motivation article Image credit - pixabay
Motivation

மைசூர் சில்க்கும் மோட்டிவேஷனும்..!

வாசுதேவன்

ணம் மிகவும் சக்தி வாய்ந்த மோட்டிவேஷன் டூல் (Motivation tool) என்பதை விவரிக்கும் உண்மை நிகழ்வு.

சில வருடங்களுக்கு முன்பு குடும்பத்துடன் மைசூர் சென்றனர் அந்த நால்வரும். சுற்றிப் பார்த்துவிட்டு அப்படியே மைசூர் சில்க் புடவை வாங்க தயார் செய்யும் இடத்திற்கே சென்றார்கள்.

அங்கு புடவை வாங்கி விட்டு, அப்படியே எப்படி மைசூர் சில்க் புடவை தயார் செய்கிறார்கள் என்று பார்க்க அனுமதிப்பார்கள் என்று கேள்வி பட்டு ஆவலுடன் சென்றார்கள்.

ஆனால் அன்று தயார் செய்யும் பணி இல்லததால், அவர்களால் அதை பார்க்க முடியவில்லை.

பல வண்ண புடவைகள் பார்க்க நன்றாக இருந்தன. விலைகள் அவற்றை விட நல்லா நல்லாவே (அதிகமான விலை) இருந்தன.

அந்த குடும்பத்தின் இரண்டு பெண்மணிகள் அலசி, ஆராயந்து ஒரு மாதிரியாக ஒரு புடவையை செலக்ட் செய்து விட்டனர். விலையும் பரவாயில்லை (பட்ஜெட்டுக்குள் அமைந்தது அதிசயம்தான் )

அவர்கள் புடவை பார்த்து வாங்க செல்லும் பொழுதே, வாயிலில் ஒருவர் வந்து பேச்சுக் கொடுத்து மைசூர் சில்க் விவரம் எல்லாம் கூறினர். தான் அங்கு வேலை செய்வதாகவும் அன்று தயார் செய்யும் நிலை தறி ஓடாததால் அவருக்கு பணியில்லை என்றும் விளக்கினார். அவரது employee நம்பர் வேறு காட்டினார்.

பிறகு ஒரு உதவி முடிந்தால் செய்யுங்கள், என் மகளுக்கு படிப்பிற்கு உதவும் என்றார்.

அவர் பணம் கேட்கப் போகிறார் என்று சுதாரித்துக் கொள்ள முயன்றார் அந்த குடும்ப தலைவர்.

அதை ஊகித்துக்கொண்ட அவர் கூறினார், "எனக்கு தாங்கள் பணம் கொடுக்க வேண்டாம். நீங்கள் வாங்கப் போகும் புடவையின் பில்லில் என் பெயர், என் employee நெம்பர் எழுத அனுமதியுங்கள். நீங்கள் வாங்கும் புடவையின் விலையில் குறிப்பிட்ட சதவீதம் எனக்கு கமிஷனாக உடனுக்கு உடன் கொடுப்பார்கள். இந்த உதவியைத் தாங்கள் செய்தால், என் மகளுக்கு படிப்பு செலவிற்கு உதவும்" என்றார்.

அவர் கண்களை நேரில் பார்த்து பேசிய விதம், அவர் நேர்மையை எடுத்துக் காட்டியது.

கவுண்டரில் இருந்த வயதான அனுபவம் மிக்க சிப்பந்தியும் இங்கு வாங்க வருபவர்கள் செய்யும் இந்த மாதிரி உதவி இவர்களுக்கு நன்மை செய்கின்றது. மேலும் இந்த குறிப்பிட்ட நபர் நல்ல மனிதர், என்று வேறு எடுத்துக் கூறினார்.

புடவை வாங்கியவரும் அவர் விரும்பியபடி செய்தார்.

அப்படி அவருக்கு கிடைத்த பணத்தை அந்த நபர் கேஷியர் கையில் இருந்து பெற்ற பொழுது அவருக்கு ஆனந்தக் கண்ணீர் வந்தது.

மனதார அவர் நன்றி கூறினார். அந்த பணம் அவருக்கு உந்துதல் (motivation) அளிப்பதை கண்கூடாக கண்ட அந்த வாய்ப்பை அளித்தவருக்கு மிக்க மனநிறைவு கிடைத்தது.

பணம் இருப்பவர்களுக்கு அதன் அருமை, மதிப்பு பல சந்தர்ப்பங்களில் புலப்படுவதில்லை. பணம் உண்மையான தேவையானவர்களுக்கு, அது கையில் கிடைக்கும்பொழுது ஏற்படும் மனமகிழ்ச்சி, உந்துதல், அந்த சிக்கலான தருணங்களை அனுபவித்தவர் களுக்குதான் நன்றாகப் புரியும்.

திப்பு சுல்தானை ஆங்கிலேயரிடமிருந்து காத்த திண்டுக்கல் மலைக்கோட்டை பெருமை தெரியுமா?

இவள் இருட்டில் மட்டுமே வருவாள்! 

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

SCROLL FOR NEXT