motivational articles 
Motivation

இயல்பாக இருக்கப் பழகுங்கள்!

இந்திரா கோபாலன்

ஞானி ஒருவர் தன் சீடர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். கண்ணுக்கெட்டிய தூரம்வரை வெட்ட வெளியாக இருந்தது. வெயில் சுட்டெரித்தது. பசியோ அவர்களை தள்ளாட வைத்தது. தாகமோ தொண்டையை வறட்டியது. நாள் முழுதும் இப்படியே கழிந்தது. மாலையில் ஒரு விசாலமான மரம் தெரிய சீடர்களின் மனநிலை அறிந்த குரு இரவை இங்கேயே கழிப்போம் என்றார். மறுகணமே அனைவரும் அங்கேயே சுருண்டு படுத்துவிட்டனர்.

உறங்குவதற்கு முன் இறைவனுக்கு நன்றி சொல்ல "இறைவா, இன்று தாங்கள் அளித்த அத்தனைக்கும் நன்றி" என்றார். ஒரு சீடன் குருவே இறைவன் நமக்கு இன்று எதுவும் தரவில்லையே என்றான். குரு புன்னகையுடன் "யாரப்பா சொன்னது? இறைவன் அத்புத பசியை அளித்தார். தாகத்தை அளித்தார். அதற்குத்தான் நன்றி" என்றார். இது தான் உலகம் போற்றும் ஞானம்.

நம் அன்றாட வாழ்வில் நாம் எண்ணற்ற உதாரணங்கள் காண முடியும். நம்மைச் சேர்ந்த ஒருவன் வெற்றி பெற்றால் நமது மனம் கொண்டாடுகிறது. அதை முக்கியப்படுத்தி பேசுவோம். அதே சமயம் அவனிடம் தீயபழக்கமோ பிரச்னையோ இருந்தால் பேசக்கூட விரும்ப மாட்டோம்.

ஒருவன் சென்னையில் விமானம் ஏறுகிறார். சிலமணி நேரங்களில் லண்டன் சென்றடைகிறான். அதேசமயம் ஒரு பறவை விண்ணில் பறந்து லண்டனை அடைகிறது. நான் பறவையைப்போல பறந்து லண்டனை அடைந்தேன் என்று இவன் கூற முடியுமா.? விமானம் பறந்தது உண்மை. ஆனால் நிஜமான பறத்தல் அனுபவம் அவனிடம் இல்லை. அந்த விமானம் போன்றவர்கள்தான் நாம். அந்தப் பறவையைப் போன்றவர்கள் ஞானிகள். ஞானிகள் வாழ்வின் பயணத்திலும் சரி, ஆன்மாவின் பயணத்திலும் சரி, பூரண விழிப்புணர்ச்சியுடன் இருக்கிறார்கள். அவர்ளிடம் தனிப்பட்ட விருப்பங்கள் இல்லாததால் அவர்கள் எதையுமே நிர்ணயிக்க விரும்புவதில்லை. ஆனால் அந்த ஆற்றல் அவர்களுக்கு உண்டு.

வாழ்க்கை என்பது புரிதலுக்கும், தெளிவிற்குமான ஒரு வரம். பிறரிடம் கேட்பதை விடவும், நூல்கள் படிப்பதை விடவும்,பலரது வாழ்வை கண்ணால் காண்பதை விடவும் நீயே அனுபவிப்பது மூலம்தான் தெரிந்து கொள்ள முடியும். இறைவனை அறிய வேண்டுமென்றால் நீ பிறந்தாக வேண்டும் வாழ்ந்து கொண்டிருப்பவன் மட்டுமே இறைவனை உணர முடியும். கடலிலிருந்த மேகமாக பொழிந்து மழை நதியாக ஓடும்போது ஆவேசமாக குதிது அது தவழ்ந்து ஓடுகிறது.‌ அது கடலில் சங்கமித்து விட்டால்  அதன்பிறகு ஒன்றும் இல்லை. 

ஆனால் மேகமாகி, மழையாகி, நதியாக உருவெடுத்த பின்னரே  கடலில் சென்று சேருகிறது. அத்தகைய பயணமே கடலை உணரும் பக்குவத்தையும் உண்டுபண்ணுகிறது. மனிதனுக்கு சிந்திக்கும் திறன் இல்லாவிட்டால் இறை உணர்வு அவனிடம் எப்படி சேரும். மனிதனுக்கு துயரங்களே இல்லாவிட்டால் இறைவனை நாட வேண்டிய அவசியம் ஏது?. 

வாழ்க்கை ஒரு நதியின் பிரவாகம் போன்றது. மலையில் பிறந்த நதி கடலில் முடிவைப்போல் கருவறையில் பிறந்த வாழ்வு கல்லறையில் முடிகிறது. இதில் எத்தனையோ மேடு பள்ளங்கள், போராட்டங்கள். அத்தனை ரணங்களையும், அப்படியே ஏற்றுக்கொள் என்கிறது சூஃபி ஞானம். வாழ்க்கையை அதன் போக்கில் அப்படியே ஏற்றுக்கொள். எதையும் திணிக்காதே. எதையும் மறுக்காதே. இயல்பை இயல்பு என உணர்ந்து அதை இயல்போடு ஏற்றுக்கொண்டால்  மனநிறைவு கிடைக்கும்.

வயிற்றுக்குள் 'கடமுட' ஓசை அடிக்கடி கேட்கிறதா? வாழை இலையில் உணவு உண்பது உதவுமே!

இயற்கையின் சீற்றம் - காட்டுத்தீக் காரணங்கள் - கட்டுப்படுத்த என்ன செய்யலாம்?

தென்னையின் சிறப்புகள் பற்றித் தெரியுமா குட்டீஸ்..!

தோல்வி தரும் சவால்களை எதிர்கொள்வதே வெற்றி!

இன்றைய தலைமுறையினரை ஆட்டிவைக்கும் ஸ்மார்ட் போன்களின் 'தாத்தா'வுக்கு வயது 30!

SCROLL FOR NEXT