் வேண்டாம் உங்களுக்கான நேரம் வரும் வரை மெளனமாக காத்திருங்கள். ரிஸ்க் எடுக்க தயங்காதீர்கள், நீங்கள் செய்யும் வேலையின் மீது தீராத காதல் வேண்டும்.தெளிவான கருத்து பரிமாற்றம் அவசியம். முடிந்தால் உங்கள் தலைவரின் வேலையை சேர்த்து செய்யுங்கள்.
-மாதச் சம்பளம் வாங்கி வந்தவர் கோடீஸ்வரர் ஆக முடியும் என்பதை நிரூபித்த கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை.
"தோல்விகள் வரும்போது அவற்றுக்கான காரணங்களை ஆராயாமல் வெறுமனே அழுதுகொண்டு இருந்தால் எப்போதும் அழுது கொண்டேதான் இருக்கவேண்டும். ஒரு தொழிலை துவங்க மூலதனமாக பணம்தான் தேவை என்பர். ஆனால் அதைவிட முதல் தேவை கற்பனை வளம் தான். அதை அடுத்தே பணம். நான் என் முதல் தொழிலை எந்த விதமான மூலதனமும் இல்லாமல்தான் தொடங்கினேன்"
-ஆன்லைன் பிசினஸில் கொடிகட்டிப் பறக்கும் அலிபாபா நிறுவனர் ஜாக்மா.