Motivation article Image credit - pixabay
Motivation

வெற்றிக்கு எழுச்சி மிக்க புத்தகங்களைப் படியுங்கள்!

இந்திரா கோபாலன்

ன்றைய காலக்கட்டத்தில்  தகவல்கள் எல்லா வடிவத்திலும்  வந்து கொண்டே இருக்கிறது. எதைப் படிப்பது எதை  படிக்க வேண்டாம் என்ற சிந்தை தெளிவு பெறுவது கடினமாக இருக்கிறது. எதைப் படிக்கிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள். உங்கள் மனதிற்கும், கொள்கைகளுக்கும்  எழுச்சியூட்டும் புத்தகங்களைக் கண்டறிந்து அவற்றை உற்ற நண்பனாக்கிக் கொள்ளுங்கள். சமூக வலைதளங்கள் மூலம் வரும் எண்ணற்ற தகவல்கள்  நேரத்தை விரயம் செய்கிறது. 

புத்தகங்களை ஏற்கனவே  படித்தவர்களின் கருத்தைக் கேட்டும், அப்புத்தகங்களின் தேவையை உணர்ந்தும் புத்தகங்களைத் தேர்வு செய்யவேண்டும். படிப்பதால் உங்கள் மனம் புதுப்புது எண்ணங்களால்  நிரம்பும், உங்களை புதுப்புது செயல்களில் ஈடுபடுத்தும், உங்களை சாதிக்க வைக்கும். உங்கள் எண்ணங்கள் உயர்வடைவதைக் காண்பீர்கள். 

புத்தகங்களை வாசிப்பதற்கும், படிப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.  வாசிக்கும் உகந்த கருத்துக்களை மனதில் ஏற்றி  வாழ்க்கையை  முறையாக மாற்றும்போது அது படிப்பினையாக இருக்கும். வெறுமனே புத்தகங்கள்  வாசித்தால் அவற்றால் எந்த பலனும் இல்லை. வளர்ச்சிக்கு உதவும் கருத்துக்களை குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள். சிந்தியுங்கள். செயல்படுத்துங்கள்.  அப்போதுதான் கற்றதனால் பெற்ற அறிவு நிறைவுபெறும். எந்த சுழலில்  ஒரு குறிப்பிட்ட கருத்து  பயனுள்ளதாக இருக்கும் என்பது  புத்தகம் படிக்கும்போது தெரியாது. உயர்ந்த கருத்துக்களை உள்வாங்கும்போது, அவை தகுந்த தருணத்தில் பலனைத்தரும்.

இராக் நாட்டின் அதிபராக இருந்த சதாம் உசேன்  அமெரிக்கப் படைகளால் சிறை பிடிக்கப்பட்டார்.  அவரது மனநிலையை அறிய  உளவியல் நிபுணர்கள் எவ்வளவோ முயற்சித்தும். அறியமுடியவில்லை. அவரை தூக்கிலிடுவது உறுதியாகிவிட்ட நிலையில் அவரிடம்  ஏதேனும் படிக்க விரும்புகிறீர்களா என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் ஹெமிங்வேயின் "கிழவனும் கடலும்" புத்தகத்தைக் கேட்டபோது உளவியல் நிபுணர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சுறாவுடன் இறுதிவரை போராடும் கிழவன் குறித்த அந்தக்கதை, அமெரிக்காவுடன் இறுதிவரை போராடுவதற்கான மன வலிமையைத் தரும் என அவர் நம்பியதைத்தான் உணர்த்துகிறது. 

எழுச்சியூட்டும் புத்தகங்கள் உங்களைக் கனவு காண வைக்கும். கவனமாகத் தேர்ந்தெடுக்கப்படும் வார்த்தைகள்  எத்தகைய தடைகளையும் தகர்த்தெறியும் சக்தி பெற்றுள்ளன.

"அரிய அறிவைப் பெற்றுள்ள நபரைச் சந்தித்தால்  அவர் என்ன புத்தகத்தைப் படிக்கிறார் என்பதை அவரிடம் கேட்க வேண்டும்" என்று ரால்ஃப் வால்டோ எமர்சன் கூறுகிறார். புத்தகங்களின் பக்கங்களைப் புரட்டப் புரட்ட மனதில் நம்பிக்கை ஒளிவீசும். வெற்றிக்குப் தேவையான நடவடிக்கைகளை எடுக்க இப்பக்கங்கள் உங்களைத் தூண்டும்.

பொங்கி வரும் கோபத்தை புஸ்வானமாக்க சில யோசனைகள்!

கவனத்தை கவனத்தோடு கையாளுங்கள்!

உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டியதன் அவசியத்தை அறிந்துக் கொள்வோம்!

பேச்சுத் திணறல் காரணங்களும் அவற்றை எதிர்கொள்ளும் விதங்களும்!

இனி சிறுகோள்களில் உணவு உற்பத்தி செய்யலாம்!

SCROLL FOR NEXT