Myths About Easy Win 
Motivation

எளிதாக வெற்றியடைய நினைப்பவரா நீங்கள்? இது உங்களுக்குதான்! 

கிரி கணபதி

உலகில் உள்ள அனைவருக்கும் வாழ்க்கையில் வெற்றி அடைய வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், பலருக்கு அந்த வெற்றி என்பது எளிதாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. சமூக ஊடகங்கள் மற்றும் விளம்பரங்களால் நமக்குள்ளே ‘எளிதான வெற்றி’ என்ற கருத்து திணிக்கப்பட்டுள்ளது. ஆனால், உண்மையில் எளிதில் வெற்றி அடைவது என்பது ஒரு மாயைதான். எந்த வெற்றியும் கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியின்றி சாத்தியமில்லை. இந்தப் பதிவில் எளிதான வெற்றி என்கிற பிம்பத்தின் பின்னால் உள்ள உண்மையை நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம். 

எளிதான வெற்றி ஒரு மாயை: சமூக ஊடகங்கள் மற்றும் விளம்பரங்களில் நாம் காணும் வெற்றிக் கதைகள் பெரும்பாலும் உண்மையான வாழ்க்கையை பிரதிபலிப்பதில்லை. அவை பெரும்பாலும் அதிகப்படியான பார்வைகள் மற்றும் லைக்ஸ்களைப் பெறுவதற்காகவே சொல்லப்படுகின்றன. அவற்றில் வெற்றியின் கவர்ச்சிகரமான பக்கங்கள் மட்டுமே காட்டப்படுகின்றன. கடின உழைப்பு மற்றும் தோல்விகள் பற்றிய மிகப்பெரிய உண்மைகள் வேண்டுமென்றே மறைக்கப்படுகின்றன. 

வெற்றிக்கு கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சி தேவை: எந்த வெற்றியும் உங்களுக்கு எளிதாககா கிடைத்துவிடாது. அவ்வாறு எளிதாக கிடைக்கும் வெற்றியானது, உங்களுக்கு மிகப்பெரிய அனுபவங்களையும், பாடங்களையும் கற்றுத் தராது. உங்கள் இலக்குகளை அடைய நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். தடைகளை எதிர்கொண்டு எல்லா தருணங்களிலும் விடாமுயற்சியுடன் செயல்பட வேண்டும். அப்போது மட்டுமே உங்களுக்கான வெற்றி கிடைக்கும். 

எளிதான திட்டங்கள் என்றும் வேலை செய்யாது: “எளிதாக பணம் சம்பாதிக்கலாம்”, “விரைவாக பணக்காரராகுங்கள்” போன்று உங்களை மதிமயக்கும் திட்டங்கள் பெரும்பாலும் மோசடியாகவே இருக்கும். உண்மையான வெற்றிக்கு நீண்டகால முயற்சி மற்றும் பொறுமை தேவை. எந்த ஒரு விஷயத்திலும் ஆழமான புரிதல் ஏற்படுத்திக் கொண்டு, அனுபவங்களைப் பெற்றால் மட்டுமே வெற்றியை நீங்கள் ருசிக்க முடியும். 

எளிதான வெற்றி உங்களை சோம்பேறியாக மாற்றும்: நீங்கள் ஒரு விஷயத்தில் கஷ்டப்பட்டு உழைத்து வெற்றியடைந்தால் மட்டுமே, அதன் முக்கியத்துவம் உங்களுக்குப் புரியும். அதற்கு மாறாக எளிதாகக் கிடைத்துவிட்டால் அந்த வெற்றியின் அருமை உங்களுக்குப் புரியாது. இதன் காரணமாக நீங்கள் சோம்பேறியாகவும், விரைவில் உற்சாகமின்றியும் மாறிவிடலாம். இதுபோன்ற எளிய வெற்றி உங்கள் இலக்குகளை அடைய தடையாக மாறிவிடலாம். 

எனவே எளிதான வெற்றி ரகசியங்களைத் தேடாமல், உங்களுக்கென குறிக்கோளை ஏற்படுத்திக் கொண்டு, அதில் முழு திறமையை வளர்த்து ஆத்மார்த்தமான வெற்றியை அடைய முயற்சி செய்யுங்கள். அதுதான் உங்களை பெருமைப்பட வைக்கும். எதுவும் எளிதாகக் கிடைத்துவிட்டால் அதற்கு மதிப்பு இருக்காது. 

இனி சிறுகோள்களில் உணவு உற்பத்தி செய்யலாம்!

உங்கள் தன்னடக்கத்தை மேம்படுத்தும் 5 வழிகள்!

வேற்று கிரக வாசிகளால் செய்யப்பட்ட சிலையா? எந்தக் கோவிலில் உள்ளது தெரியுமா?

தொடர் ஏப்பத்துக்கான காரணமும் இயற்கை வழி தீர்வும்!

ஹீரோயினுக்காக கழிவறை கழுவிய இயக்குநர்… யாருப்பா அவர்?

SCROLL FOR NEXT