Motivational Quotes for Students to Study Hard. 
Motivation

மாணவர்களுக்கான சிறந்த 20 Motivational Quotes! 

கிரி கணபதி

மோட்டிவேஷன் என்பது மாணவர்கள் தங்கள் இலக்குகளை அடைய உதவியாக இருக்கிறது. மாணவர்கள் தொடர்ச்சியாக மோட்டிவேஷன் வீடியோக்களையும், Quote-களையும் பார்ப்பது மூலமாக அவர்களால் சிறப்பாக செயல்பட முடியும் என்ற தன்னம்பிக்கை கிடைக்கிறது. உந்துதல் என்பது ஒரு செயலை செய்வதற்கு தூண்டிவிடும் எரிபொருளாகும். எனவே இந்த பதிவில் மாணவர்களுக்கு உகந்த 20 மோட்டிவேஷனல் Quote-களைப் பார்க்கலாம். 

  1. உன்னால் முடியும் என்ற நம்பிக்கை இருந்தால், எந்த தவறும் இல்லாமல் உன்னால் அதை நிச்சயம் செய்ய முடியும். 

  2. வாழ்க்கையில் வெற்றி பெற, உனது வேலையை விருப்பத்துடன் செய்ய வேண்டும். அப்போதுதான் உன்னால் மிகப்பெரிய இடத்தை அடைய முடியும்.

  3. வெற்றி என்பது இறுதியானதும் அல்ல, தோல்வி என்பது முடிவும் அல்ல.

  4. நம்மால் நேற்றை சரி செய்ய முடியாது ஆனால் நாளையை சிறப்பாக உருவாக்க முடியும்.

  5. பணம் சம்பாதியுங்கள், பொருளீட்டுங்கள், நலமாய் வாழுங்கள், ஆனால் அதற்காக எப்போதும் உங்களை மன அழுத்தத்தினால் அழித்துக் கொள்ளாதீர்கள்.

  6. வருங்காலத்தைப் பற்றிய கவலை வேண்டாம். நிகழ்காலத்தில் சிறப்பாய் செயல்பாட்டால் வருங்காலம் தன்னால் மாறும்.

  7. மகிழ்ச்சியான முகமே எப்போதும் அழகாய்த் தெரியும்.

  8. படித்தால் வாழ்க்கையை மாற்ற முடிகிறதோ இல்லையோ, உங்களின் வாழ்க்கை பற்றிய பார்வையை மாற்றலாம்.

  9. எவ்வளவு பெரிய கணக்காக இருந்தாலும் அதற்கு தீர்வு காண வழி இருக்கும்போது, உனது பிரச்சனைக்கான தீர்வுக்கும் ஏதேனும் வழி இருக்கும். 

  10. சில சமயம் வெற்றி பெறுவது கூட எளிதுதான். ஆனால் அதைத் தொடர்ந்து தக்க வைப்பதுதான் மிகக் கடினம்.

  11. உனது தோல்விக்கான காரணத்தைத் தேடுவதை நிறுத்திவிட்டு, உன் வெற்றிக்குத் தேவையான விஷயங்களைக் கண்டறிய முற்படு.

  12. எல்லோரும் பயணிக்கிறார்கள் என்பதற்காக பின் தொடராதே. உனக்கான பாதையை நீயே தேர்ந்தெடு. 

  13. வெற்றிக்கும் தோல்விக்கும் சிறு வித்தியாசம்தான். கடமையை செய்தால் வெற்றி, கடமைக்கு செய்தால் தோல்வி. 

  14. உலகத்தை மாற்ற நீங்கள் பயன்படுத்தக்கூடிய சக்தி வாய்ந்த ஆயுதம், கல்வி.

  15. இதுவரை ஒருவர் எந்தத் தவறும் செய்யவில்லை என்றால், அவர் புதிதாக எதையும் முயற்சிக்கவில்லை என அர்த்தம். 

  16. உலகில் நீங்கள் காண விரும்பும் மாற்றமாக நீங்கள் இருக்க வேண்டும். 

  17. ஒவ்வொரு நாளும் உங்களுக்குக் கிடைக்கும் இரண்டாம் வாய்ப்பு.

  18. நீங்கள் வெற்றியடைவது பற்றி கனவு காணாதீர்கள், அதற்காக உழையுங்கள்.

  19. உங்களது எதிர்காலத்தை உடனடியாக மாற்ற முடியாது, ஆனால் உங்களது பழக்கங்களை மாற்றலாம். அந்த பழக்கங்கள் உங்கள் எதிர்காலத்தை மாற்றும்.

  20. தோல்வியை விட சந்தேகம் அதிக கனவுகளைக் கொல்கிறது.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT